2. ஜர்கன் கிளாப் (லிவர்பூல்)
ஜெர்மனியைச் சேர்ந்த ஜர்கன் கிளாப், 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் பண்டிஸ் லிகா தொடரில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவர். அந்த சமயத்தில் போர்சியா டோர்ட்மண்ட் அணியின் மேனேஜராக இருந்த கிளாப், ஒரு முறையல்ல இரண்டு முறை பலம் வாய்ந்த பேயர்ன் முனிச் அணியை தோற்கடித்தார். அதன் பிறகு லிவர்பூல் அணியின் பயிற்சியாளராக ஆனதிலிருந்து, இவர் மீதான நம்பிக்கையும் புகழும் அதிகரித்தது.
ப்ரீமியர் லீக்கில் லிவர்பூல் அணியை பலம் வாய்ந்த அணியாக மாற்றியதோடு இந்த ஆண்டு சீசனில் நிச்சியம் கோப்பையை வெல்லும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். மற்ற பயிற்சியாளர்களை காட்டிலும் நெகிழ்வு தன்மை கொண்ட கிளாப், அவ்வப்போது ஆட்ட நுணுக்கங்களை மாற்றக்கூடியவர்.
1. பெப் கார்டியாலா (மான்செஸ்டர் சிட்டி)
இன்றுள்ள நிலைமையில் உலகின் தலைசிறந்த கால்பந்து மேனேஜராக கருதப்படுகிறார் பெப் கார்டியாலா. 2008-ம் ஆண்டு முதல் பயிற்சியாளராக இருந்து வரும் கார்டியாலா, வெல்லாத கோப்பைகளே கிடையாது. பார்சிலோனோ அணியின் பயிற்சியாளராக இவர் இருந்த போது தான், அந்த அணி இரண்டு முறை முன்று கோப்பைகளையும் (சாம்பியன்ஸ் லீக், டெல் கோப்பா ரே, லா லீகா) வென்று அரிய சாதனையை படைத்தது.
ஜாவி, இனியஸ்டா, மெஸ்ஸி போன்ற சிறந்த வீரர்கள் இருந்ததால் தான் இவரால் இத்தனை கோப்பையை வெல்ல முடிந்தது என பலர் கூறினர். ஆனால் பேயர்ன் முனிச் அணிக்கு பயிற்சி அளித்த போது இந்த சந்தேகத்தை உடைத்தெறிந்தார். தற்போது மான்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இவரைப் போல் யாராலும் வீரர்களை நிர்வகிக்க முடியாது. இவரோடு சேர்ந்து பணியாற்றவும் கற்றுக்கொள்ளவும் எப்போதும் வீரர்கள் விரும்புவர்.