பார்சிலோனாவை சமாளித்து வெற்றிபெறுமா லயொன்னைஸ், இரண்டாவது லெக் போட்டி ஒரு பார்வை 

பார்சிலோனா vs ஒலிம்பிக் லயொன்னைஸ்
பார்சிலோனா vs ஒலிம்பிக் லயொன்னைஸ்

UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரின் ரவுண்டு 16 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கடைசி போட்டியாக லயோன் அணி பார்சிலோனா அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகள் மோதிய முதல் லெக் போட்டியில் யாருக்கும் கோல் இன்றி சமனில் முடிந்தது. இதனால் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது மெஸ்ஸியின் படை, மறுபுறம் லயோன் அணியினர் இந்த போட்டியில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற காத்திருக்கிறது.

பார்சிலோனா அணியை பொறுத்தவரை "லா லிகா" தொடரில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து முன்னிலையில் உள்ளது. வல்லேன்க்கோ அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என வென்று அசத்தியது. மேலும் "கோபா டி ரேய்" தொடரின் இறுதி ஆட்டத்தில் வாலென்சியா அணியை எதிர்கொள்கிறது. இப்படி அணைத்து தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்தும் பார்சிலோனா அணி ஏனோ கடந்த மாதம் நடந்த முதல் லெக் போட்டியில் சோபிக்க தவறியது.

தொடர்ந்து 15 சீசன்களாக நாக் அவுட் சுற்றை விளையாடி வருகிறது பார்சிலோனா அணி. இந்த முறை தனது பரம எதிரியான ரியல் மாட்ரிட் அணி காலிறுதிக்கு தகுதி பெறாததால், இந்த முறை கோப்பையை வெல்லவேண்டும் என வேட்கையுடன் காத்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி இந்த சீசனிலும் அதிக கோல் அடித்தவர் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இதனால் ஐரோப்பா தங்க காலணி பெறுவதில் ரொனால்டோவிடம் போட்டியில் உள்ளார்.

பார்சிலோனா vs ஒலிம்பிக் லயொன்னைஸ் எதிரான முதல் லெக் போட்டியின் ஒரு காட்சி
பார்சிலோனா vs ஒலிம்பிக் லயொன்னைஸ் எதிரான முதல் லெக் போட்டியின் ஒரு காட்சி

கடந்த கால விபரங்களை ஆராய்ந்து பார்க்கையில் வெல்லவே கடினமான பார்சிலோனா அணியை அசைத்து பார்த்த பூரிப்பில் உள்ளது லயொன்னைஸ் அணி. அந்த அணியின் தடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பால் பார்சிலோனா அணியை தடுத்து நிறுத்தியது. இதே போன்ற ஒரு ஆட்டத்தை இன்று வெளிக்கொணரும் பட்சத்தில் பெனால்டி ஷூட் அவுட் மூலம் வெற்றியை நிர்ணயிக்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி லயொன்னைஸ் அணி காலிறுதிக்கு தகுதி பெறலாம். ஆனால் சொல்வது எளிது செய்வது அரிது என்பது போல இது ஒரு கடினமான பணியாகும். மேலும் வெளி ஆடுகளங்களில் இதுவரை லயொன்னைஸ் அணி வென்றதே இல்லை. இது அந்த அணிக்கு ஒரு பின்னடைவான விஷயமாகும். குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், கடைசியாக சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடிய 5 போட்டிகளிலும் அந்த அணி ட்ரா மட்டுமே செய்துள்ளது. எனவே பார்சிலோனா அணியை எப்படி சமாளிக்கப் போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

அணிகள் விபரம்:

பார்சிலோனா:

ராக்கிடிக் மற்றும் டேம்பேலே கடந்த லா லிகா போட்டியில் ஓய்வில் இருந்தனர். அவர்கள் இந்த போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் கொடின்ஹோ மற்றும் விட்டல் பெஞ்சில் அமர வாய்ப்புள்ளது.

லெங்க்லெட், உமிடிடி பதிலாக களமிறங்க உள்ளார். காரணம் முழங்கால் பிரச்சனை காரணமாக உமிடிடி விலகியுள்ளார்.

ஒலிம்பிக் லயொன்னைஸ்:

அணியின் கேப்டனான நபில் பக்கீர் சஸ்பென்ஷன் காரணமாக முதல் லெக் போட்டியில் விளையாடவில்லை. இந்த போட்டியில் அவர் களமிறங்குகிறார்.

டீபே கடந்த சில போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். ஆனால் இந்த போட்டியில் அணிக்கு திரும்புகிறார்.

பார்சிலோனா எதிர்பார்க்கப்படும் XI: (4-3-3)

டெர் ஸ்டெகேன்; செமிடோ, பிகு, லெங்க்லெட், ஆல்பா; ராக்கிடிக், பஸ்கியூட்ஸ், ஆர்தர்; மெஸ்ஸி, சவரெஸ், ஓ டெம்பெலே.

லயொன்னைஸ் எதிர்பார்க்கப்படும் XI : (4-3-3)

லோபஸ்; டுபோய்ஸ், மர்ஸலோ, டேனையர், மெண்டி; டொம்பேலே, டௌசர்ட், அவுர்; டீபே; எம் டெம்பெலே, பக்கீர்.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now