யுவராஜ் சிங் முதல் ஆரோன் பின்ச் வரை.. கூன்டோடு வெளியேற்றிய  பஞ்சாப்!

யுவராஜ் சிங் மீண்டும் பார்மிற்கு வருவது அவருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது
யுவராஜ் சிங் மீண்டும் பார்மிற்கு வருவது அவருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது

ஐபிஎல் ஏலம் நெருங்க நெருங்க ஒவ்வொரு அணியும் தங்கள் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்கொண்டு சிக்கனமாக வீரர்களை வெளியேற்றி வரும் வேளையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதன் ரசிகர்கள் தலையில் பெரும் இடியை இறக்கி வைத்துள்ளது. ஒவ்வொரு அணியும் சென்ற வருடம் எப்படி ஆடினோம், என்பதைப் வைத்து வீரர்களை மாற்றியும் வீரர்களை வெளியேற்றியும் வரும் இந்த வேளையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தன்னிடம் இருக்கும் பல முக்கிய வீரர்களைக் கூண்டோடு வெளியேற்றியுள்ளது.

சென்ற வருடம் ஏலத்தில் எடுத்த 20 வீரர்களில் 9 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு மீதமுள்ள 11 வீரர்களை ஒட்டுமொத்தமாகப் பஞ்சாப் நிர்வாகம் கப்பல்லேற்றியுள்ளது. இதில் பெரிய வீரர், சிறிய வீரர், திறமையான வீரர், இளம் வீரர் என்ற எந்த ஒரு பாரபட்சம் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு நன்றாக ஆடாதவர்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பியுள்ளது. இவர்களில் ஆஸ்திரேலியாவின் கேப்டன், அதிரடி வீரர் ஆரோன் பின்ச், இந்தியாவின் இளம் வீரர் அக்சர் பட்டேல், அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மா, அதிரடியான ஆல்ரவுண்டர் ஜாம்பவான் யுவராஜ்சிங், மனோஜ் திவாரி ஆகிய முக்கிய வீரர்களும் அடங்குவர்.

சொல்லப்போனால் அக்சர் பட்டேலை சென்ற வருடம் ஏலத்திற்கு முன்னதாகப் பஞ்சாப் அணி தக்கவைத்தது. சென்ற வருடம் பஞ்சாப் அணி தக்கவைத்த ஒரே ஒரு வீரர் அவர் மட்டுமே. அதன் பின்னர் ஆரோன் பின்ச் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரை ஏலத்தில் எடுத்தது..

சென்றவருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையில் களமிறங்கியது. மொத்தம் நடந்த 14 போட்டிகளில் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த அணிக்காக கிறிஸ் கெய்ல் லோகேஷ் ராகுல் மற்றும் கருண் நாயர் ஆகிய மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே நன்றாக ஆடினார். இதில் ஆரோன் பின்ச் 10 போட்டியில் விளையாடி வெறும் 134 ரன்கள் மட்டுமே அடித்தார்.

8 போட்டிகளில் 65 ரன் என்பது யுவராஜின் மோசமான ஐபிஎல் செயல்பாடாகும்
8 போட்டிகளில் 65 ரன் என்பது யுவராஜின் மோசமான ஐபிஎல் செயல்பாடாகும்

சென்ற வருடம் யுவராஜ் சிங்கின் ஆட்டத்தைப் பார்த்து மிகவும் அவரது தீவிர ரசிகன் கூட டென்சன் ஆகி இருப்பான். அவர் 8 போட்டிகளில் ஆடி வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனைப் பார்க்கும்போது அணி நிர்வாகம் இருவரையும் வெளியேற்றியது சரிதான் என்று தோன்றுகிறது.

மறுபுறம் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் 9 போட்டிகளில் ஆடி 80 ரன்களும் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். வேறு வழியின்றி அவரையும் வெளியேற்றியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது பஞ்சாப் அணி. மற்றபடி மனோஜ் திவாரி மோகித் சர்மா போன்றவர்கள் வருடாவருடம் அணி மாறிக்கொண்டே இருக்கும் வீரர்களாவர்.

தக்க வைக்கப் பட்ட வீரர்களைப் பார்த்தால் அந்த அணி மிகவும் வலுவான அணியாக உள்ளது. லோகேஷ் ராகுல், கிரிஸ் கெய்ல், மயான்க் அகர்வால் என பேட்டிங்கில் பட்டையைக் கிளப்ப அந்த மூவரும் உள்ளனர். பந்துவீச்சில் அம்சம் செய்ய ஆன்ட்ரு டை, முஜீப் உர் ரஹ்மான், அஸ்வின் என ஒரு மிரட்டும் யூனிட்டே உள்ளது. இதுபோக தனது முன்னாள் வீரர் மந்தீப் சிங்கை மார்கஸ் ஸ்டோய்னிசை வைத்து வாங்கியுள்ளது பஞ்சாப்.

பஞ்சாபின் பந்து வீச்சு யுனிட் எப்போதும் அசுர பலத்துடனேயே உள்ளது
பஞ்சாபின் பந்து வீச்சு யுனிட் எப்போதும் அசுர பலத்துடனேயே உள்ளது

மொத்தமாகப் பார்த்தால் முன்னணி வீரர்களைப் பஞ்சாப் அணி வெளியேறிவிட்டது என்று தான் ரசிகர்கள் அனைவருக்கும் தோன்றுகிறது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் அவர்கள் சரியாக ஆடவில்லை, ஆகவே வேறு நல்ல வீரர்களை எடுப்பதற்காக வீட்டிற்கு அனுப்பி உள்ளது என்றே தெரிகிறது. சரியான ரிசல்ட் இல்லை என்று விரேந்திர சேவாக்கையே பணியிலிருந்து நீக்கிய பஞ்சாப் அணி நிர்வாகத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். பொருத்திருந்து பார்ப்போம், பஞ்சாப் அணி இவ்வளவு பெரிய படுபாதகத்தை செய்து விட்டு எந்தச் சீமையிலிருந்து வீரர்களை இறக்கும் என...

App download animated image Get the free App now