கிரிஸ்டல் பேலேஸ் அணியின் வில்ஃபரைட் ஜாகா, அடுத்த சீசனில் அணி மாறுவதற்கு ஆயத்தமாகி வருகிறார். கிரிஸ்டல் பேலஸ் அணிக்காக முன்கள வீரராகவும் விங்கராகவும் செயல்பட்டு வரும் வில்ஃப்ரைட், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பேலஸ் அணியோடு தனக்கு ஒப்பந்தம் இருந்தாலும் சேம்பியன்ஸ் லீக் கால்பந்தை விளையாட தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மறுபடியும் வில்ஃப்ரைட் ஜாகா-வை மான்செஸ்டர் யுனைடெட் அணி ஓப்பந்தம் செய்யப் போவதாக செய்திகள் பரவுகிறது. கடந்த சீசன் மிகவும் ஏமாற்றுகரமாக இருந்ததால் தங்கள் அணியை புத்துணர்ச்சி பெற செய்ய வில்ஃப்ரைட் ஜாகா-வை ஒப்பந்தம் செய்தால் சரியாக இருக்கும் என மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் நினைக்கிறது. ஆனால், ஏற்கனவே மான்செஸ்டர் அணிக்காக ஜாகா விளையாடியுள்ளார். 2013-ம் வருடம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய ஜாகா, அடுத்த ஆண்டே கிரிஸ்டல் பேலஸ் அணிக்கு மாறினார்.
வில்ஃப்ரைட் ஜாகா மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு செல்வது தவறான முடிவு என்பதற்கான மூன்று காரணங்களை நாங்கள் கூறுகிறோம்…
1. போலி வேஷம் போடுகிறார்
கடந்த இரண்டு சீசன்களாக கிரிஸ்டல் பேலஸ் அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜாகா, ஏன் இதை விட பெரிய அணிக்கு செல்ல விரும்புகிறார் என தெரியவில்லை. கிரிஸ்டல் பேலஸ் அணியில் மிகவும் மதிப்புவாய்ந்த வீரராக இருப்பதோடு இந்த சீசனில் ப்ரீமியர் லீக் கோப்பையில் பேலஸ் அணிக்காக அதிக கோல் அடித்தவர் இவரே.
கிரிஸ்டல்ல் பேலஸ் அணியில் வாரச் சம்பளமாக 1,30,000 யூரோ பெற்று வருகிறார் ஜாகா. ஆனாலும் இந்த அணியை விட்டு வேறு அணிக்கு மாறும் இவரது முடிவு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. தான் சிறந்த அணிக்கு எதிராகவும், சிறந்த வீரர்களோடும் சேர்ந்து விளையாட விரும்புவதாக ஜாகா கூறுவதில் ஆச்சர்யம் இல்லை தான். அடுத்த சீசனில் சாம்பியன்ஸ் லீக் கோப்பையில் விளையாடும் அணியில் தான் ஆட விரும்புவதாக கூறுகிறார் ஜாகா. அதற்காக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு தான் செல்ல வேண்டுமா?
கிரிஸ்டல் பேலஸ் அணியை விட மான்செஸ்டர் அணி பெரியது என யார் சொன்னது? அடுத்த ஆண்டு நிச்சியம் மான்செஸ்டர் யுனைடெட் அணி சாம்பியன்ஸ் லீக் விளையாடப் போவதில்லை. அதற்கு அடுத்த ஆண்டும் சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கு தகுதி பெறுமா என உறுதியாக கூறமுடியாது. சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடுவது தான் ஆசை என்றால், எந்த வீரரும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு செல்ல விரும்ப மாட்டார்.
