2. வாலன்சியா மானேஜர் மார்சலீனோவின் நுணுக்கம்
இந்த பலம் வாய்ந்த பார்சிலோனா அணிக்கு எதிராக டீப்பாக டிஃபென்ட் செய்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல. பொதுவாக, அனைத்து மானேஜர்களும் பார்கா வீரர்களை நன்றாக ப்ரஸ் செய்து பந்தை வெல்லவே முயல்வர். ஆனால் மார்செலீனோ, தன் அணிக்கு பழக்கப்பட்ட 4-4-2 பார்மேஷனை ஆட முடிவு செய்தார். அவர் எடுத்த இந்த போல்டான முடிவு அணிக்கு சாதகமாக அமைந்தது. லியோ மெஸ்சியைத் தவிர எந்த ஒரு பார்கா வீரராலும் வாலன்சியா அணி டிஃபன்சை தாண்ட இயலவில்லை. இதனால், பார்கா அணி டிஃபென்டர்ஸ் தங்கள் இடங்களை விட்டு பிட்சில் இன்னும் முன்னேறி வர, வாலன்சியா அணிக்கு கவுண்டர் அட்டாக் செய்ய பல வாய்ப்புகள் கிடைத்தது. அவர்களும் அதை பயன்படுத்தி போட்டியில் முன்னிலைப் பெற்றனர்.
3. மெஸ்சியின் கோல்கள்
இந்த பெர்பார்மன்ஸ் மெஸ்சியின் லெவலை வைத்து பார்க்கும்போது சாதாரணமான ஒன்று தான் , ஆனால் அவர் இல்லாமல் இருந்திருந்தால் பார்சா இப்போட்டியை டிரா செய்வதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக இருந்திருக்கும். வாலன்சியா அணி முதலில் இரு கோல் அடிக்க மொத்த ஸ்டேடியமும் அமைதியானது. பின் , மெஸ்சி பெனால்டி கோல் அடித்து ரசிகர்களுக்கு சற்று நம்பிக்கை அளித்தார். பாதி நேரத்திற்கு பிறகு, ஜோர்டை ஆல்பா களம் கண்டவுடன் ஆட்டம் சூடு பிடித்தது. அவரும் மெஸ்சியும் காம்பினேஷன் ப்ளேவால், வாலன்சியா அணிக்கு பெரும் தொல்லைத் தந்தனர். இறுதியாக, மெஸ்சி 2-ஆவது கோல் அடிக்க மொத்த ஸ்டேடியமும் அதிர்ந்தது.