பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒவ்வொரு க்ளப் அணியிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இதில் ஒரு சிலரே ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியவர்களாக உள்ளார்கள். அப்படி, கால்பந்தில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் 5 மிட் ஃபீல்டர்களை இந்தக் கட்டுரையில் பார்க்கவுள்ளோம்.
5. கெவின் டீ ப்ரூனே – மான்செஸ்டர் சிட்டி
உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்று கெவின் டீ ப்ரூனேவை தைரியமாக கூறலாம். அதுமட்டுமல்லாமல், இவர் ஒரு முழுமையான வீரர். க்ரியேட்டிவ், வலிமை, திறன் என அனைத்தும் ஒருங்கே பெற்றுள்ள ப்ரூனே, பந்தை இன்னொரு வீரருக்கு பாஸ் செய்வதிலும் இரு கால்களாலும் டிபரிப்பிள் மற்றும் க்ராஸ் செய்வதிலும் வல்லவர்.
ஆட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தன் பங்கை செலுத்தி வருபவர் இந்த பெல்ஜீயன் நாட்டுக்காரர். கடந்த வருட சீசனில் வெற்றி வாகை சூடிய மான்செஸ்டர் சிட்டி அணிக்கு முக்கிய வீரராக திகழ்ந்த ப்ரூனே, காயம் காரணமாக இந்த வருடம் ஏழு போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டார்.
4. டேவிட் சில்வா – மான்செஸ்டர் சிட்டி
கடந்த எட்டு வருடங்களாக மான்செஸ்டர் சிட்டி அணியின் முக்கிய வீரராக திகழும் டேவிட் சில்வா, அந்த அணியின் சார்பாக இதுவரை மூன்று முறை கோப்பை வென்றுள்ளார். இதில் 2017/18 சீசன் இவருக்கு தனிப்பட்ட அளவில் சிறப்பானதாக இருந்தது. வலதுபுறம் விளையாடும் திறன் பெற்ற சில்வா, கார்டியாலோவால் நம்பர் 10 பொசிஷனில் பயன்படுத்தப்பட்டார்.
எதிரணியின் தடுப்பாட்ட வீரர்களிடையே உள்ள இடைவெளியை சரியாக பயன்படுத்துபவர். மேலும் தன்னிடமுள்ள டெக்னிக்கல் திறமையால் தனது திட்டத்தை ஆட்டத்தில் கச்சிதமாக செயல்படுத்தக் கூடியவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது கோல் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு 33 வயதாகியும் சற்றும் தளராமல் விளையாடி வருகிறார்.
3. டோனி க்ரூஸ் – ரியல் மாட்ரிட்
டோனி க்ரூஸை ரியல் மாட்ரிட் அணியின் இதய துடிப்பு என்றே கூறலாம். ஆட்டத்தில் வேகத்தை கூட்டுவதோடு களத்தின் மையப் பகுதியில் பந்தின் போக்கை தீர்மானிப்பவர் இவரே. தன் காலுக்கு வந்த பந்தை அவ்வுளவு சீக்கிரத்தில் எதிரணி வீரர்களுக்கு விட்டுகொடுக்காத க்ரூஸ், தன் அணி வீரர்களிடம் பந்தை கடத்துவதில் இவரை மிஞ்ச ஆள் இல்லை.
மேலும், புத்திசாலியான வீரரும் கூட. எப்போது வேகத்தை கூட்ட வேண்டும், போட்டியில் எப்போது வேகத்தை குறைக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பார். 2014-ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டதிலிருந்து தனது சீரான ஆட்டத்தை வழங்கி வருகிறார் க்ரூஸ்.
2. ங்கோலா காண்டே – செல்சீ
இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வீரர்களை விட சற்று வித்தியாசமானவர் காண்டே. ஆனால் உலகின் சிறந்த மிட் ஃபீல்டர்களில் ஒருவர் என்று சந்தேகம் இல்லாமல் கூறலாம். இரண்டு முறை ப்ரீமியர் லீக் கோப்பையை வென்றுள்ளதோடு கடந்த ஆண்டு உலக கோப்பை என்ற மகுடத்தையும் வென்றுள்ள காண்டே, தான் விளையாடும் எந்த அணிக்கும் துருப்புச் சீட்டாக உள்ளார்.
வேகம், புத்திசாலித்தனம் மற்றும் மன உறுதி கொண்ட காண்டே, களத்தில் தன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை மட்டும் பார்த்துக் கொள்ளும் மிட் ஃபீல்டர் என்று இவரை குறுக்கி விட முடியாது. இவரை தங்கள் அணியில் சேர்க்க பல அணிகள் தயாராக இருக்கின்றன.
1. லூகா மோட்ரிக் – ரியல் மாட்ரிட்
மெஸ்ஸி, ரொனால்டோ தான் பலோன் டி ஆர் விருதை பெற முடியும் என்ற நிலையை தகர்த்து போன வருடம் முதல் முறையாக இந்த விருதை வென்றார் மோட்ரிக். இவரது கால்பந்து கேரியரில் கடந்த வருடம் மிகச் சிறப்பானது என்று கூறலாம். ரியல் மாட்ரிட் அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பை வெல்ல உதவியதோடு தனது தேசிய அணி குரோஷியா முதல் முறையாக உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு செல்லவும் காரணமாக இருந்தார் மோட்ரிக்.
ஆட்டத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமையுள்ள மோட்ரிக், தன்னை சுற்றியுள்ள வீரர்களின் விளையாட்டையும் உயர்த்தி செல்வாக்கு மிக்க மிட் ஃபீல்டராக திகழ்கிறார். இந்த வருடம் அவ்வுளவு சிறப்பாக அமையாவிட்டாலும் தன் சிறப்பான ஆட்டத்தை அவர் விரைவில் மீட்டுக் கொள்வார் என எதிர்பார்க்கலாம்.