கால்பந்தில் ஒரு போதும் 'ரெட் கார்ட்' வாங்காத வீரர்கள்

வீரரை நோக்கி சிவப்பு அட்டை காண்பிகும் நடுவர்
வீரரை நோக்கி சிவப்பு அட்டை காண்பிகும் நடுவர்

எந்த விளையாட்டாக இருந்தாலும் அந்த விளையாட்டுக்குரிய விதிகளை மதித்து விளையாடுவது எப்போதுமே சிறப்பான விஷயம். அதுவும் கால்பந்து போன்ற 'தொடர்பு' விளையாட்டில் வீரர்கள் ஒவ்வொருவரும் எதிரணி வீரரை மதித்து, கட்டுப்பாடோடு விதிகளை மீறாமல் விளையாட வேண்டியது அவசியமாகும். கால்பந்து விளையாட்டில் சிறிய தவறு செய்யும் வீரர்களுக்கு மஞ்சள் அட்டை காண்பித்து எச்சரிக்கை செய்யப்படுகிறது. அதே வீரர் தொடர்ந்து தவறு செய்யும் போது சிவப்பு அட்டை காண்பித்து களத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்.

லூயிஸ் சாரெஸ், செர்ஜியோ ரமோஸ் போன்ற வீரர்கள் விதிகளை மீறி விளையாடியதற்காக பல முறை தண்டிக்கப்படுள்ளனர். ஆனால் இத்தகைய விரர்களுக்கு மத்தியில் நேர்மையாகவும், எந்தவொரு ஒழுக்கக்கேடான விஷயத்தில் ஈடுபடாமலும், எதிரணி வீரரை சாடாமலும் களத்தில் விளையாடும் வீரர்களும் உள்ளனர். இவரக்ள் இதுவரை தாங்கள் விளையாடிய காலத்தில் ஒரு முறை கூட சிவப்பு அட்டை பெறாதவர்கள்.

அப்படியான நான்கு வீரர்களின் பட்டியலை தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்:

#4. ஜோயோ மவுண்டினோ:

மவுண்டினோ
மவுண்டினோ

எப்போதும் குறைத்து மதிப்பிடப்படும் மத்திய கள ஆட்டக்காரரான மவுண்டினோ, 2016-ம் ஆண்டு போர்ச்சுகல் அணி யூரோ கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். தனது கால்பந்து வாழ்க்கையின் பெரும்பங்கை ஏஎஸ் மோனக்கோ மற்றும் ஸ்போர்டிங் சிபி அணிக்காக விளையாடிய மவுண்டினோ, நடுவருக்கும் எதிரணி வீரர்களுக்கும் ஒரு போதும் பிரச்சனையாக இருந்ததில்லை. தான் விளையாடிய காலங்களில் 47 முறை மஞ்சள் அட்டை பெற்றுள்ள போதும் ஒரு முறை கூட சிவப்பு அட்டை பெற்றதில்லை என்ற சாதனையை படைத்துள்ளார் மவுண்டினோ.

#3. கரிம் பென்சிமா:

பென்சிமா
பென்சிமா

கால்பந்து விளையாட்டில் அற்புதமான வீரர்களில் ஒருவராக கருதப்படும் பென்சிமா ரியல் மாட்ரிட் கிளப்பிற்காக விளையாடி வருகிறார். தன் கால்பந்து திறமைக்காக தனிப்பட்ட முறையில் பல விருதுகளை பெற்றுள்ளதோடு தான் விளையாடும் அணி பல கோப்பைகளை வெல்ல உதவி புரிந்துள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்காக 400 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள பென்சிமா, அணிக்காக தொடர்ச்சியாக கோல் அடிக்கக்கூடியவர். பென்சிமாவின் தனிப்பட்ட வாழ்வில் பல சர்ச்சைகள் இருந்தாலும், ஆட்ட களத்தில் அவரது ஒரே வேலை நேர்மையாக விளையாடி கோல் அடிப்பது மட்டுமே. இதுவரை 8 மஞ்சள் அட்டையை பெற்றுள்ள பென்சிமா, ஒரு முறை கூட சிவப்பு அட்டை பெற்றதில்லை. ரியல் மாட்ரிட் அணியின் ஒழுக்கமான வீரராகவும் இவர் கருதப்படுகிறார்.

#2. ரவுல் கொன்சாலெஸ்:

ரவுல் கொன்சாலெஸ்
ரவுல் கொன்சாலெஸ்

ஸ்பெயினின் தலைசிறந்த கால்பந்து வீரராக கருதப்படும் கொன்சாலெஸ், அதிரடியாக கோல் அடிப்பது, தலைமைப் பண்பு, சாதனை படைப்பது என எல்லாம் கலந்த வீரர். அனுபவமும், திறமையும் கொண்ட கொண்சாலஸ், களத்தில் இறங்கியதும் அமைதியின் திருவுருவமாக மாறி விடுவார். எதையும் தாகுப்பிடிக்கும் திறன் கொண்ட கொன்சாலெஸ், களத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, குழப்பத்தையும் சர்சையும் ஏற்படுத்தாதவர். தனது 17 வருட கால்பந்து அணுபவத்தில் எந்தவொரு ஒழுங்கு முறைகேட்டிலும் சிக்காததோடு ஒரு முறை கூட சிவப்பு அட்டை பெற்றதில்லை என்ற சாதனையும் படைத்துள்ளார். இவரது அமைதியான குணத்தை கண்டு எதிரணி வீரர்கள் வம்புக்கு இழுப்பார்கள். ஆனால் இவர் எதைப்பற்றியும் கவலை படாமல் அமைதியான மனநிலையோடு விளையாடுவார்.

#1. இனியஸ்டா:

இனியஸ்டா
இனியஸ்டா

கால்பந்து வரலாற்றில் மிகச்சிறந்த மத்திய கள ஆட்டக்காரர்களில் ஒருவராக கருதப்படும் இனியஸ்டா, மற்றொரு சிறந்த வீரரும் தனது நண்பருமான ஜாவியோடு சேர்ந்து பார்சிலோனா அணிக்கும் ஸ்பெயின் அணிக்கும் பல கோப்பைகளை பெற்றுக் கொடுத்துள்ளனர். பார்சிலோனா அணியில் தொடர்ந்து சீராகவும் சுறுசுறுப்பாகவும் விளையாடக்கூடிய ஒரே விரர் யாரென்றால் அது இனியஸ்டா மட்டுமே. களத்திற்குள்ளும் வெளியேயும் மிகவும் பணிவாக நடந்துகொள்ளும் இனியஸ்டா மீது இதுவரை ஒருமுறை கூட ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டதாக பிரச்சனை வந்ததில்லை. எதிரணியினரால் கூட மதிக்கப்படும் இனியஸ்டா தான் விளையாடிய காலத்தில் ஒருமுறை கூட சிவப்பு அட்டை பெற்றதில்லை.

Edited by Fambeat Tamil