சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதி போட்டியில் பார்சிலோனா அணியை 4-0 என வீழ்த்தி பைனலுக்குள் கம்பீரமாக கால் பதித்தது லிவர்பூல் அணி.
ஐரோப்பிய கால்பந்தாட்ட தொடரான சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் தற்போது காலிறுதி சுற்றுகள் முடிந்து அரையிறுதிச் சுற்றினை எட்டியுள்ளது. காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இரு பிரீமியர் லீக் அணிகளாக டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் மற்றும் லிவர்பூல், ஸ்பெயின் நாட்டு லீக் போட்டியான லா லிகாவில் ஆடும் கிளப் அணியான பார்சிலோனா அணியும், டச்சு நாடுகளின் கால்பந்து அணிகளில் ஆம்ஸ்டர்டம் நாட்டை சேர்ந்த கிளப் அணியான அஜாக்ஸ் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
இதில் லிவர்பூல் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில் கண்ணோட்டத்தை இங்கு காண்போம்
பார்சிலோனா vs லிவர்பூல் - அரையிறுதி முதல் லெக் கண்ணோட்டோம்
அரையிறுதி சுற்றின் முதல் லெக் போட்டி பார்சிலோனாவில் உள்ள கேம்ப் நௌ மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மைதானத்தின் பலத்துடன் களமிறங்கிய பார்சிலோனா அணியை எதிர்கொள்ள காத்திருந்தது லிவர்பூல் அணி. துவங்கிய நிமிடத்தில் இருந்தே லிவர்பூல் அணியின் மீது ஆதிக்கம் செலுத்தியது பார்சிலோனா. லிவர்பூல் அணியின் பெனால்டி பாக்ஸ் பகுதியிலேயே பெருவாரியான நேரம் ஆட்டம் காட்டிய பார்சிலோனா முன்கள வீரர்களை தடுக்க முடியாமல் தினறினர் லிவர்பூல் பின்கள வீரர்கள்.ஆட்டத்தின் 26வது நிமிடத்த்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லூயிஸ் சுவரேஸ் ஜோர்டி ஆல்பா கொடுத்த பந்தை நேர்த்தியாக எடுத்து சென்று தனது முன்னாள் அணிக்கு எதிராக கோல் அடித்து அசத்தினார். முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது பார்சிலோனா.
இதற்கு பதிலடி கொடுக்க முயர்சிக்க இரண்டாம் பாதியில் களமிறங்கிய லிவர்பூல் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், கோலை சமன் செய்ய அந்த அணி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது.ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் சுவரேஸ் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு திரும்பியது, அதை அப்படியே கோல் போஸ்டிற்குள் திருப்பி அடித்து கோல் ஆக்கினார் நட்சத்திர வீரர் மெஸ்ஸி. மீண்டும் 82வது நிமிடத்தில் ஒரு பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி லிவர்பூல் அணியின் தடுப்பு சுவர் மற்றும் கோல் கீப்பர் அலீஸான் இருவரையும் தாண்டி கோல் போஸ்டிற்குள் லாவகமாக அடிக்க, 3 - 0 என அரையிறுதியின் முதல் லெக் போட்டியில் முன்னிலை பெற்றது பார்சிலோனா.
லிவர்பூல் vs பார்சிலோனா - அரையிறுதி இரண்டாவது லெக் கண்ணோட்டோம்
சொந்த மண்ணில் பெற்ற முன்னிலையுடன் களமிறங்கிய பார்சிலோனா அணிக்கு லிவர்பூல் மைதானத்தில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது போட்டி துவங்கிய ஏழாவது நிமிடத்திலேயே லிவர்பூல் அணியின் முன்கள வீரர் ஆரிஜி ஒரு கோல் அடித்து 1-3 என துவங்கி வைத்தார். அடுத்தடுத்து முயர்ச்சிகள் எடுத்தும் முதல் பாதியில் இரண்டாவது கோலை லிவர்பூல் அணியால் அடிக்க முடியவில்லை.
இன்னும் சமன் செய்ய இரண்டு கோல்கள் தேவை என்றிருந்த நிலையில் களமிறங்கிய லிவர்பூல் அணிக்கு போட்டி துவங்கிய 54வது மற்றும் 56வது நிமிடத்தில் என அடுத்தது இரு கோல்கள் அடித்து லிவர்பூல் அணியை 3-3 என சமநிலைக்கு எடுத்து சென்றார் வினால்டம். இன்னும் ஒரு கோல் அடித்தால் சாம்பியன்ஸ் லீக் பைனலுக்குள் சென்றிட முடியும் என இருந்தபோது, அதை 79வது நிமிடத்தில் சரியா செய்து பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சி அளித்தார் ஒரிஜி. இதனால் அரையிறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பைனலுக்குள் சென்றது லிவர்பூல் அணி.
அஜாக்ஸ் vs டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் இரு அணிகள் மோதும் ஆட்டத்தில், வெற்றி பெறும் அணியுடன் லிவர்பூல் அணி மோதும்.