ஜூவெண்டஸ் அணியின் அடுத்த பயிற்சியாளராக யார் வரப்போகிறார்கள்?

Jose Mourinho
Jose Mourinho

அடுத்த சீசனுக்குள்ளாக தங்கள் அணிக்கு புதிய மற்றும் இளம் தோற்றத்தை அளிக்கும் விதமாக மறுகட்டுமானம் செய்யும் பணியில் மும்முரமாக உள்ளது ஜூவெண்டஸ் அணி. இந்நிலையில், அணியின் பயிற்சியாளர் மேக்ஸ் அலெக்ரி விலகியுள்ளதால், புதிய பயிற்சியாளரை தேடியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஜூவெண்டஸ்.

2014-ம் ஆண்டு ஜூவெண்டஸ் பயிற்சியாளராக மேக்ஸ் அலெக்ரி நியமிக்கப்பட்டதிலிருந்து ஐந்து உள்நாட்டு கோப்பைகள், 4 கோப்பா இடாலியாஸ் கோப்பைகள் ஆகியவற்றை வென்றதோடு இருமுறை சாம்பியஸ் லீக் இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. ஐரோப்பாவில் தங்கள் அணியை வெற்றி பெறச் செய்யக் கூடிய பயிற்சியாளரை தேடி வருகிறது ஜூவெண்டஸ். ஏனென்றால், சம்பியன்ஸ் லீக் கோப்பையை ஜூவெண்டஸ் அணி வென்று 23 வருடம் ஆகிறது.

சிமோன் இன்சாகி அல்லது மவுரிசியோ சாரி பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்கள் என இத்தாலிய பத்திரிக்கைகள் கூறுகின்றன. ஆனால், ஜோஸ் மவுரினோ பயிற்சியாளராக வர வேண்டும் என விரும்புகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்த மூவரில் யார் ஜூவெண்டஸ் அணிக்கு பயிற்சியாளர் ஆவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதற்கு முன், இந்த மூவர் குறித்தும் சில விவரங்களை நாங்கள் தருகிறோம்…

3. ஜோஸ் மவுரினோ

ஏற்கனவே இத்தாலிய அணியான இண்டர் மிலனுக்கு 2009/10 சீசனில் பயிற்சியாளராக இருந்துள்ளார் மவுரினோ. அதன் பிறகு ரியல் மாட்ரிட், செல்சீ மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் போன்ற உலகின் பிரபலமான அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். 2018-ம் ஆண்டு மான்செஸ்டர் அணி மோசமாக விளையாடியதால் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மவுரினோ, அதன் பிறகு எந்தவொரு அணிக்கும் பயிற்சியாளராக செல்லவில்லை.

போட்டியில் தடுப்பாட்டமும் தாக்குதலும் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக 4-2-3-1 என்ற வடிவத்தையே எப்போதும் விரும்புவார் மவுரினோ. ஆரோன் ராம்சே, ரோட்ரிகோ பெண்டான்குர் மற்றும் மிரலெம் ஜானிக் போன்ற வீரர்கள் இருப்பதால், மவுரினோவின் எதிர் தாக்குதல் தத்துவத்திற்கு ஏற்ப ஜுவெண்டஸ் அணியால் சிறந்த நடுகளத்தை உருவாக்க முடியும். மவுரினோவின் முறைகளுக்கு ஏற்கனவே ரொனால்டோ பழக்கப்பட்டுள்ளதால் இது அணிக்கு நல்ல பலனை தரும்.

2. மவுரிசியோ சாரி

Maurizio Sarri
Maurizio Sarri

எம்போலி மற்றும் நபோலி அணியின் பயிற்சியாளரக இருந்தபோதே இவர் வெளிச்சத்திற்கு வந்தார். இவர் பயிற்சியாளராக இருந்த சமயத்தில் நபோலி அணி ஜுவெண்டஸ் அணிக்கு கடும் சவால் கொடுத்தது. அதன் பிறகு செல்சீ அணிக்கு பயிற்சியாளராக சென்று, கடும் சர்சைக்கு இடையிலேயும் அந்த அணியை ப்ரீமியர் லீக்கில் மூன்றாவது இடம் பிடிக்க வைத்ததோடு இந்த மாதை இறுதியில் நடைபெறவுள்ள ஐரோப்பா லீக் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற வைத்துள்ளார்.

செல்சீ அணியின் பயிற்சியாளரக பிராங் லாம்பார்ட் நியமிக்கப்படலாம் என்ற வதந்தி நிலவுவதால், ஜூவெண்டஸ் அணிக்கு இவர் பயிற்சியாளர் ஆவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. இவரது உன்னிப்பான அணுகுமுறையும், கவனமும், திட்டம் வகுக்கும் திறனும் இவரை சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக ஆக்குகிறது. இவரது உற்சாகமான, தாக்குதல் பாணி ஆட்டம் நிச்சியம் ஜூவெண்டஸ் அணிக்கு பல அதிசியங்களை கொடுக்கும்.

1. சிமோன் இன்சாகி

Simone Inzaghi
Simone Inzaghi

ஜூவெண்டஸ் அணிக்கு பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பு இவருக்கே அதிகமுள்ளது. கடந்த வாரம் இவரை ஜுவெண்டஸ் அணியின் இயக்குனர் ஃபேபியோ சந்தித்துள்ளார். அப்போது ஜூவெண்டஸ் பயிற்சியாளர் பதவியை ஏற்க சிமோன் இன்சாகி சம்மதம் தெரிவித்துள்ளதாக இத்தாலிய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. இந்த ஆண்டுக்கான கோப்பா இத்தாலிக்கா கோப்பையை இவர் பயிற்சியாளராக இருக்கும் லேஜியோ அணியே வென்றது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அடுத்த சீசனுக்கு இவரை தங்கள் பயிற்சியாளராக நியமனம் செய்ய விருப்பத்தில் உள்ளது ஏசி மிலன் அணி. ஆகையால் உடனடியாக இவரை ஒப்பந்தம் செய்வது ஜூவெண்டஸ் அணிக்கு நல்லது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இன்சாகி இதுவரை பெரிய, பிரபலமான வீரர்களை கையாண்டதில்லை. அதோடு இவரது அணி ஐரோப்பாவில் சிறப்பாக விளையாடியதில்லை. ஜூவெண்டஸின் லட்சியத்திற்கு இவர் சரியாக இருப்பாரா என்பது கேள்விக்குறியே.

Edited by Fambeat Tamil