ஜூவெண்டஸ் அணியில் ரொனால்டோவின் முதல் சீசன் ஏன் வெற்றிகரமாக அமையவில்லை?

Juventus v Atalanta BC - Serie A
Juventus v Atalanta BC - Serie A

ஜூவெண்டஸ் அணிக்காக இந்த சீசனில் முதல் முறையாக விளையாடியுள்ள நட்சத்திர வீர்ர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டம் குறித்து பல விமர்சனங்கள் வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சீரி ஏ (இத்தாலி உள்நாட்டு தொடர்) கோப்பையை எட்டாவது முறையாக கைப்பற்றியது ஜூவெண்டஸ் அணி. இந்த கோப்பையை வெல்வதற்கு ரொனால்டோவின் பங்கு முக்கியமாக இருந்தது. 21 கோல்களை அடித்துள்ளதோடு எட்டு முறை சக வீரர் கோல் அடிக்க உதவி புரிந்துள்ள ரொனால்டோ, இந்த வருடத்திற்கான சீரி ஏ-வின் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர் என்ற விருதை வென்றுள்ளார்,.

எனினும், இவரது சிறப்பான ஆட்டத்தால் ஜுவெண்டஸ் அணியை சாம்பியன்ஸ் லீக்கில் வெற்றி பெற வைக்க முடியவில்லை. காலியிறுதியோடு நடையை கட்டியது ஜுவெண்டஸ்.

ஜூவெண்டஸ் அணியில் ரொனால்டோவின் முதல் சீசன் ஏன் வெற்றிகரமாக அமையவில்லை என்பதற்கான 4 காரணங்களை இங்கே பட்டியல் இடுகிறோம்.

4. உள்நாட்டில் இரட்டை கோப்பையை வெல்லாமல் தோல்வியுற்றது

2014/15 முதல் 2017/18 வரை சீரி ஏ மற்றும் கோப்பா இத்தாலிக்கா என்ற இரண்டு உள்நாட்டு கோப்பைகளை வென்று வந்துள்ளது ஜுவெண்டஸ். இந்த வருடம் சீரி ஏ கோப்பையை எட்டாவது முறையாக வென்ற போதும், ரொனால்டோவை வைத்து கொண்டே கோப்பா இத்தாலிக்கா-வை வெல்ல முடியாதது ஜுவெண்டஸ் அணியின் தோல்வியாகவே பார்க்க முடிகிறது. காலிறுதியில் அட்லாண்டா அணியுடனான போட்டியில், ரொனால்டோவின் ஆட்டம் எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுதவில்லை. ஏற்கனவே கோப்பா இத்தாலிக்கா தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய போதும் ரொனால்டோ எந்த கோலும் அடிக்கவில்லை.

3. கோல் அடிக்கும் ஃபார்ம் குறைந்து வருவது

Ronaldo
Ronaldo

ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய போது, கோல் கம்பத்திற்கு அருகே வரும் எந்த பந்தையும் கோல் அடிக்காமல் ரொனால்டோ தவறவிட்டதில்லை. அங்கு ஒவ்வொரு சீசனிலும் 40 கோல்களை தவறாமல் அடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தார். ஆனால் ஜூவெண்டஸ் அணிக்காக முதல் சீசன் விளையாடிய போது, 28 முறை மட்டுமே கோல் போஸ்டை நோக்கி அடித்துள்ளார். மேலும், தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் படி, சீரி ஏ தொடரில் அதிகமான வாய்ப்புகளை தவறவிடும் வீர்ர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரொனால்டோ.

2. சாம்பியன்ஸ் லீக் வெளியேற்றம்

Juventus Striker Ronaldo
Juventus Striker Ronaldo

கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் தோலியுற்றுள்ளது ஜூவெண்டஸ் அணி. ரொனால்டோ இருப்பதால் இந்த தடவை நிச்சியம் சாம்பியன்ஸ் லீக் கோப்பை நமக்கு தான் என ஜூவெண்டஸ் ரசிகர்கள் நினைத்திருந்தனர். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து ஜூவெண்டஸ் அணியை காலிறுதி சுற்றுக்குள் அழைத்து சென்றார் ரொனால்டோ. ஆனால் அங்கு சிறிய அணியான அஜக்ஸிடம் தோல்வியுற்று வெளியேறியது ஜுவெண்டஸ்.

காலிறுதியின் இரண்டு லெக் போட்டியிலும் ரொனால்டோ கோல் அடித்தாலும், அணியை வெற்றி பெறச் செய்யாதது அவர் மீது கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. ரொனால்டோவிற்கு இவ்வுளவு தொகை செலவழித்தது சரி தானா எனவும் சிலர் தற்போது கேள்வி எழுப்புகின்றனர்.

1. பலோன் டி ஆர் விருதிற்கான போட்டியில் இல்லாமை

Juventus Striker Ronaldo
Juventus Striker Ronaldo

கால்பந்து உலகில் மிகவும் மதிப்பு வாய்ந்த விருதாக கருதப்படும் பலோன் டி ஆர் விருதிற்கு ஒவ்வொரு முறையும் ரொனால்டோ-வின் பெயர் இடம்பெற தவறியதேயில்லை. கடந்த 11 வருடங்களில் ஐந்து முறை இந்த விருதை வென்றுள்ளார் ரொனால்டோ. ஆனால் இந்த ஆண்டு ரொனால்டோவிற்கு விருது கிடைப்பது கடினமே. ஏனென்றால், ஜுவெண்டஸ் அணி சம்பியன்ஸ் லீக் காலிறுதியில் தோல்வி அடைந்துவிட்டது.

மேலும், மற்றொரு நட்சத்திர வீரர் மெஸ்ஸி இதுவரை 50 கோல்கள் அடித்துள்ளார். அவர் மட்டுமல்லாமல், லிவர்பூல் அணியின் முகமது சாலா, சடியோ மனே மற்றும் விர்ஜில் வான் டிஜிக் ஆகியோரும் இந்த விருதை பெறுவதற்கான போட்டியில் உள்ளனர். சமீப வருடங்களில் இந்த விருதிற்கான போட்டியில் கூட ரொனால்டோ இடம்பெறாதது இதுவே முதல் முறையாகும்.

App download animated image Get the free App now