சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தப் போகும் 3 வீரர்கள்

முஹமது சாலா
முஹமது சாலா

பிஃபா உலக கோப்பைக்கு பிறகு மிகபெரிய போட்டியான UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மதிப்புவாய்ந்த கோப்பைக்காக ப்ரீமியர் லீக்கைச் சேர்ந்த இரண்டு அணிகள் மோதவுள்ளன. வழக்கமாக ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் நாட்டு அணிகளே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்த முறை லிவர்பூல் மற்றும் டோட்டஹம் ஹாட்ஸ்பர் என்ற இரண்டு இங்கிலாந்து அணிகள் இறுதிப் போடிக்கு தகுதி பெற்றுள்ளன.

கடந்த வருடம் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ர்ட் அணியிடம் தோல்வியை சந்தித்த லிவர்பூல், இந்த முறை நிச்சியம் கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. மற்றொரு புறம், இதுவரை எந்த கோப்பையையும் வெல்லவில்லை என்ற விமர்சனத்திற்கு முடிவு கட்ட தயாராக உள்ளது டோட்டஹம் ஹாட்ஸ்பர்.

இறுதிப் போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ள முக்கியமான 3 வீரர்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

3. முஹமது சாலா

“எகிப்திய மாயாவி” என்று ரசிகர்களால் அழைக்கபடும் முஹமது சாலா, நிச்சியம் தனது திறமையை இறுதிப் போட்டியில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். கடந்த வருடம் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக சாலா தனது அணியை வெற்றி பெற வைப்பார் என எதிர்பார்த்த நிலையில், தோள்பட்டை காயத்தால் ஆட்டத்தின் முதல் பாதியிலேயே வெளியேறினார். இதனால் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது லிவர்பூல். அந்தப் போட்டியில் கோல்கீப்பர் லோரிஸ் காரியஸ் செய்த தவறுகளும் குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாலா நிச்சியம் கோப்பையை வென்று தருவார் என கால்பந்து வல்லுணர்கள் கணித்துள்ளனர். இந்த சீசன் சம்பியன்ஸ் லீக்கில் 11 போட்டிகளில் 4 கோல் அடித்துள்ள சாலா, இறுதிப் போட்டியில் கோல் அடித்து தனது அணியை வெற்றி பெற வைப்பார்.

2. சடியோ மனே

சடியோ மனே
சடியோ மனே

எகிப்திய ரசிகர்களின் நம்பிக்கையை முஹமது சால சுமந்து கொண்டிருக்கிறார் என்றால், செனகல் தேசிய அணியின் மிகப்பெரிய நட்சத்திரம் சடியோ மனே என்று சந்தேகமில்லாமல் கூறலாம். சென்ற வருட இறுதிப் போடியில் லிவர்பூல் அடித்த ஒரு கோலையும் அடித்தவர் சடியோ மனே தான். அவர் கோலால் தான் ஆட்டத்தை சமநிலை படுத்தியது லிவர்பூல். மேலும் அவரது ஒரு கோல், கோப்பையை வென்று விடலாம் என்ற நம்பிக்கையை லிவர்பூல் ரசிகர்களிடம் விதைத்தது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

கடந்த வருடத்தை விட இந்த வருட சீசன் மனேவிற்கு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ப்ரீமியர் லீக்கில் தங்க காலனி விருதை வென்ற சடியோ மனே, ஜர்கன் க்ளாபின் திட்டத்தை செயல்படுத்தும் முக்கியமான வீரராக திகழ்கிறார்.

1. ஹாரி கனே

ஹாரி கனே
ஹாரி கனே

லிவர்பூல் அணிக்கு சாலா, மனே, ஃபிர்மினோ என்ற மூவர்கள் இருந்தால், அதே தரத்தில் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடிக்க டோட்டஹம் ஹாட்ஸ்பர் அணிக்கு கனே, சன் மற்றும் லூகஸ் மவுரா இருக்கிறார்கள். திறமையில் இரு அணி வீரர்களும் சளைத்தவர்கள் அல்ல. கடந்த மூன்று அல்லது நான்கு சீசங்களாக டோட்டஹம் அணிக்கு முக்கியமான வீரராக திகழ்கிறார் ஹாரி கனே.

தனது அணியை வழிநடத்தி முதல் கோப்பையை பெற்று தருவார் என ஹாரி கனே மீது மிகப்பெரிய அழுத்தம் உள்ளது. இந்த வருட சாமியன்ஸ் லீக் கோப்பையில் எட்டு போட்டிகளில் விளையாடி ஐந்து கோல்கள் அடித்துள்ளார். கானே காயத்திலிருந்து முழுமையாக மீண்டு விட்டாரா என்பது தான் இப்போதைக்கு ஹாட்ஸ்பர் அணிக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை. ஒருவேளை கானே விளையடவில்லை என்றால் கிறிஸ்டியன் எரிக்சன் போன்ற மற்ற வீரர்களுக்கு அதிக நெருக்கடியை கொடுக்கும். .

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now