டி20 உலகின் சிறந்த பேட்ஸ்மேன் வரிசையில் யுவராஜ் சிங்கின் பெயர் அச்செழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. 2007 உலக டி20 கோப்பையில் ஸ்டுவர்ட் பிராட் ஓவரில் 6 பந்துகளில் தொடர்ந்து 6 சிக்ஸர்களை விளாசினார் யுவராஜ் சிங். இதுவே இவரது அதிரடி பேட்டிங்கிற்கு சாட்சியாகும். இவரது பயமறியா பேட்டிங் மற்றும் அனைத்து பந்துகளையும் பவுண்டரி லைனிற்கு விரட்டும் தனித்தன்மை ரசிகர்களை பெருதும் அடிமை படுத்தி வைத்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கில் இவரது பயமறியா சிறப்பான பேட்டிங்கை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். ஐபிஎல் தொடக்க ஆண்டான 2008 முதல் தற்போது வரை ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறார். யுவராஜ் சிங் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அந்த ஐபிஎல் சீசனில் 15 போட்டிகளில் பங்கேற்று 299 ரன்களை விளாசித்தள்ளினார்.
யுவராஜ் சிங் 2019ற்கு முன்பு வரை ஐபிஎல் தொடரில் 5 அணிகளில் விளையாடியுள்ளார் (கிங்ஸ் XI பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் இந்தியா, சன் ரைசர்ஸ் ஹைதராபாத்). 2019 ஐபிஎல் சீசனில் 6 வது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். யுவராஜ் சிங் 2008 முதல் 2018 வரை விளையாடி 2652 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 82 ரன்களை ஐபிஎல்-லில் குவித்துள்ளார்.
இவர் பேட்டிங் மட்டுமல்லாமல் பௌலிங்கிலும் அசத்தியுள்ளார். இதுவரை 32 விக்கெட்டுகளை ஐபிஎல் தொடரில் வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 22 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
நாம் இங்கு ஐபிஎல் வரலாற்றில் யுவராஜ் சிங்கின் சிறந்த 3 பேட்டிங்கை காண்போம்.
#66*(32) vs டெல்லி டேர்டெவில்ஸ், 2011
கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் யுவராஜ் சிங் விளையாடிய இரண்டாவது அணி புனே வாரியர்ஸ் இந்தியா. இந்த அணியில் யுவராஜ் சிங்கின் சிறந்த இன்னிங்ஸ் 16வது போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக வந்தது. முதலில் பேட் செய்த புனே வாரியர்ஸ் இந்தியா அணி யுவராஜ் சிங்கின் அதிவேக ரன் குவிப்பால் 187 என்ற பெரிய இலக்கு டெல்லி அணிக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நான்காவதாக களமிறங்கிய யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன்களை குவித்தார். இவர் 32 பந்துகளை எதிர்கொண்டு 206.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 66 ரன்களை குவித்தார். இந்த இன்னிங்ஸில் இவர் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிகஸர்களை குவித்தார். ஆனால் இப்போட்டி டெல்லி அணிக்கு சாதகமாக அமைந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
#70(41) Vs டெல்லி டேர்டெவில்ஸ் , 2017
யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் வந்துள்ளன. அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டு மீண்டு வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனாலும் இன்றளவும் அவரது சிறப்பான ஆட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு வருடமும் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி கொண்டுதான் உள்ளார்.
கேன்ஸரிலிருந்து மீண்டு வந்த பிறகு தனது ஆட்டத்திறனை 2017 ஐபிஎல் தொடரில் நிருபித்தார். அந்த ஐபிஎல் சீசனில் யுவராஜ் சிங் சன் ரைசர்ஸ் ஹதராபாத் அணிக்காக விளையாடினார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 41 பந்துகளில் 70 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இன்னிங்ஸில் மெதுவாக சென்று கொண்டிருந்த ரன்களை யுவராஜ் சிங் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 185 ரன்கள் வரை கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இந்த போட்டியையும் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
#83 (38) Vs ராஜஸ்தான் ராயல்ஸ் , 2014
2014 ஐபிஎல் சீசன் யுவராஜ் சிங்கிற்கு சிறப்பாக அமைந்தது என்றே சொல்லலாம். தனது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக யுவராஜ் சிங் சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டார்.
இந்த போட்டி 2014 ஐபிஎல் தொடரில் 35வது போட்டியாகும். பெங்களுரு மற்றும் ராஜஸ்தான் மோதிய இப்போட்டியில் பெங்களுரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். யுவராஜ் சிங்கின் அதிரடி ஆட்டத்தால் பெங்களுரு அணி 190 ரன்கள் குவித்தது. எதிரணி பௌலர்களின் பந்துவீச்சை ஒவ்வொரு ஓவரிலும் துவம்சம் செய்து 38 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். இப்போட்டியில் யுவராஜ் சிங் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை அடித்தார்.