2. அணியை புதுப்பிக்கும் முயற்சியில் உள்ளது மான்செஸ்டர் யுனைடெட்
2018/19 சீசனில் மிகவும் மோசமாக விளையாடியதை தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடெட் அணியால் ப்ரீமியர் லீக் கோப்பையில் ஆறாவது இடமே பெற முடிந்தது. இதனால் தங்கள் அணியை புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மான்செஸ்டர் யுனைடெட். ஆகையால் அணியில் பல வீரர்களை மாற்ற வேண்டிய தேவை ஏற்படும். குறிப்பாக ஆஷ்லி யங் மற்றும் நிமெஞ்சா மட்டிக் போன்ற வயதான வீரர்களையும், சரியாக விளையாடாத பிரபல வீரர்களான பவுல் போக்பா மற்றும் அலெக்ஸ் சான்செஸ் ஆகியோர்களையும் வெளியேற்றப் போகிறார்களா அல்லது ஒரேயடியாக அணி மேனஜர் ஒலே சோல்ஸ்க்ஜரை மாற்றப் போகிறார்களா என தெரியவில்லை.
இப்படியொரு நிலையில் மான்செஸ்டர் யூனைடைட் அணிக்கு புதிதாக செல்லும் வீரர்களுக்கு ஆபத்தே உள்ளது. தான் ஒரு சிறந்த வீரர் என நிரூபிக்க விரும்பும் வில்ஃப்ரைட் ஜாகா போன்ற வீரர்கள் அங்கு செல்வது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போல் ஆகிவிடும். ஜாகா போன்ற ஒரு சில வீரர்கள் அணியில் சேர்ந்தால் மறுபடியும் மான்செஸ்டர் அணி புத்துயிர் பெற வாய்புள்ளது. ஆனால் இது ஒருவேளை தவறாக முடிந்தால்? அதனால், போரிஸா டோர்ட்மண்ட், ஆர்செனல், டோட்டஹம் போன்ற அணிகளுக்கு ஜாகா செல்வதே நல்லது
3. ஏற்கனவே மான்செஸ்டர் அணியிடம் மோசமான அணுபவத்தை பெற்றுள்ளார் ஜாகா
இடையில் எந்த அணிக்கும் செல்லாமல் ஆரம்பத்திலிருந்தே கிரிஸ்டல் பேலஸ் அணியில் விளையாடி இருந்தால், தற்போது மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கு செல்வது சரியாக இருக்கும். ஆனால், ஜாகா ஏற்கனவே 2013-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு 10 மிலியன் யூரோ தொகைக்கு ஒப்பந்தமாகி விளையாடியுள்ளார். ஆனால் அப்போது அவர் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை.
அணியில் அவருக்கு சரியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மொத்த சீசனில் வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே ஜாகா விளையாடினார். அதுமட்டுமல்லாமல், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பரவிய வதந்திகளால், அந்த சமயத்தில் மான்செஸ்டர் அணியின் தற்போதைய பயிற்சியாளர் சோல்ஸ்க்ஜார் மேனேஜராக இருந்த கார்டிஃப் சிட்டி அணிக்கு மாறினார். அவருக்கு எந்த வகையிலும் மான்செஸ்டர் யுனைடெட் அணி மகிழ்ச்சிகரமாக இல்லை. அதே தவறை தான் இப்போதும் செயப் போகறாரா?
ஒரு மிகப்பெரிய அணிக்கு ஒபந்தமாகி, மறுபடியும் பழைய அணிக்கு திரும்பி தனது திறமையை நிரூபிப்பது எளிதான காரியம் இல்லை. இளம் வீரரான ஜாகா அதை திறம்பட செய்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து வெளியேறியதும் தனது திறமையை பன்மடங்கு உயர்த்திய ஜாகா, இப்போது வரை கிரிஸ்டல் பேலஸ் அணிக்கு சிறந்த விங்கராக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே மான்செஸ்டர் யுனைடெட் அணியோடு மோசமான அணுபவம் பெற்றுள்ள வில்ஃப்ரைட், திரும்பவும் அங்கு செல்வதற்கு பதில் வேறு எந்த அணிக்காவது செல்லலாம்.