பார்சிலோனா அணியில் லூயிஸ் சாரஸிற்கு மாற்றாக வர வாய்ப்புள்ள 5 வீரர்கள்!

லூயிஸ் சாரஸ்
லூயிஸ் சாரஸ்

கோல் அடிக்கும் திறமைக்கு மட்டுமல்லாமல் சர்ச்சைக்கும் கால்பந்து ரசிகர்களிடம் பெயர் பெற்றவர் உருகுவே நாட்டைச் சேர்ந்த லூயிஸ் சாரஸ். 2014-ம் ஆண்டிலிருந்து உலகின் சிறந்த கிளப்புகளில் ஒன்றான பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார் சாரஸ். இதுவரை பார்சிலோனா அணிக்காக 138 போட்டிகளில் விளையாடி 113 கோல்களை அடித்துள்ளதோடு மூன்று லா லிகா கோப்பையை பார்சிலோனா வெல்லவும் உதவி புரிந்துள்ளார்.

2015-16 ஆண்டிற்கான ஐரோப்பிய தங்க ஷூ விருதை வாங்கிய சாரஸ், கடந்த மூன்று சீசன்களில், தான் கோல் அடிப்பதை முக்கியமாக கருதாமல் மற்ற வீரர்கள் கோல் அடிப்பதற்கும் அதிகமாக உதவி புரிந்துள்ளார். தற்போது 31 வயதாகும் சாரஸின் திறமை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருவது வெளிப்படையாக தெரிகிறது. எவ்வுளவு தான் சாரஸ் திறமை வாய்ந்த வீரர் என்றாலும், இவரை பார்சிலோனா அணி நீண்ட நாள் நம்பிக் கொண்டிருக்காது. இவருக்கு மாற்றான வீரை நிச்சியம் தேடிக் கொண்டிருக்கும்.

இந்நிலையில், சாரஸிற்கு பதிலாக யாரை பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்யலாம் என்ற ஐந்து வீரர்களின் பட்டியலே இது.

5. லூகா ஜோவிச்:

லூகா ஜோவிச்
லூகா ஜோவிச்

ரெட் ஸ்டார் பெல்கிரேட்-யின் முதல் கட்ட அணியில் 17 வயதிலேயே லூகா ஜோவிச் இடம் பெற்றதை அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்த்தனர். அங்கிருந்து பல கிளப்புகளுக்கு மாறிய ஜோவிச், இறுதியாக எண்டிராச்ட் பிராங்கஃப்ர்ட் அணியின் நிரந்தர வீரராக மாறினார். பார்சிலோனா அணியின் நடுகள வீரர் முனீர், செவிலா அணிக்குச் செல்ல இருப்பதால், அவருக்கு மாற்றாக ஜோவிச்சை தங்கள் அணியில் எடுக்கலாமா என யோசித்து வருகிறது பார்சிலோனா. இந்த வருட சீசன் முடிவில் ஜோவிச்சின் ஒப்பந்தம் நிறைவு பெறவுள்ள நிலையில், பார்சிலோனா அணிக்கு இவர் சிறந்த மாற்றாக இருக்க முடியும்.

அணிக்கு வெற்றியை தேடித் தரும் இவரின் ஒப்பந்த விலை 40 மில்லியன் யூரோ மட்டுமே என்பதால் இது நிச்சியம் பார்சிலோனா அணிக்கு சிறந்ததாக அமையும். இந்த வருட பண்டிஸ் லீகா தொடரில் அசத்தி வரும் ஜோவிச், இதுவரை 14 கோல்கள் அடித்து எண்டிராச்ட் பிராங்கஃப்ர்ட் அணியை புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு வர உதவியுள்ளார்.

4. மவுரோ இகார்டி:

மவுரோ இகார்டி
மவுரோ இகார்டி

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த மவுரோ இகார்டி தற்போது இண்டர் மிலன் அணிக்காக விளையாடி வருகிறார். 2013-ம் ஆண்டு இண்டர் மிலன் அணியில் சேர்ந்த இகார்டி, இதுவரை மொத்தம் 165 போட்டிகளில் விளையாடி 103 கோல்கள் அடித்துள்ளார். அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி, செர்ஜியோ ஆகுரா மற்றும் பவுலோ டிபாலா ஆகியோரோடு ஓப்பீடு செய்யப்பட்ட இகார்டி, இந்த ஆண்டு சீசனில் இண்டர் மிலன் அணிக்காக கோல் மழை பொழிந்து வருகிறார். வேகமான ஸ்ட்ரைக்கர் இல்லையென்றாலும், எதிரணியின் தடுப்பாட்டத்தை தாண்டி கோல் அடிப்பதில் வல்லவர் இகார்டி. மேலும் இக்கட்டான நேரத்தில் ஃப்ரீ-கிக், கார்னர் கிக், பெனால்டி போன்றவற்றை அடிப்பதில் தேர்ந்தவர்.

