பார்சிலோனா மற்றும் ரியல் வலோடலிட்‌ அணிகள் மோதும் போட்டிக்கான‌ பிரிவ்யூ

Ajay V
Barcelona vs Real Valladolid
Barcelona vs Real Valladolid

சனிக்கிழமை இரவு நடக்கும் 24-ஆவது லா லிகா போட்டியில் பார்சிலோனா மற்றும் வலோடலிட் அணிகள் மோதும் போட்டி கேம்ப் நவ் மைதானத்தில் நடக்க உள்ளது. பார்சிலோனா அணியைப் பொறுத்தவரை 51 புள்ளிகளோடு லா லிகா தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ரியல் மாட்ரிட் வெறும் 6 புள்ளிகளே பின் தங்கியுள்ள நிலையில் அபாரமாக ஆடி முன்னிலையைத் தக்க வைக்க முயற்சிக்கும். இப்போட்டியில் லியோ மெஸ்சி எப்படி ஆடுகிறார் என்பதை பார்க்க மிக ஆவலாக உள்ளனர். அதற்கு காரணம் அவர் சமீபத்தில் முட்டி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். லியோன் அணிக்கு எதிரான யூ.சி.எல் போட்டி அடுத்து வரவுள்ள நிலையில் , இப்போட்டியில் மெஸ்சி நன்றாக ஆடி கோல் அடித்தால் பார்சா ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். எனினும் பார்சிலோனா மானேஜர் எர்னஸ்டோ வால்வர்டே காயத்திலிருந்து மெஸ்சி முழுமையாக மீண்டு வருவதற்காக இப்போட்டியில் லியோவுக்கு ஓய்வளிக்க வாய்ப்புள்ளது.

பார்சிலோனா அணியின் பார்மைப் பொறுத்த வரை கோபா டெல் ரே காலிறுதி ஆட்டத்தில் செவில்லாவை 6-1 என துவம்சம் செய்த பிறகு ஆடிய மூன்று ஆட்டங்களையும் டிரா செய்துள்ளது. முதலில் கேம்ப் நவ்வில் வாலன்சியா அணிக்கு எதிராக 2-2 என டிரா செய்தது. பின் ரியல் மாட்ரிடுடன் கோபா டெல் ரே அரையிறுதி ஆட்டத்தில் மோதியது. அப்போட்டி 1-1 என டிரா ஆனது. சென்ற வாரம்,‌ அத்லடிக் பில்பாவோவை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொண்டது பார்சிலோனா அணி. அப்போட்டி கோல்களே இல்லாமல் 0-0 என முடிந்தது. மார்க் ஆன்ட்ரஸ் டெர் ஸ்டெகனின் அபார கோல் கீப்பிங்கால் பார்சிலோனா அணி நூலிழையில் தோல்வியில் இருந்து தப்பியது. காயம் காரணமாக ஜோர்டை ஆல்பாவுக்கு பதிலாக நெல்சன் செமடோ அப்போட்டியில் லெஃப்ட் பேக் ரோலில் ஆடினார். இப்போட்டியில் ஆல்பா மீண்டும் அணியில் இடம் பெறலாம்‌ என கூறப்படுகிறது. லியோன் அணிக்கு எதிராக யூ.சி.எல் போட்டி இருப்பதால் அனுபவமிக்க செர்ஜியோ புஸ்கட்ஸிற்கு ஓய்வளிக்கப்படலாம்.

ரியல் வலோடலிட் அணியைப் பொறுத்த வரை 26 புள்ளிகளோடு லா லிகா தரவரிசையில் 15-ஆவது‌ இடத்தில் உள்ளது. இரு வாரங்களுக்கு முன்பு , ஹுயஸ்கா அணியுடன் 0-4 என படுதோல்வி அடைந்து. அப்போட்டி அணியின் நம்பிக்கையை பெரிதும் பாதித்து விட்டது என கூறலாம். அப்போட்டிக்கு பிறகு வில்லாரியல் அணியுடன் சொந்த மண்ணில் ஒரு கோல் கூட அடிக்காமல் 0-0‌ என டிரா செய்தது. ஜனவரியில் எய்பார் அணியில் இருந்து லோனில் வந்த வின்கர் பாப்லோ ஹெர்வியாஸ் முழங்கால் காயத்தால் அவதிப்படுவதால், இப்போட்டியில் பங்கேற்பது கடினம். அட்டாக்கிங் மிட்ஃபீல்டரான ஆஸ்கர் ப்லானோவும் ரெட் கார்ட் சஸ்பென்ஷன் காரணமாக போட்டியில் பங்கேற்க மாட்டார்.

பார்சிலோனா ( பாசிபிள் 11 ) : டெர் ஸ்டெகன், ஜெரார்டு பீகே , தாமஸ் வெர்மலன், நெல்சன் செமடோ, ஜோர்டை ஆல்பா, கார்லோஸ் அலெனா, இவான் ராகிடிச், அர்துரோ விடால், லியோனல் மெஸ்சி, ப்ரின்ஸ் போடன்ங் , ஃபிலிப்பே கோடின்யோ.

ரியல் வலோடலிட் ( பாசிபிள் 11) : ஜோர்டை மாசிப் , கிகோ, பெர்னான்டஸ், நாச்சோ, மொயானோ, கெகோ, மிச்சல் , ஹெர்வியாஸ், கார்டியோலா, டேனியல் வெர்டே, எனஸ் உனால்.

App download animated image Get the free App now