ஏன் இந்த ஆண்டு நிறைய போட்டிகளில் செல்சீ அணி தோற்கிறது என்பதற்கான 3 காரணங்கள்

Antonio Rudiger
Antonio Rudiger

கடந்த ஞாயிற்றுக் கிழமை ப்ரீமியர் லீக்கில், எவர்டன் அணிக்கு எதிரான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் செல்சீ அணி தோல்வி அடைந்தது. இதுவரை 30 போட்டிகளில் விளையாடியுள்ள செல்சீ அணி, 57 புள்ளிகளை பெற்று மான்செஸ்டர் யுனைடைட் அணியை விட ஒரு இடம் பின் தங்கி ஆறாவது இடத்தில் நீடிக்கிறது.

இந்த சீசனில் செல்சீ அணி தோற்கும் ஏழாவது போட்டி இது. அப்படியென்றால், இந்த ஆண்டு ப்ரீமியர் லீக்கில் 25 சதவிகிதத்திற்கும் அதிகமான போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஏற்கனவே FA கோப்பையில் மான்செஸ்டர் யுனைடைட் அணியிடம் தோல்வியுற்றது செல்சீ அணி.

ஒருவேளை புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வராமல், தொடர்ந்து இரண்டாவது வருடமாக சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கு தகுதி பெறாவிட்டால், மவுரிசியோ சாரியின் பயிற்சியாளர் பதவி நீடிக்குமா என்பது சந்தேகம் தான். இந்த சீசனின் தொடக்கத்தில் தான் செல்சீ அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் மவுரிசியோ.

ஏன் இந்த சீசனில் நிறைய போட்டிகளை செல்சீ அணி தோற்கிறது என்பதற்கான மூன்று காரணங்களை இங்கு விரிவாக பார்ப்போம்….

1. மோசமான தடுப்பாட்டம்

தங்களது சொந்த பெனால்டி பகுதியிலேயே செல்சீ அணியின் தடுப்பாட்ட வீரர்கள் மோசமாக செயல்படுவதாலேயே இத்தனை தோல்விக்கும் முக்கிய காரணம். சிறந்த தடுப்பாட்ட வீரரான அண்டோனியோ ருடிகெர் கூட எதிரணி வீரரகளை கோல் அடிக்க விடாமல் தடுப்பதில் கோட்டை விடுகிறார். டேவிட் லூயிஸ் பற்றி கேட்கவே வேண்டாம். இந்த சீசன் முழுவதும் அவர் தடுமாற்றத்துடன் தான் ஆடி வருகிறார்.

மேலும், மார்கோஸ் அலோன்சாவின் தேவையற்ற தவறால் எவர்டன் அணிக்கு எளிதான பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை அவர்கள் எளிதாக கோல் ஆக்கினார்கள். இதுபோன்ற காரணங்களால் செல்சீ அணி நிறைய கோல்களை எதிரணிக்கு விட்டு கொடுக்கிறது. இந்த வருடம் சாம்பியன்ஸ் லீக்கில் நல்லவேளை செல்சீ அணி விளையாடவில்லை. ஒருவேளை விளையாடியிருந்தால், இதை விட பல கோல்களை விட்டுக் கொடுத்திருப்பார்கள்.

2. போதிய திறமையற்ற நடுகள வீரர்கள்

Ross Barkley
Ross Barkley

செல்சீ அணியின் நடுகள வீரர்கள் போதிய திறமையில்லாமல் இருக்கிறார்கள். இது அணியை நிச்சியம் பாதிக்கும். ஜோரின்ஹோவை தடுப்பாட்ட வீரராக சேர்த்துக் கொள்ள வசதியாக, மத்திய நடுகளத்தில் விளையாடுகிறார் காண்டே. ஜோரின்ஹோவும் காண்டேவும் சில கோலக்ள் போடுவதற்கு உதவி புரிந்தாலும், அது செல்சீ அணிக்கு போதுமானதாக இல்லை.

கோவசிக் மற்றும் ராஸ் பார்க்லே மற்ற மத்திய நடுகள வீரர்களாக விளையாடுகிறார்கள். ஆனால் இவர்கள் இருவரும் பந்தை லாவகமாக கையாளும் திறன் படைத்தவர்கள் அல்ல. இதனால் இவர்களால் சொந்தமாக அணிக்கு வெற்றி தேடி தர முடியாது. இதுவரை இந்த சீசனில் பார்க்லே எட்டு கோல்களை அடித்துள்ளார். கோவசிக் இன்னும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஆனால் செல்சீ அணிக்காக முன்பு நடுகளத்தில் விளையாடிய லாம்பார்ட், சீசனுக்கு சராசரியாக 20 கோல் வரை அடிக்க கூடியவர்.

ஆகையால், அதிக திறமை படைத்த ஹட்சன் ஒடாய், வில்லியன் போன்ற வீரர்களுக்கு அதிக நிமிடங்கள் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.

3. முன்கள வீரர்கள் குறைவாகவே பங்களிக்கிறார்கள்

Eden Hazard
Eden Hazard

செல்சீ அணியின் முன்கள வீரர்கள் குறைவாக பங்களிப்பதோடு போதிய அளவிற்கு தற்காப்பும் செய்வதில்லை. வழக்கமாகவே, இவர்கள் எதிரணியின் தடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியை கொடுப்பதில்லை. இதன் விளைவாக, பல சமயங்களில் மத்திய பகுதியில் போதிய வீரர்கள் இருப்பதில்லை. இதை எதிரணியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர்.

பக்கவாட்டில் விளையாட விரும்பும் ஈடன் ஹசார்ட், சில சமயங்களில் தற்காப்பு செய்வதில் கோட்டை விடுகிறார். மேலும் முன் பகுதியில் விளையாடும் செல்சீ அணி வீரர்கள் பந்தை எளிதாக விட்டு கொடுத்து விடுகிறார்கள். அதை திரும்பவும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் அவர்கள் முயற்சிப்பதில்லை. இதையெல்லாம் பார்சிலோனா அணியிடமிருந்து செல்சீ அணி வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

App download animated image Get the free App now