அடுத்த சீசனில் பார்சிலோனா ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ள 3 வீரர்கள்

கேப்ரியல் ஜீசஸ்
கேப்ரியல் ஜீசஸ்

2018/19 சீசனில் லா லீகா கோப்பையை வென்றாலும் இந்த வருட சீசன் பார்சிலோனா அணிக்கு ஏமாற்றமாகவே முடிந்துள்ளது. ஏனென்றால் முக்கியமான சாம்பியன்ஸ் லீக் மற்றும் கோப்பா டெல் ரே கோப்பையில் தோல்வியடைந்து வெளியேறியது. அடுத்த சீசனில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் அணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் எந்த வீரரை அணிக்கு ஒபந்தம் செய்வது என்ற குழப்பத்தில் உள்ளது பார்சிலோனா.

அட்லெடிகோ மாட்ரிட் அணியின் அண்டோனி க்ரீஸ்மேன் பார்சிலோனா அணிக்கு வரப் போகிறார் என நீண்ட நாட்களாக கூறப்பட்டு வருகிறது. அப்படியே அவர் வந்தாலும், மூன்று கோப்பைகளையும் (லா லீகா, சாம்பியன்ஸ் லீக் மற்றும் கோப்பா டெல் ரே) வெல்ல கடுமையாக பார்சிலோனா உழைக்க வேண்டும்.

ஆகவே இந்த வருடம் பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்ய அதிக வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

3. ஜெரோம் ரவுசிலான்

ஜெரோம் ரவுசிலான்
ஜெரோம் ரவுசிலான்

தனது சொந்த நாடான பிரான்சிலிருந்து முதல் முறையாக வேறு நாட்டு அணிக்கு விளையாடச் சென்று 12 மாதங்கள் கூட ஆகாத நிலையில், மிகப்பெரிய பரிசு ஜெரோம் ரவுசிலோனுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. பண்டிஸ் லீகாவின் வோல்ஸ்ஃப்ர்க் அணிக்காக விளையாடி வரும் ரவுசிலான், இந்த சீசனில் சிறப்பாக விளையாடியுள்ளார்.

பார்சிலோனா அணியின் தடுப்பாட்ட வீரராக செயல்படும் ஜோர்டி அல்பாவின் ஃபார்ம் சமீப வருடங்களாக இறங்குமுகமாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பல போட்டிகளில் இவரது தடுப்பு அரணை எளிதாக எதிரணி வீரர்கள் உடைத்து விடுகின்றனர். இதனால் இவருக்கு மாற்றாக ரவுசிலானை அணியில் சேர்க்க முய்ற்சிக்கிறது பார்சிலோனா.

2. கேப்ரியல் ஜீசஸ்

கேப்ரியல் ஜீசஸ்
கேப்ரியல் ஜீசஸ்

லூயிஸ் சாரெஸிற்கு வயதாகி கொண்டு வருவதால் அவரை நீண்ட நாள் நம்பிக் கொண்டிருக்க முடியாது என நினைக்கிறது பார்சிலோனா. இதனால் அவருடைய இடத்திற்கு வேறு ஒரு வீரரை தேடுகிறது. இவருக்கு மாற்றாக இருப்பார் என நினைத்த கிறிஸ்டியன் ஸ்டுயானி மற்றும் ரோட்ரிகோவும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேலும், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மார்கஸ் ராஷ்போர்டையும் கடந்த ஒரு வருடமாக ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் சிறந்த பினிஷரும் ஆல் ரவுண்டர் வீரருமான கேப்ரியல் ஜீசஸ் பார்சிலோனா அணிக்கு சிறந்த தேர்வாக இருப்பார். கார்டியாலோவின் பயிற்சியின் கீழ் கேப்ரியல் ஜீசஸின் முழு திறன் வெளிப்படவிலை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் ஸ்பானிஷ் மொழியையும் ஜீசஸ் பேசுவதால் தாராளமாக மான்செஸ்டர் சிட்டி இவரை பார்சிலோனா அணிக்கு விற்பனை செய்யலாம்.

1. டீ லிஜிட்

டீ லிஜிட்
டீ லிஜிட்

அஜக்ஸ் அணியை சாம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதி வரை அழைத்துச் சென்ற டீ லிஜிட் மற்றும் ஃப்ரெங்கி டீ ஜோங் ஆகியோரை தங்கள் எதிர்கால திட்டத்தில் முக்கியமான வீரர்களாக கருதுகிறது பார்சிலோனா. 19 வயதே ஆகும் இவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. இவரது வயதையொத்த வீரர்களில் இவரே சிறந்த தடுப்பாட்ட வீரராக திகழ்கிறார்.

பார்சிலோனாவின் தடுப்பாட்ட வீரரான சாமுவேல் உமிட்டி காயம் காரணமாக இந்த சீசனில் மோசமாகவே செயல்பட்டுள்ளார். இவருக்கு மாற்றாக வந்த கிளிமெண்ட் லெங்லெட்டும் சரியாக விளையாடவில்லை. ஏற்கனவே பல இளம் வீரர்களை பார்சிலோனா ஒப்பந்தம் செய்திருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இவரை தைரியமாக அணியில் சேர்க்கலாம்.

Edited by Fambeat Tamil