"குளோபல் டி20 கனடா" தொடரின் இரண்டாவது சீசனில் டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங். ஒரு மாதத்திற்கு முன்னர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், யுவராஜ் சிங். 17 ஆண்டுகளாக இந்திய அணியின் முக்கிய தூணாக விளங்கி வந்த யுவராஜ் சிங், திடீரென தனது ஓய்வினை அறிவித்திருந்தார். சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு பதிலாக ஐசிசி அங்கீகரிக்கப்பட்டு வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 தொடரில் தொடர்ந்து விளையாடுவதற்கு யுவராஜ் சிங் ஆர்வம் காட்டியதாக தெரிகிறது.
தான் ஓய்வு அளித்த வேலையில், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதை விரும்புவதாக கூறினார். சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடர்களில் விளையாடுவதை காட்டிலும் இது போன்ற வெளிநாட்டு இரண்டு போட்டிகளில் விளையாடுவதாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டது, குளோபல் டி20 கனடா தொடர். இதனையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த தொடர் நடைபெற்றது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் ஒவ்வொரு அணியிலும் தலா நான்கு கனடா வீரர்களும் அணிகளில் இடம் பெற்றிருந்தனர்.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் உட்பட பல்வேறு சர்வதேச வீரர்கள் இந்த முதலாவது டி20 தொடரில் பங்கேற்றனர். இத்தகைய முக்கியமாக இந்த முதலாவது தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது வான்கோவர் நைட்ஸ் அணி. எனவே, தனது இரண்டாவது சீசனில் தொடங்க உள்ள இந்த தொடர், அடுத்த மாதம் 25ஆம் தேதி துவங்கியிருக்கிறது. இதன்படி, இன்று நடைபெற்ற வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங் இடம் பெற்றார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், அந்த தொடரின் அதிகாரபூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டி20 போட்டிகளில் சிறந்து விளங்கி வரும் "யுனிவர்சல் பாஸ்" கிறிஸ் கெயில், கிறிஸ் லின், கனே வில்லியம்சன், ஜே.பி.டூமினி, பிரண்டன் மெக்கலம், டேரன் சேமி மற்றும் ஜார்ஜ் பெய்லி போன்ற வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளனர். இந்தியாவிலிருந்து வீரர் ஒருவர் இதுபோன்ற டி20 தொடர்களில் பங்கு இருப்பது மிகவும் அரிதாக உள்ளது. பெரிதும் பிரபலமான யுவராஜ் சிங், தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கில் இந்தத் தொடரில் விளையாட உள்ளார். உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு தொடங்கும் இந்த தொடர் ஜூலை 25 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.