பார்சிலோனா - வாலன்சியா போட்டி டிரா ஆனதற்கான 3 முக்கிய காரணங்கள்

Ajay V
Neto
Neto

6-1 என கோபா டெல் ரே காலிறுதி ஆட்டத்தில் செவில்லாவை சிதைத்த பார்சிலோனா, இவ்வார லா லிகா போட்டியில் வாலன்சியா அணியை எதிர்கொண்டது. அடுத்த வாரம் ரியல் மாட்ரிடுற்கு எதிராக கோபா டெல் ரே அரையிறுதி இருப்பதனால் மானேஜர் வால்வர்டே செர்ஜியோ புஸ்கெட்ஸிற்கு ஓய்வளித்தார். அவருக்கு பதிலாக கார்லோஸ் அலெனா அணியில் இடம் பெற்றார்.

ஜோர்டை ஆல்பாவுக்கும் ஓய்வளிக்கப்பட்டு ராபர்டோ லெஃப்ட் பேக் ரோலில் ஆடினார். அதற்கு பதிலாக விடால் அணியில் இடம் பிடித்தார். வாலன்சியா மானேஜர் மார்செலீனோ , சான்டீ மினாவிற்கு பதிலாக கமைரோவிற்கு வாய்ப்பளித்தார். இந்த சீசன்‌ சூப்பர் ஃபார்மில் இருக்கும் நெடோ மீண்டும் கோல் கீப்பராக களமிறங்கினார். போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே பார்சிலோனா‌ அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், வாலன்சியா அணியின் பலம் பொருந்திய டிஃபன்ஸை பார்சா வீரர்களால் தாண்ட இயலவில்லை. 25-ஆவது நிமிடத்தில் கவுண்டர் அட்டாக் செய்த வாலன்சியா அணி வீரர் ரொட்ரீகோ சக வீரர் கமைரோவிற்கு அருமையாக பாஸ் செய்தார். கமைரோ கூலாக பந்தை நெட்டினுள் அடிக்க வாலன்சியா போட்டியில் முன்னிலைப் பெற்றது. சில நிமிடங்களுக்கு பிறகு, பார்சா வீரர் ராபர்டோ வாலன்சியா வீரரை தேவையில்லாமல் ஃபவுல் செய்ததால், வாலன்சியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. வாலன்சியா அணி கேப்டன் பரேயோ அவ்வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். 39-ஆவது நிமிடத்தில், நெல்சன் செமடோவை வாலன்சியா வீரர் ஃபவுல் செய்ய, மெஸ்சி அந்த பெனால்டியை பயன்படுத்தி கோல் அடிக்க ஸ்கோர்லைன் 1-2 ஆனது. பிரேக்கிற்கு பின், ஜோர்டை ஆல்பா செமடோவிற்கு பதில் களமிறங்கினார். ஆல்பா-மெஸ்சி காம்போ வாலன்சியா அணி டிஃபென்ஸை அச்சுறுத்தியது. இறுதியில், மெஸ்சி பாக்சிற்கு வெளியே இருந்து அருமையான கோல் அடிக்க போட்டி டிராவில் முடிந்தது. இப்போட்டி டிராவில் முடிந்ததற்கான மூன்று முக்கிய காரணங்கள் இதோ,

1. நெடோவின் கோல்கீப்பிங் ( The Goal keeping of Neto )

லா லிகாவின் வரலாற்றிலேயே கோல் கீப்பிங் தரம் இந்த அளவு அதிகமாக இருந்ததில்லை. பிரேசிலியன் நெடோ பார்சாவின் ஆபத்தான ஆட்டாக்கிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது லா லிகாவின் கோல் கீப்பிங் தரத்தை தெளிவாக புரிய வைத்தது. இவரது இந்த சிறந்த பெர்பார்மன்சின் சிறப்பம்சம் அவரது பொறுமையும் , ஆட்டத்தின் போக்கை கூர்ந்து கவனிக்கும் திறன் தான். பார்சிலோனா ரசிகர்கள் அவரை பல முறை எதிர்த்து கூச்சலிட்ட போதும் கூலாக தன் கடமையை போட்டி முழுதும் சரியாக செய்தார். முதலில் கொடின்ஹோ தூரத்தில் இருந்து அடித்த பலமான ஷாட்டை டைவ் அடித்து சிறப்பாக தடுத்தார். பின், லியோ மெஸ்சி எடுத்த ஃப்ரீ கிக்கை எந்த வித பதட்டமும் இன்றி அசால்டாக பிடித்தார். மீண்டும் லியோ மெஸ்சி வாலன்சியா அணி டிஃபென்டர்களைத் தாண்டி ஒரு ஷாட் அடித்தார். ஆனால், இதை முன்னரே சரியாக கவனித்த நெடோ எளிதாக சேவ் செய்தார்.‌ இவர் லா லிகா சாம்பியன்சுக்கு எதிராத தந்த இந்த பெர்பார்மன்சை வாழ்க்கை முழுதும் மறக்க மாட்டார்.

2. வாலன்சியா மானேஜர் மார்சலீனோவின் நுணுக்கம்

Marcelino
Marcelino

இந்த பலம் வாய்ந்த பார்சிலோனா அணிக்கு எதிராக டீப்பாக டிஃபென்ட் செய்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல. பொதுவாக, அனைத்து மானேஜர்களும் பார்கா வீரர்களை நன்றாக ப்ரஸ் செய்து பந்தை வெல்லவே முயல்வர். ஆனால் மார்செலீனோ, தன் அணிக்கு பழக்கப்பட்ட 4-4-2 பார்மேஷனை ஆட முடிவு செய்தார். அவர் எடுத்த இந்த போல்டான முடிவு அணிக்கு சாதகமாக அமைந்தது. லியோ மெஸ்சியைத் தவிர எந்த ஒரு பார்கா வீரராலும் வாலன்சியா அணி டிஃபன்சை தாண்ட இயலவில்லை. இதனால், பார்கா அணி டிஃபென்டர்ஸ் தங்கள் இடங்களை விட்டு பிட்சில் இன்னும் முன்னேறி வர, வாலன்சியா அணிக்கு கவுண்டர் அட்டாக் செய்ய பல வாய்ப்புகள் கிடைத்தது. அவர்களும் அதை பயன்படுத்தி போட்டியில் முன்னிலைப் பெற்றனர்.

3. மெஸ்சியின் கோல்கள்

Lionel Messi
Lionel Messi

இந்த பெர்பார்மன்ஸ் மெஸ்சியின் லெவலை வைத்து பார்க்கும்போது சாதாரணமான ஒன்று தான் , ஆனால் அவர் இல்லாமல் இருந்திருந்தால் பார்சா இப்போட்டியை டிரா செய்வதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக இருந்திருக்கும். வாலன்சியா அணி முதலில் இரு கோல் அடிக்க மொத்த ஸ்டேடியமும் அமைதியானது. பின் , மெஸ்சி பெனால்டி கோல் அடித்து ரசிகர்களுக்கு சற்று நம்பிக்கை அளித்தார். பாதி நேரத்திற்கு பிறகு, ஜோர்டை ஆல்பா களம் கண்டவுடன் ஆட்டம் சூடு பிடித்தது. அவரும் மெஸ்சியும் காம்பினேஷன் ப்ளேவால், வாலன்சியா அணிக்கு பெரும் தொல்லைத் தந்தனர். இறுதியாக, மெஸ்சி 2-ஆவது கோல் அடிக்க மொத்த ஸ்டேடியமும் அதிர்ந்தது.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now