பார்சிலோனாவின் தோல்விக்கு பயிற்சியாளரே காரணம் 

Chandru
கோப்பா டெல் ரே போட்டியின் போது பயிற்சியாளர் எர்னாஸ்டோ வால்வர்டே
கோப்பா டெல் ரே போட்டியின் போது பயிற்சியாளர் எர்னாஸ்டோ வால்வர்டே

பார்சிலோனா அணியின் பயிற்சியாளரான எர்னாஸ்டோ வால்வர்டே சமூக தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானர். 25 மே 2019 அன்று நடந்த கோப்பா டெல் ரே இறுதியாட்டத்தில் 2-1 என்ற கணக்கில் வேலன்ஸியா அணி பார்சிலோனா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது, இந்த தோல்வியால் பெரிதும் பாதிப்படைந்த பார்சிலோனா ரசிகர்கள் சமுக தளங்களில் பயிற்சியாளரான எர்னாஸ்டோ வால்வர்டே தான் இந்த தோல்விக்கு என்று விமர்சித்து கேலிக்கை மீம்ஸ் போட்ட வண்ணமாக உள்ளனர். "#valavardeout" என்னும் சொல் இணையத்தில் வைரலாகி உள்ளது.

பார்சிலோனா அணி இந்த வருடம் ஆரம்பம் நன்றாக அமைந்திருந்தது. லா லீகாவில் வென்று கோப்பையை வென்றது பார்சிலோனா. சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் கோப்பா டெல் ரே பார்சிலோனா கட்டுபாட்டுக்குள் சென்று கொண்டிருக்கையில் சாம்பியன்ஸ் லீக் அரை இறுதி போட்டியில் 4-0 என்ற கணக்கில் லிவர்பூல் அணி வென்றது. பார்சிலோனா மற்றும் அதன் ரசிகர்கள் இந்த தோல்வியால் அதிர்ந்து போனார்கள்.

தோல்வியில் இருந்து மீழ்வதற்கு கோப்பா டெல் ரே கோப்பையை வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடியது பார்சிலோனா. ஆனால் வேலன்ஸியா அணி 2-1 என்ற கணக்கில் பார்சிலோனாவை வென்றது. இதனால் இந்த முறையும் தோல்வியை தழுவியது பார்சிலோனா. சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமுக தளங்களில் தெரிவிக்கையில் , பலரும் பார்சிலோனாவின் பயிற்சியாளரான எர்னாஸ்டோ வால்வர்டேவை விமர்சித்தனர். அவரே இந்த இரண்டு தோல்விகளுக்கும் காரணம் என்று கருத்துக்களை பதிவேற்றினர்.

தோற்றதற்கான காரணம் என்ன என்று பலரும் கூறுகையில் அது என்னவென்றால் பயிற்சியாளரின் தவறுதலான தந்திரபோகங்களே ஆகும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். விங்க் கார்ணரில் விளையாடும் மால்கம் பிலிபி சில்வா டீ ஒலிவேவரிய தான் விவாதத்தின் முக்கிய அங்கம். மால்கம்மிற்கு பெஞ்சில் ஓய்வு கொடுத்துவிட்டு அவரின் இடத்தில் தடுப்பு மத்தி ஆட்டகாரரான (defensive mid fielder) செர்ஜி ராபர்டோவை விளையாட வைத்ததே இந்த தோல்விக்கான காரணம் என்று பலரும் கூறியுள்ளனர்.

தோல்வியின் விரக்தியில் மெஸ்ஸி

அது மட்டுமின்றி லூயிஸ் சுவரஸ் மற்றும் ஒவுஸ்மானே டெம்புலே ஆகியோர் காயம் காரணமாக விளையாட வில்லை, இதனால் மால்கம்மை அமர வைத்துவிட்டு, ரபர்டோவை எப்போதும் ஆடும் இடத்திலிருந்து மாத்தி குளறுபடியாகிவிட்டது. மால்கம் சூழ்நிலையை தவிர்த்து அட்டாக்கிங் மிட் பில்டர் ஆன அருட்ரோ சரியான ஆரம்பத்தை கொடுக்க தவறி விட்டார், குரோஷிய வீரர் இவான் ராகிடிக்கும் அன்றைய நாள் நன்றாக அமையவில்லை. இதனால் பார்சிலோனா அணி கோல் அடிப்பதற்கு தத்தளித்தது.

இதை பயன்படுத்திக் கொண்ட வேலன்ஸிய அணி துவக்கத்திலேயே இரண்டு கோல்களை அடித்து விட்டது, 21 ஆவது நிமிடத்தில் கே.கமீரியேவும், 33 ஆவது நிமிடத்தில் ரோட்ரிகோவும் கோல் அடித்து வெற்றியை நிர்ணயித்தனர், பார்சிலோனாவால் ஆரம்பததில் கோல் அடிக்க வாய்புக் கிடைக்கவில்லை, இருப்பினும் 73 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்தார், அந்த ஆறுதல் கோலுடன் பார்சிலோனா தன் கணக்கை முடித்துக் கொண்டது. இந்த முறை ஒரே கோப்பையுடன் பார்சிலோனாவின் சீஸன் முடிவடைகிறது.

Edited by Fambeat Tamil