கோப்பா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா தோற்றதற்கான 3 காரணங்கள்

தோல்வியின் விரக்தியில் மெஸ்ஸி
தோல்வியின் விரக்தியில் மெஸ்ஸி

இந்த ஒரு மாதத்திற்குள்ளாக இரண்டு மிகப்பெரிய ஏமாற்றங்களை சந்தித்துள்ளது பார்சிலோனா அணி. ஒரு மாதத்திற்கு முன்பு தான் சாம்பியன்ஸ் லீக் கோப்பையில் தோல்வியடைந்துள்ள நிலையில், தற்போது கோப்பா டெல் ரே இறுதிப் போட்டியில் வேலன்சியா அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்த போதும், இரண்டாம் பாதியில் மெஸ்ஸியின் கோலால் சற்று மேலெழுந்து வந்தது பார்சிலோனா. ஆனால் துரதிஷ்டவசமாக அன்றைய போட்டியில் மெஸ்ஸியின் ஆட்டத்தால் பார்சிலோனாவை காப்பாற்ற முடியவில்லை.

வேலன்சியாவிற்கு எதிராக அன்றைய போட்டியில் பலம் வாய்ந்த அணியையே பயிற்சியாளர் வால்வெர்டே இறக்கியிருந்தார். போட்டி முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் பந்தை வைத்திருந்தாலும், வேலன்சியாவின் எதிர் தாக்குதலை பர்சிலோனா அணியால் முறியடிக்க முடியவில்லை.

இந்நிலையில், பார்சிலோனா அணி தோற்றதற்கான மூன்று காரணங்கள் என்னவென்று பார்ப்போம்…

3. ஜோர்டி அல்பா

ஜோர்டி அல்பா
ஜோர்டி அல்பா

முக்கியமான் இந்த இறுதிப் போட்டியில் மறுபடியும் தனது படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஜோர்டி அல்பா. தடுப்பாட்டத்தில் இவரின் தவறுகளால் தான் இத்தகைய தோல்வி ஏற்பட்டது. போட்டியின் இறுதி வரை வெற்றிகரமான டேக்கிள்கள் எதையும் இவர் பதிவு செய்யவில்லை. இவரது மந்தமான வேகத்தால் தான் இரண்டாவது கோலை அடித்தது வேலன்சியா.

இவரின் திறமை மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தடுப்பாட்டத்தில் இவரது மோசமான செயல்பாடு பல நேரங்களில் பார்சிலோனா அணிக்கு பாதகமாக முடிந்து விடுகிறது. சமீபத்தில் தான் ஒப்பந்த நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், தனது இடத்தை நிரூபிக்க இவர் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.

2. ஆர்தர் மெலோ

ஆர்தர் மெலோ
ஆர்தர் மெலோ

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஆர்தே மெலோ பர்சிலோனா அணிக்கு வந்த போது, பலரும் இவரை ஜாவியின் வாரிசாகவே கருதினர். 2018-ம் ஆண்டு 31 மில்லியன் யூரோவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட மெலோ, பார்சிலோனா அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, இவரது பங்களிப்பு குறைந்து கொண்டே வந்துள்ளது.

கோப்பா டெல் ரே இறுதிப் போட்டியில் விடாலுக்கு பதிலாக இவர் மேல் நம்பிக்கை வைத்து அணியில் சேர்த்தார் பயிற்சியாளர் வால்வர்டே. ஆனால் இதற்கு எந்த விதத்திலும் நியாயம் சேர்க்கவில்லை மெலோ. தடுப்பாட்டத்தில் எந்த பங்களிப்பும் செய்யாததோடு தனது அணியினருக்கு பந்தை ஒழுங்காகவும் கடத்தவில்லை. இவரின் மெதுவான ஆட்டத்தால், பலமுறை எதிரணி வீரர்களிடம் பந்தை பறிகொடுத்தார். இறுதியில் இவரது மோசமான ஆட்டத்தை பர்த்த வால்வர்டே, போட்டியின் 46-வது நிமிடத்தில் இவருக்கு பதிலாக மாற்று வீரரை இறக்கினார்.

1. நெல்சன் செமடோ

நெல்சன் செமடோ
நெல்சன் செமடோ

இவர் தங்கள் அணியின் அடுத்த டேனி ஆல்வெஸ் என எதிர்பார்த்தது பார்சிலோனா. ஆனால், பார்சிலோனாவின் தோல்வியடைந்த ஒப்பந்தங்கள் பட்டியலில் இவரும் இடம் பெற்றுள்ளார். ஏனென்றால், இந்த சீசனில் வெறும் 20 போட்டிகளை மட்டுமே விளையாடியுள்ளார். சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி போட்டியின் முதல் லெக்கில் மாற்று வீரராக களமிறங்கிய இவரது ஆட்டத்தில் அனல் பறந்தது.

எனினும் கடந்த இரண்டு போட்டிகளில் மாற்று வீரராகவே இவர் களமிறக்கப்பட்டுள்ளார். வேலன்சியா அணிக்கு எதிராகவும் தடுப்பாட்டத்தில் இவர் பல தவறுகளை செய்தார். ஜோஸ் கயாவிற்கு இவர் அதிகளவிலான இடத்தை கொடுத்த காரணத்தினால் வேலன்சியா முதல் கோலை பதிவு செய்தது. சரியாக 12 நிமிடங்கள் கழித்து ரோட்ரிகோ ஓட்டத்தை இவர் தடுக்க முயற்சிக்காததன் விளைவாக வேலன்சியா அணிக்கு இரண்டாவது கோல் கிடைத்தது. ஒரு வழியாக ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் இவர் மாற்றப்பட்டார். இல்லையென்றால் வேலன்சியா இன்னும் அதிகமான கோல்களை அடித்திருக்கும்.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now