ஐ.பி.எல். தொடரை-ஐ அருகில் வைத்துக்கொண்டு யுவராஜ் சிங் ஆடிய அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி தன் மேல் அவநம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு உறுதியான செய்தியை வழங்கியுள்ளார்.
அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி தன் மேல் அவநம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு உறுதியான செய்தியை வழங்கியுள்ளார்.

இன்று நடைபெற்ற Dy Patil டி20 போட்டி தொடரின் எயார் இந்தியா மற்றும் மும்பை கஸ்டம்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டின் போது இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தனது வழமையான அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி தன் மேல் அவநம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு உறுதியான செய்தியை வழங்கியுள்ளார்.

யுவராஜ் சிங் 57 பந்துகளுக்கு 80 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார் . இதில் 7 நான்கு ஓட்டங்களும் , 4 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்குகிறது.
யுவராஜ் சிங் 57 பந்துகளுக்கு 80 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார் . இதில் 7 நான்கு ஓட்டங்களும் , 4 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்குகிறது.

DY Patil டி20 போட்டி தொடரின் 14வது போட்டியாக இன்று நடைபெற்ற எயார் இந்தியா மற்றும் மும்பை கஸ்டம்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது யுவராஜ் சிங் 57 பந்துகளுக்கு 80 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார் . இதில் 7 நான்கு ஓட்டங்களும் , 4 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்குகிறது.

எயார் இந்தியா அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் களத்திக்கு வந்த யுவராஜ் சிங் தனது அணியை 20 ஓவர்கள் முடிவில் 169 என்ற ஒரு உயரமான எல்லைக்கு இட்டுச்சென்றார். இதில் அவர் இரு 50 பார்ட்னெர்ஷிப் பால் வல்தாட்டி மற்றும் சுஜீட் நயக் உடன் இணைத்து பெற்றிருந்தார் அவை முறையே 51 மற்றும் 88 ஆகும்.

யுவராஜ் சிங் சிறப்பாக விளையாடியிருந்தும் எயார் இந்தியா அணியால் இப்போட்டியில் வெல்ல முடியவில்லை. இறுதி ஓவரில் வெறும் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து தமது வெற்றி இலக்கை மும்பை கஸ்டம்ஸ் அணி இலகுவாக பெற்றது.

பின்னணி

இறுதியாக யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 2017 ம் ஆண்டு ஜூன் மாதம் விளையாடியிருந்தார். அதன் பின் அவர் அவர் பெரிதாக எந்த போட்டியிலும் சோபிக்கவில்லை. இறுதியாக நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போது கிங்ஸ் Xl பஞ்சாப்அணிக்கு விளையாடுவதற்கு தேர்வு செய்யபட்டிருந்தார். இதில் யுவராஜ் சிங் வெறும் 8 போட்டிகளில் மாத்திரம் விளையாடி இருந்தார். இதன் போது பெரிதாக சோபிக்க தவறிய இவரை கிங்ஸ் Xl பஞ்சாப் அணி கைவிட்டது. ஐ.பி.எல் ஏலத்திக்கு விடப்பட்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கோடிக்கு தனது அணிக்காக யுவராஜ் சிங் ஐ விலைகொடுத்து வாங்க முன்வந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கோடிக்கு தனது அணிக்காக யுவராஜ் சிங் ஐ விலைகொடுத்து வாங்க முன்வந்தது.

ஆரம்ப கட்ட ஐ.பி.எல். ஏலத்தின் போது எந்த அணியும் யுவராஜ் சிங்கை விலைக்கு வாங்க முன் வரவில்லை . இது ஒரு ஆபத்தாகவே கருதப்பட்டது யுவராஜ் சிங் இன் ஐ.பி.எல் வாழ்கையை முடித்துவிடும் என அஞ்சப்பட்டது. இருப்பினும் இறுதியில் 3 முறை ஐ.பி.எல் சாம்பியன் மகுடத்தை சூடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கோடிக்கு தனது அணிக்காக யுவராஜ் சிங்-ஐ விலைகொடுத்து வாங்க முன்வந்தது. இன்று விளையாடிய சிறப்பான ஆட்டத்தினை ஐ.பி.எல் போட்டி வரை கொண்டுசென்று சிறப்பாக ஆட யுவராஜ் சிங் எதிர்பார்க்கிறார்.

அடுத்து என்ன

தனது கிரிக்கெட் பயணத்தின் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் யுவராஜ் சிங் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பது என்பது ஒரு இலகுவான விடயம் அல்ல. தனக்கு இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணியில் கிடைத்திருக்கும் ஐ.பி.எல் வாய்ப்பை எவ்வாறு பயன் படுத்துவார் என்பதிலே அவரின் கிரிக்கெட் எதிர்காலம் தங்கியிருக்கிறது.

Quick Links

App download animated image Get the free App now