1986 ஆம் ஆண்டு கால்பந்து உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் தடுப்பாட்ட வீரராக இருந்த ஜோஸ் லூயிஸ் பிரவுன் தனது 62வது வயதில் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார்.
அர்ஜென்டினா கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த தடுப்பாட்ட வீரராக விளங்கியவர் ஜோஸ் லூயிஸ் பிரவுன். இவர் "டாடா" எனும் செல்லப் பெயரால் அனைவராலும் பரவலாக அழைக்கப்பட்டவர்.
1986 ஆம் ஆண்டில் ஜாம்பவான் டியாகோ மரடோனா தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி உலக கோப்பையை வென்றது. அதில் மிகச் சிறந்த தடுப்பாட்ட வீரராக திகழ்ந்தவர் ஜோஸ் லூயிஸ். உலக கோப்பை இறுதி போட்டியில் முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார் ஜோஸ் லூயிஸ்.
உலக கோப்பை கால் இறுதிப் போட்டி வரை அர்ஜென்டினா அணியின் முன்னணி தடுப்பாட்ட வீரராக சசாரலா இருந்து வந்தார். அவர் திடீரென உடல்நலக் குறைவால் உலக கோப்பை தொடரை விட்டு வெளியேறியதால் ஜோஸ் லூயிஸ் பிரவுன் அர்ஜென்டினா அணியின் முன்னணி தடுப்பாட்ட வீரராக களம் இறக்கப்பட்டார். அப்போது ஜோஸ் லூயிஸ் மிகவும் அசத்தலாக செயல்பட்டதால், மரடோனாவின் மிகுந்த மதிப்பைப் பெற்றவராக இருந்தார்.
ஜோஸ் லுயிஸ் பிரவுன் அர்ஜென்டினா அணிக்காக 36 போட்டிகளில் ஆடியுள்ளார். உலக கோப்பை இறுதிப்போட்டியில் அடித்த கோலே இவரது முதல் கோலாகும். இவர் இதுவரை 300 லீக் போட்டிகளில் ஆடி இருக்கிறார். அதில் 14 ஆண்டுகள் எச்டிடுஎன்ட்டஸ் அணியில் இருந்திருக்கிறார். மேலும் கொலம்பியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள க்ளப் அணிகளிலும் லூயிஸ் பிரவுன் ஆடியிருக்கிறார்.
அதன் பிறகு சிறிது காலம் அர்ஜென்டினா சர்வதேச அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலும் இருந்து வந்துள்ளார். இவர் 1989 ம் ஆண்டு முதல் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 1995 ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை பலதரப்பட்ட கிளப் அணிகளுக்கு பயிற்சியாளர் பொறுப்பிலும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை அர்ஜென்டினா கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவரது மறைவிற்கு பல முன்னாள் கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவரது மறைவு குறித்து பேசிய அர்ஜென்டினா கால்பந்து வாரியம் கூறுகையில், "சிறந்த தடுப்பு வீரரை நாடு இழந்திருக்கிறது. நிச்சயம் கருப்பு தினமாக கருதவேண்டும். இவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்" என கூறியது.