ஐபிஎல் 2019 : ஹெலிகாப்டர் ஷாட் விளாச முயற்சித்த யுவராஜ் சிங்

Yuvraj Singh of Mumbai Indians
Yuvraj Singh of Mumbai Indians

நடந்தது என்ன?

2019 ஐபிஎல் தொடருக்கு முன் யுவராஜ் சிங் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இந்த தொடரில் அவ்வளவாக சோபிக்கவில்லை. எதிரணி பந்துவீச்சில் மிகவும் தடுமாறி வருகிறார். யுவராஜ் சிங் இந்த தொடரில் மொத்தமாக 18.25 சராசரி மற்றும் 112 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 73 ரன்களை மட்டுமே குவித்தார். இந்த சீசனில் யுவராஜ் சிங்கின் சிறப்பான அதிரடி ஆட்டம் ரயில்வே அணிக்கு எதிராக வந்தது. இவர் இப்போட்டியில் 15 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 26 ரன்களை விளாசினார்.

யுவராஜ் சிங் 2019 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான வலைபயிற்சியில் இவர் தற்போது ஈடுபட்டுள்ளார். இந்த பயிற்சியில் மகேந்திர சிங் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்-டை யுவராஜ் சிங் அடிக்க முயற்சித்தார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரால் வீசப்பட்ட பந்தை இவர் பேட் கொண்டு ஹெலிகாப்டர் ஷாட் அடித்ததில் இடதுபுற மூலையில் பந்து சென்றது.

பிண்ணனி

அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். 2017ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் மோசமாக விளையாடியதால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். இவருக்கு தற்போது 37 வயது ஆகிறது. கிட்டத்தட்ட தன்னுடைய கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வு பெறும் வயதில் உள்ளார். இருப்பினும் மீண்டும் தன்னுடைய பழைய ஆட்டத்திறனை வெளிக்கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.

மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்று தன்னுடைய இறுதி ஆட்டத்தை இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்னும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். யுவராஜ் சிங்-கிற்கு ஒரு அற்புதமான வாய்ப்பாக 2019 ஐபிஎல் தொடர் அமைந்துள்ளது. இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த சீசனில் விளையாடவுள்ளார்.

கதைக்கரு

கடந்த வருட ஐபிஎல் சீசனில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக களமிறங்கினார். தன்னுடைய சொந்த மாநில அணியில் இவரது ஆட்டத்திறன் மிகவும் மோசமாக இருந்தது. 8 போட்டிகளில் விளையாடி 11 சராசரியுடன் 65 ரன்களை மட்டுமே குவித்தார். இவரது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டான 89, கடந்த ஐபிஎல் தொடரில் யுவராஜ் சிங்கின் ஸ்ட்ரைக் ரேட்டாகும்.

இதனால் பஞ்சாப் அணி நிர்வாகம் யுவராஜ் சிங்கை அணியிலிருந்து நீக்கினர். 2019 ஐபிஎல் ஏலத்தில் முதலில் யாரும் இவரை ஏலத்தில் வாங்கவில்லை. இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிபடுத்தி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்ற நோக்கில் பயிற்சி எடுத்து வருகிறார் யுவராஜ் சிங். இவர் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிபடுத்தினால் இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு இடம் காத்துக் கொண்டுள்ளது. ஆல்-ரவுண்டரான இவர் ஃபிட்னஸில் சிறந்து விளங்குகிறார்.

அடுத்தது என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும் XI-ல் யுவராஜ் சிங் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. அணியில் மிடில் ஆர்டரில் இவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அணி நிர்வாகம் இவரது அனுபவ ஆட்டத்திறனை முழுவதும் நம்பியுள்ளது.

அதே சமயத்தில் யுவராஜ் சிங்கிற்கு ஐபிஎல் தொடரில் அளிக்கப்படும் கடைசி வாய்ப்பு இதுவாகும். பெரும்பாலும் ஐபிஎல் அணிகள் வீரர்களின் ஆட்டத்திறனை அதிகம் எதிர்பார்க்கிறது. இந்த வாய்ப்பை இவர் பயன்படுத்தி கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுவராஜ் சிங் ஹெலிகாப்டர் ஷாட் விளாசிய காணொளி பதிவு :

youtube-cover

Quick Links