2018/19 சீசன் டோட்டஹம் ஹாட்ஸ்பர் அணிக்கு சிறப்பாகவே இருந்துள்ளது. சாம்பியன்ஸ் லீக்கில் இறுதிப் போட்டி வரை சென்றதோடு அடுத்த வருடமும் சாம்பியன்ஸ் லீக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. மவுரிசியோ போச்செட்டினோவின் பயிற்சியில் டோட்டஹம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவே தெரிகிறது. 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் லூகாஸ் மவுரியோ பிஎஸ்ஜி அணியிலிருந்து டோட்டஹம் சேர்ந்த பிறகு எந்த ஒரு வீரரையும் டோட்டஹம் அணி ஒப்பந்தம் செய்யவில்லை.
ஆனால் சமீபத்தில் டங்கய் டோம்ப்ளி, லோ செல்சா மற்றும் ரியான் சென்னான் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர்களுக்காக நிறைய தொகையை செலவு செய்ததால் அணியில் உள்ள ஒரு சில வீரர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. டோட்டஹம் அணியில் கடந்த இரு சீசன்களாக சிறப்பாக செயல்பட்டாலும் இந்த வருடம் இவர்கள் ஐந்து பேர் அணியிலிருந்து விலக அதிக வாய்புள்ளது.
அந்த ஐந்து வீரர்களை யாரென்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.
1. கிறிஸ்டியன் எரிக்ஸன்
டேனிஷ் வீரரான கிறிஸ்டியன் எரிக்ஸன் வெளியேறுவதால் நிச்சியம் டோட்டஹம் அணிக்கு பாதிப்பு ஏற்படும். ஏனென்றால், கடந்த சீசனில் எட்டு கோல்களையும் 12 முறை சக வீரர்கள் கோல் அடிக்க உதவியும் புரிந்துள்ளார். இதனால் இவரை இழக்க நிச்சியம் விரும்பமாட்டார் பொச்சேட்டினோ. பிரச்சனை என்னவென்றால், கிறிஸ்டியன் டோட்டஹம் அணி ஒப்பந்தத்தின் கடைசி வருடத்தில் இருக்கிறார். இந்த ஒபந்தத்தை அவர் நீட்டிக்க விரும்பவில்லை.
அவர் அடுத்த சீசனில் ரியல் மாட்ரிட அல்லது பார்சிலோனா அணிக்கு செல்ல விரும்புகிறார். ஏற்கனவே லூகா ஜோவிக் மற்றும் ஈடன் ஹசார்டிற்கு நிறைய தொகை செலவழித்துள்ளதால் இவரை ரியல் மாட்ரிட் அணி ஒப்பந்தம் செய்யுமா என்பது சந்தேகமே. தன்னை எந்த அணியும் எடுக்கவில்லை என்றால் டோட்டஹம் அணியின் ஒபந்தத்தை புதுப்பிக்க வாய்புள்ளதாக தெரிவித்துள்ளார் கிறிஸ்டியன்.
2. டோபி அல்டெர்வீல்ட்
எரிக்ஸன் போலவே பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டோபி அல்டெர்வீல்டையும் போச்செட்டினோ தற்போது இழக்க விரும்பவில்லை. கடந்த இரண்டு சீசன்களாக காயம் ஏற்பட்ட போதும், 30 வயதாகியும் 2018/19 சீசனில் ப்ரீமியர் லீக்கில் 34 போட்டிகளில் விளையாடி டோட்டஹம் அணியின் தடுப்பு அரணாக இருந்துள்ளார்.
ஜேன் வெர்டோங்கன் மற்றும் டேவின்சன் சான்செஸ் போன்ற அற்புதமான வீரர்கள் டோட்டஹம் அணியில் இருந்தாலும் அல்டெர்வீல்ட் திறமைக்கு முன் இவர்கள் யாரும் நிகராக மாட்டார்கள். டோட்டஹம் அணியை விட்டு விலகும் விருப்பம் தனக்கு இல்லை என்று அல்டெர்வீல்ட் கூறியிருந்த போதும் இவரது வயது அதற்கு எதிராக இருக்கிறது.
இவரைப் போன்ற வயதான வீரர்களுக்கு நீண்ட கால ஒப்பந்தத்தை வழங்க டோட்டஹம் நிர்வாகம் மறுத்து வருகிறது. தொடர்ச்சியாக அல்டெர்வீல்ட் காயப்படுவதால் இவர் நீண்ட காலம் சிறப்பாக விளையாட முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. இவரது வெளியேற்றம் டோட்டஹம் அணிக்கும் ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றமே.
3. கெய்ரன் டிரிப்பியர்
2018 உலக கோப்பையில் இருந்த ஃபார்மை கொண்டு அப்படியே ப்ரீமியர் லீக்கிலும் விளையாடி அசத்தினார் கெய்ரன் டிரிப்பியர். உலக கோப்பையில் அரையிறுதியில் குரோஷியா அணிக்கு எதிராக அற்புதமான ஃப்ரீ கிக் மூலம் கோல் அடித்த டிரிப்பியர், டோட்டஹம் அணியின் செட் பீஸ் கோலை அடிக்கும் நியுணராக இருக்கிறார்.
ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு டிரிப்பியரின் விளையாட்டு இந்த சீசனில் இல்லையென்றாலும், அவரது தாக்குதல் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆனால் சீரற்று விளையாடுவதே இவரிடம் இருக்கும் குறைபாடு. புல்ஹாம் அணிக்கு எதிராக மூன்று கோல்கள் அடிக்க உதவியதோடு ஃப்ரீ கிக் மூலம் மற்றொரு கோலையும் அடித்தார். இவரது சீரற்ற ஃபார்மால் நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதை தற்போது டோட்டஹம் அணியும் செய்யும் என தெரிகிறது. ஜூவெண்டஸ், நபோலி மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் போன்ற அணிகள் டிரிப்பியரை ஒப்பந்தம் செய்ய விரும்புகிற நிலையில் இவரை வெளியேற்ற இதுவே சரியான தருணம்.