4. டேனி ரோஸ்
இங்கிலாந்தைச் சேர்ந்த டேனி ரோஸ் கடந்த இரு சீசன்களாகவே பயிற்சியாளர் பொச்செட்டினோவின் விருப்ப பட்டியலில் இல்லை. மான்செஸ்டர் சிட்டி அல்லது யுனைடெட் அணிக்கு செல்லப் போகிறார் என செய்தி வெளியானாலும் அந்த ஒப்பந்தம் நினைத்த மாதிரி நிறைவேறவில்லை. அதே சமயத்தில் இந்த வருட சீசனில் டேனி ரோஸ் ஃபார்முக்கு வந்தார். சாம்பியன்ஸ் லீக்கில் அரையிறுதிப் போட்டியில் அஜக்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியதால் இறுதிப் போடியிலும் இடம் பெற்றார்.
ஆனால் இவரை விற்பனை செய்ய டோட்டஹம் தயாராக இருக்கிறது என்பதை கேட்கும்போது ஆச்சர்யமாக உள்ளது. தற்போது சிறந்த ஃபார்மில் இருக்கும் ரியானுக்கு 28 வயது தான் ஆகிறது. ஆனால் இவருக்குப் பதிலாக புல்ஹாம் அணியின் இளம் வீரர் பென் டேவிஸை ஒப்பந்தம் செய்ய நினைக்கிறது. இதற்கிடையில் டேனி ரோஸை ஒப்பந்தம் செய்ய எவர்டான் அணியும் பிஎஸ்ஜி அணியும் விரும்புவதாக தெரிகிறது.
5. விக்டர் வன்யமா
இந்த சீசனில் டோட்டஹம் அணியை விட்டு வெளியேறும் மற்றொரு நபர் விக்டர் வன்யமா. கென்யா நாடைச் சேர்ந்த இவர் டோட்டஹம் அணியில் 2017 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2018-ம் ஆண்டு லிவர்பூல் அணிக்கு எதிராக இவர் அடித்த கோலை யாராலும் மறக்க முடியாது. ஆனால் தொடர்ச்சியான காயத்தால் 2018/19 சீசன் இவருக்கு சிறப்பாக அமையவில்லை.
இந்த சீசனில் வெறும் 14 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள வன்யமா, சாம்பியன்ஸ் லீக் தொடரில் மிகவும் மந்தமாக விளையாடினார். இதனால் அணியில் இவரது இடம் தேவைக்கு அதிகமாக உள்ளது என நினைக்கிறார் பயிற்சியாளர் பொச்செட்டினோ.