அலெக்ஸ் இவொபி மற்றும் அலெக்ஸாண்ட்ரே லாசட்டெட் ஆட்டத்தின் முதல் பாதியில் அடித்த கோல்களின் காரணமாக 2-1 என்ற கணக்கில் ஹடர்ஸ்பீல்ட் டவுன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது கன்னர்ஸ்.
அவே ஆட்டங்களில் கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு வெற்றியை கண்டிராத ஆர்சனல் அணி, இப்போட்டியில் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆர்சனல் அணியின் பயிற்சியாளராக திகழும் உனய் ஏமிரி கூறுகையில் இவ்வருட பிரிமியர் லீக் புள்ளி பட்டியலில் ஆர்சனல் அணி முதல் 4 இடங்களுக்குள் வருவது சந்தேகம்தான் எனக் கூறினார்.
ஏமிரி கூறிப்பார்க்க வேண்டிய மூன்று வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1. நிக்கோலஸ் பெபே
பெபே தனது துணிச்சலான ஆட்ட திறமையால் ஐரோப்பாவின் நட்சத்திர வீரர்களை கவர்ந்து வருகிறார். ஜனவரி மாத பரிமாற்ற பேச்சுவார்த்தையில் இவரது பெயர் தென்பட்டது. ஆர்சனல் அணி இவரை வாங்க முயற்சித்தது.
23 வயதுடைய இவர் இந்த சீசனில் ஆடிய 11 ஆட்டங்களில் 17 கோல்களை அடித்துள்ளார். ஐவரிகோஸ்ட் நாட்டை சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திறமையின் அடிப்படையில் நட்சத்திர வீரர்களான நீமார் மற்றும் கைலியன் மாப்பே ஆகியோர்களின் விலைப்பட்டியல் எவ்வாறு எகிறியதோ அதேபோன்று இவரது விலையும் கிடுகிடுவென உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்சனல் அணிக்கு போட்டியாக பெயர்ன் மூனிச் அணி இவரை வாங்க போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் இவரை கைவிட்டதை போல, வரும் வாய்ப்பை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொண்டால் ஆர்சனல் அணி பயன்பெறும்.
#2. பென் சில்வெல்
லெய்செஸ்டர் சிட்டி அணி மோசமான கட்டத்தில் பயணித்து வந்தாலும், அணியின் நட்சத்திர வீரரான பென் சில்வெல் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். 129 முறை பந்தை மீட்டுதல், 21 குறுக்கீடுகள் என தனது பங்கினை நிலைநாட்டியுள்ளார்.
ஆர்சனல் அணியின் பயிற்சியாளர் ஏமிரி கூறுகையில் தற்போது LEFT BACKWORD பகுதியில் அணிக்கு சற்று தடங்களாக இருப்பதாகவும், தற்போது அவ்விடத்தில் ஆடிவரும் கோலசினாக் சற்று தெளிவின்மையால் விளங்கி வருவதாக கூறியிருந்தார்.
மற்றொரு வீரரான மொன்றெல் வயது மற்றும் காயத்தின் காரணமாக ஏனைய வீரர்களின் ஓட்டத்தை ஈடுகொடுக்க முடிவதில்லை. எனவே இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஏமிரி.
சில்வெல் ஆர்சனல் அணியின் பலவீனத்தை போக்குவார் என பலரும் கூறிவருகின்றனர். மேலும் தடுப்பாட்டத்திலும் அனுபவம் பெற்றவர் சில்வெல்.
சுமார் 50 மில்லியன் பவுண்ட் அளவுக்கு இவர் விளைப்போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#3. மனோலஸ்
சீரி எ வின் தற்போதைய சீசனில் 89% பாஸ்ஸிங் ரேட் வைத்துள்ள வீரர் மனோலஸ். நடுகளக் ஆட்டக்காரரான இவரை எடுக்க பல அணிகள் முன்வரும் எனத் தெரிகிறது.
ரோமா அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் மனோலஸ். முதல் நான்கு இடங்களில் இடம்பெறும் அணிகளை இவரின் பங்களிப்பினால் சாம்பியன் ஆக்க வல்லவர். இவரின் பங்களிப்பு எந்தளவு வித்தியாசம் ஏற்படுத்தும் என்பதற்கு மேற்கூறியதை கூர்ந்து கவனித்தால் தெரியும். நல்ல அணி அமைந்தால் இவரும் பல உச்சங்களை தொடுவார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
காற்றில் பந்தை திறம்பட கையாளுதல், பந்தை பாஸ் செய்தல் என அனைத்திலும் இவர் கெட்டிக்காரர் என்றே கூறலாம்.