மெஸ்ஸியால் முறியடிக்க முடியாத ரொனால்டோவின் 5 சாதனைகள்
கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனெல் மெஸ்ஸி இருவரும் 2007 முதல் இன்று வரை தலைசிறந்த கால்பந்து வீரர்களாக உள்ளனர். இதற்கு காரணம் இருவரின் கடின உழைப்பு மற்றும் அசாதாரண திறமையுமே. இதன் மூலமாக இருவரும் இந்த நூற்றாண்டில் பல சாதனைகளை தன் வசமாக்கி உள்ளார். இதில் மெஸ்ஸியால் முறியடிக்கவே முடியாத ரொனால்டோவின் 5 சிறந்த சாதனைகளைப் பற்றி இங்கு காணலாம்.
#5) இரண்டு விதமான க்ளப் அணிகளுக்காக விளையாடி அனைத்து கோப்பைகளையும் வென்றுத் தந்தது
014/15 ஆம் ஆண்டில் க்ளப் அணிக்கான உலகக்கோப்பையை ரொனால்டோ வென்ற போது , அனைத்து விதமான கோப்பைகளையும் தனிநபராகவும் இரண்டு விதமான க்ளப் அணிக்களுக்காகவும் வென்ற ஒரே வீரர் என்ற சாதனை படைத்தார். ஆனால் மெஸ்ஸி இரு விதமான க்ளப் அணிக்காக கோப்பைகளை கைப்பற்றியது இல்லை. இந்த சாதனையை மெஸ்ஸி முறியடிப்பது மிகவும் கடினமாகவே பார்க்கப்படுகிறது.
#4) தொடர்ந்து ஆறு சீசன்களில் 50+ கோல் அடித்தது
2010/11 முதல் 2015/16 வரை தொடர்ந்து ஆறு சீசன்களில் ரொனால்டோ ரியல் மாடிரிட் அணிக்காக குறைந்தபட்சம் 50 கோல்கள் அடித்துள்ளார். ஆனால் அர்ஜென்டினா அணியின் ஜாம்பவானான மெஸ்ஸி தொடர்ந்து மூன்று சீசனில் மட்டுமே 50க்கும் மேற்ப்பட்ட கோல்களை அடித்துள்ளார். ரொனால்டோவுடன் ஒப்பிடும் போது அதில் பாதியளவைத் தான் மெஸ்ஸி சமன் செய்துள்ளார். மெஸ்ஸி இந்த சாதனையை முறியடிக்க வேண்டுமானால் வரும் காலங்களில் தொடர்ந்து ஆறு சீசன்களில் 50க்கும் மேற்ப்பட்ட கோல்களை அடிக்க வேண்டும். ஆனால் அதற்காக சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. எனவே இந்த சாதனையை மெஸ்ஸி முறியடிப்பது கடினம்.
#3) டாப் - 5 லீக் போட்டிகளில் 40+ கோல்களை இருமுறை அடித்தது
2010/11 சீசனில் ரியல் மாடிரிட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ மொத்தம் 53 கோல்களை அடித்து அசத்தினார். அதற்கு முன்னதாக 2007/08 சீசனில் மான்செஸ்டர் யுனிட்டைட் அணிக்காக விளையாடி போது 40 கோல்களை அடித்திருந்தார். இதன் மூலம் டாப்-5 லீக்குகளில் ஒரே சீசனில் 40-க்கும் மேற்ப்பட்ட கோல்களை இருவேறு கிளப் அணிகளுக்காக அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனால் மெஸ்ஸி பர்சிலோனா அணிக்காக 40க்கும் மேற்ப்பட்ட கோல்களை அடித்ததில்லை. எனவே மெஸ்ஸியால் இந்த சாதனையை முறியடிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் ரொனால்டோ தற்போது நடந்துவரும் லீக்-ல் பாதி சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஜுவண்டஸ் அணிக்காக 20 கோல்களை குவித்துள்ளார். இன்னும் 20 கோல்களை இந்த சீசனில் அடிக்கும் பட்சத்தில் மூன்று வெவ்வேறு க்ளப் அணிகளில் 40 கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் படைப்பார்.