ஐரோப்பாவில் ஆண்டு தோறும் நடத்தப்படும் மிகப் பெரிய கால்பந்து தொடராக சாம்பியன்ஸ் லீக் தொடர் இருந்து வருகிறது. இந்த தொடர் இப்பொழுது ரவுண்டு 16 சுற்றை எட்டியுள்ளது. கோப்பையை வெல்லும் முனைப்புடன் அனைத்து அணிகளும் வரிந்துகட்டி விளையாடி வருகிறது. இதற்கு பெரும் உதவியாக இருப்பது அந்த அணிகளின் முன்கள வீரர்களான பினிஷெர்களையே சேரும். நடுகள வீரர்கள் நயமாக தட்டி தரும் பந்தை பினிஷெர்கள் லாவகமாக வலைக்குள் அடித்து கோலாக மாற்றுவர். இந்த சீசனில் அப்படியாக சிறந்த விளங்கி வரும் பினிஷெர்களை பற்றி காண்போம்.
#5 ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி- பேயர்ன் முனிச்
போலந்து நாட்டை சேர்ந்த லெவண்டோவ்ஸ்கி, பேயர்ன் முனிச் அணிக்காக முன்கள வீரராக விளையாடி வருகிறார். அந்த அணியில் பல முன்னணி வீரர்கள் நிரம்பி வழிந்தாலும் இவருக்கு நிகராக யாருமில்லை. இவர் எந்த திசையிலிருந்தும் கோல் அடிக்கும் திறமை வாய்ந்தவர்.அப்படியாக இந்த சீசனிலும் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 8 கோல் அடித்து முன்னிலை வகிக்கிறார்.
இந்த சீசனின் நிலவரங்கள்:
போட்டிகள் : 40
கோல்கள் : 25
கோல் போட உறுதுணையாக இருந்தது: 9
#4 ஹரி கேன்- டோட்டேன்ஹம் ஹாட்ஸ்பர்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர முன்கள வீரர் ஹரி கேன். இவர் தற்போது ரஷ்யாவில் நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்து தொடரில் சிறப்பாக விளையாடி தங்க காலனி பெற்றது குறிப்பிடத்தகுந்த ஒன்று. இப்படி சிறந்த பார்முடன் இந்த சீசனில் களமிறங்கினார். இளம் வயது வீரரான இவர் தனது அணிக்காக ஆங்கிலப் பிரீமியர் லீக் தொடரில் 25 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். பின்பு ஒரு சிறிய காயம் காரணமாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் சிறுது ஓய்வில் இருந்தார். இருந்த போதும் தற்போது 16 கோல்களுடன் இந்த சீசனை தொடர்கிறார்.
இந்த சீசனின் நிலவரங்கள்:
போட்டிகள் : 42
கோல்கள் : 27
கோல் போட உறுதுணையாக இருந்தது: 7
#3 கிளையன் ம்பாப்பே- பி எஸ் ஜி
கால்பந்து உலகின் இளம் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கபடும் இவர் தற்போது பிரான்ஸ் அணியான பி எஸ் ஜி-க்கு விளையாடி வருகிறார். உலகக்கோப்பை போட்டியில் அர்ஜென்டினாவை தனி ஆளாக வென்று காட்டியவர் இவர். மேலும் லீக்-1 என்றழைக்கப்படும் உள்ளூர் தொடரில் 22 கோல்கள் அடித்து முன்னனியில் உள்ளார். சாம்பியன்ஸ் லீக் பொறுத்தவரை தனது அணியை சேர்ந்த நெய்மார் இல்லாத குறையை இவர்தான் தீர்த்து வருகிறார். மேலும் மான்செஸ்டர் அணிக்காக 2-0 என வெல்ல உறுதுணையாக இருந்தார்.
இந்த சீசனின் நிலவரங்கள்:
போட்டிகள் : 42
கோல்கள் : 32
கோல் போட உறுதுணையாக இருந்தது: 10
#2 கிறிஸ்டியானோ ரொனால்டோ- ஜுவென்டஸ்
தற்போதைய உலகின் முன்னணி கால்பந்து வீரர் என்றால் நினைவுக்கு வரும் வீரர்களில் ஒருவரான ரொனால்டோ, மாட்ரிட் அணியிலிருந்து விலகி ஜுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஜுவென்டஸ் அணி இதுவரை சாம்பியன்ஸ் லீக் தொடரை வென்றதில்லை. இந்த குறையை இவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளது அந்த அணி.
இந்த சீசனின் நிலவரங்கள்:
போட்டிகள் : 40
கோல்கள் : 26
கோல் போட உறுதுணையாக இருந்தது: 10
#1 லியோனல் மெஸ்ஸி- பார்சிலோனா
அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இது இருக்கலாம். ஆம், அர்ஜென்டினா அணியை சேர்ந்த மெஸ்ஸி தற்போது சமீபகாலமாக சொதப்பி வருகிறார் என்பதனால். ஆனால் சாம்பியன்ஸ் லீக்கின் இந்த சீசனை பொருத்தமட்டில் அது தவறு. இந்த சீசன் அவருக்கு வழக்கம் போல சிறப்பான சீசனாகும். தற்போது பார்சிலோனா அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார், அதனால் ஐரோப்பா காலனி விருதுக்கான பட்டியலில் முதல் இடத்தில உள்ளார்.
இந்த சீசனின் நிலவரங்கள்:
போட்டிகள் : 39
கோல்கள் : 35
கோல் போட உறுதுணையாக இருந்தது: 14