இளமையில் மூன்று வருடங்கள் பார்சிலோனா அகாடமியில் இகார்டி பயிற்சி பெற்றாலும், அவரால் அணியில் இடம் பெற முடியவில்லை. தற்போது ரியல் மாட்ரிட் அணியும் இகார்டியை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளதால், பார்சிலோனா அணி விரைவாக முந்திக் கொண்டால் அவர்கள் அணிக்கு நல்லது.

3. ராபர்டோ ஃபிர்மினோ:

ராபர்டோ ஃபிர்மினோ
ராபர்டோ ஃபிர்மினோ

லிவர்பூல் அணியில் இருந்து ராபர்டோ ஃபிர்மினோவை தங்கள் அணிக்கு கொண்டு வருவது முடியாத காரியம் என யோசிக்கிறது பார்சிலோனா. தற்சமயத்தில் மிகச்சிறந்த ஸ்ட்ரைக்கர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ஃபிர்மினோ, நிச்சியம் சாராஸிற்கு மாற்றாக இருப்பார். லிவர்பூல் அணியின் முக்கிய வீரராக திகழும் ஃபிர்மினோ, இதுவரை 126 லீக் போட்டிகளில் விளையாடி 45 கோல்கள் அடித்துள்ளார். கடந்த முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையில் லிவர்பூல் அணியின் வெற்றிகரமான பயணத்திற்கு இவரும் ஒரு காரணம். இவரை ஒப்பந்தம் செய்ய பார்சிலோனா ஆவலாக உள்ள நிலையில், லிவர்பூல் அணியிலிருந்து விலகி பார்சிலோனா அணியில் சேர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2. மேக்சிமிலியானோ கோமெஸ்:

மேக்சிமிலியானோ கோமெஸ்
மேக்சிமிலியானோ கோமெஸ்

உருகுவே அணியின் “அடுத்த சாரஸ்” என அழைக்கப்படும் கோமெஸ், லா லிகா லீக்கில் அற்புதமாக விளையாடி வருகிறார். இவரை ஒப்பந்தம் செய்ய பல அணிகள் தயாராக உள்ளது. 2017-ம் ஆண்டு செல்டா விகோ அணியில் சேர்ந்ததிலிருந்து முன் களத்தில் அசத்தி வருகிறார் கோமெஸ். இந்த ஆண்டு சீசனில் இதுவரை 18 கோல்கள் அடித்துள்ளதோடு மற்றவர்கள் கோல் அடிக்க ஐந்து முறைக்கு மேல் உதவி புரிந்துள்ளார். தன் இரண்டு கால்களாலும் கோல் அடிக்கும் திறமை படைத்த கோமெஸ், களத்தில் மிகவும் ஆற்றலோடு இருப்பவர். 22 வயதிலேயே உலகின் சிறந்த கிளப்பிற்கு விளையாடும் வாய்ப்பு அவரது கதவை தட்டுகிறது. ஜெர்மனியின் பல முக்கிய கிளப்புகளும் இவரை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ள நிலையில், பார்சிலோனா உடனடியாக இவரை ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

1. டிமோ வெர்னர்:

டிமோ வெர்னர்
டிமோ வெர்னர்

மிகவும் இள வயதில் பண்டிஸ் லீகா தொடரில் கோல் அடித்தவர் என்ற பெருமை பெற்ற டிமோ வெர்னர், 2016-ம் ஆண்டு சாதனை தொகையாக 10 மில்லியன் யூரோ தொகைக்கு RB லெய்ப்சிக் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். விரைவாகவும் திடமாகவும் களத்தில் விளையாடும் வெர்னர், பார்சிலோனா அணிக்கான உகந்த வீரராக நிச்சியம் இருப்பார். நடுகள வீரராகவும் விங்கராகவும் கூட விளையாடக் கூடியவர் வெர்னர். ஏன் பார்சிலோனா அணி இவரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பதற்கு இன்னொரு காரணம் இவரது வயது. 22 வயதான வெர்னர் பண்டிஸ் லீகா போட்டியில் இதுவரை 82 போட்டிகளில் விளையாடி 45 கோல்கள் அடித்துள்ளார்.

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications