இன்று தொடங்கவுள்ள ஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன்ஸ் தொடரில் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக எகிப்து உள்ளது. போட்டியை நடத்தும் நாடு என்ற சாதகம் ஒரு பக்கம் என்றால், முகமது சாலா, முகமது எல்னெனி போன்ற பல நட்சத்திர வீரர்கள் எகிப்து அணியில் உள்ளனர். இதுதவிர மிகவும் எளிதான க்ரூப்பில் இடம் பெற்றுள்ளது எகிப்து. டிஆர் கங்கோ அணியை தவிர வேறு எந்த அணியும் எகிப்திற்கு சவால் கொடுக்க வாய்ப்பில்லை.
இதுவரை ஏழு முறை இந்த கோப்பையை வென்றுள்ள எகிப்து அணி மீது மிகுந்த ஏதிர்பார்ப்பு உள்ளது. கடந்த முறை கோப்பையை தவறவிட்டதால், இந்த ஆண்டு முன்கூட்டியே பயிற்சியை தொடங்கியுள்ளது எகிப்து. ஆனால் சாலா மற்றும் எல்னெனி போன்ற வீரர்கள் ஐரோப்பிய லீக்குகளில் விளையாடிய காரணத்தினால் அவர்கள் தாமதமாகவே கலந்து கொண்டார்கள்.
தனது கேரியரின் உச்சத்தில் சாலா இருப்பதால், அதிர்ஷ்டம் மட்டும் கை கூடி வந்தால் எட்டாவது முறையாக கோப்பையை வென்று சாதிக்கும் எகிப்து. 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன்ஸ் இறுதிப் போட்டியில் ஐந்து முறை சாம்பியனான கேமரூன் அணியிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்றது எகிப்து.
அணுபவம் மற்றும் இளம் வீரர்களை கொண்ட சரியான கலவையில் உள்ளது எகிப்து அணி. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு மற்றும் தாக்குதல் பானியிலான் ஆட்டம் எகிப்திற்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தனது முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது எகிப்து.
முக்கிய வீரர்கள்:
முஹமது சாலா
27 வயதான சாலா கடந்த இரண்டு வருடங்களாக லிவர்பூல் அணியில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து இரண்டாவது வருடமாக ப்ரீமியர் லீக் தங்க காலனி விருதை வென்றதோடு லிவர்பூல் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல உதவி புரிந்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக இறுதிப் போட்டியில் அவரால் 30 நிமிடங்கள் மட்டுமே விளையாட முடிந்தது. சாலா போன்ற வீரர்கள் அணியில் இருப்பது நிச்சியம் பல மடங்கு நம்பிக்கையை எகிப்து அணிக்கு தரும்.
அஹமது எல்மோஹமதி
எகிப்து அணியின் கேப்டனான இவர், தடுப்பாட்ட வீரராக இருந்த போதும் எப்போது வேண்டுமானாலும் கோல் அடிக்கும் திறன் பெற்றவர். எகிப்து அணியில் மிகவும் அணுபவம் வாய்ந்த வீரரான எல்மோஹமதி, ஐரோப்பாவின் பிரபல கிளப்புகளுக்காக விளையாடிய அணுபவம் பெற்றவர். இவரது பங்களிப்பு நிச்சியம் அணிக்கு உதவியாக இருகும்.
முஹமது எல்னெனி
திறமை வாய்ந்த முஹமது எல்னெனி இந்த சீசனில் வெறும் எட்டு லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் இவரது திறமையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. மிட் ஃபீல்டில் இவரது அநாயசமான ஆட்டமும் எதிரணியிடமிருந்து பந்தை கடத்திச் செல்வதும், தேவைப்பட்டால் முன்களத்தில் ஆடும் திறமையும் எகிப்து அணி சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அணி வீரர்கள்:
அஹமது எல் ஷெனாவி, அஹமது ஹெகாசி, மஹ்மூத் அலா, அய்மான் அஷ்ரஃப், அஹமது எல்மோஹமதி, முஹமது எல்னெனி, டரேக் அஹமது, மஹ்மூத் ட்ரெஸ்குட், அமிர் வர்தா, முஹமது சாலா, மர்வான் மொஹசென்.
எகிப்து அணியின் போட்டி அட்டவணை:
எகிப்து Vs ஜிம்பாப்வே – ஜூன் 22
எகிப்து Vs டிஆர் கங்கோ – ஜூன் 27
எகிப்து Vs உகாண்டா – ஜூலை 1