#2) தொடர்ந்து ஆறு முறையாக சாம்பியன்ஸ் லீக் போடாடிகளில் அதிக கோல்களை அடித்தது
ரொனால்டோ சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தொடர்ந்து ஆறு முறை அதிக கோல் அடித்துள்ளார். ஆனால் மெஸ்ஸி வேறும் மூன்று முறை மட்டுமே அதிக கோல்களை அடித்துள்ளார். இது ரொனால்டோவின் சாதனையில் பாதியளவு மட்டுமே. இந்த சாதனையை மெஸ்ஸி முறியடிக்க வேண்டுமானால் இந்த சீசன் முதல் 2024 வரை தொடர்ந்து அதிக கோல் விளாசியவர்கள் பட்டியலில் முதலிடத்தை தக்க வைக்க வேண்டும். மெஸ்ஸிக்கு இப்போதே 30 வயதைக் கடந்ததால் அவர் இந்த சாதனையை கடக்க இயலாது.
#1) மூன்று தனித்தனி க்ளப் அணிகளில் விளையாடி FIFA வேர்ல்டு XI-ல் இடம் பெற்றது
2018-ன் முடிவில் ரொனால்டோ மற்றுமொரு முறை வேர்ல்டு XI அணிக்காக UEFA மூலமாக தேர்வு செய்ப்பட்டார். மொத்தமாக 13வது முறையாக அவர் தேர்வு செய்யப்பட்டார். 2004 முதல் இவர் தேர்வாகி வருகிறார். இதன்மூலம் மூன்று வித்தியாசமான க்ளப் அணிக்காக விளையாடாடி வேர்ல்டு லெவன் அணிக்கு தேர்வான இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த சாதனையை மெஸ்ஸியால் சமன் செய்யவோ அல்லது முறியடிக்கவோ முடியாது. ஏனெனில் இரண்டு க்ளப் அணிகளுக்காக மட்டுமே விளையாடும் மெஸ்ஸி தனது மொத்த நேரத்தையும் பர்சிலோனா அணியிலேயே செலவிடுகிறார். இந்த சாதனையை அவர் முறியடிக்க வேண்டுமானால் அவர் பர்சிலோனா அணியை விட்டு வேளியேற வேண்டும். ஆனால் அது நடப்பது மிகவும் கடினமே.
செய்தி : ஜாக்கோபு ஹேகரூட்
மொழியாக்கம் : கார்த்திக்