2018-19 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடர் பரபரப்பான லீக் சுற்றுகள் முடிந்து, தற்பொழுது காலிறுதி சுற்றுக்களை எட்டியுள்ளது. குறிப்பாக தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்த ரியல் மாட்ரிட் அணி அஜாக்ஸ் அணியிடம் சுற்று 16ல் தோல்வியை சந்தித்து அதிர்ச்சி அளித்தது. அதேபோல, பாரிஸ் அணி மான்செஸ்டர் யுனைடெட் அணியிடம் கடைசி நிமிடத்தில் தோல்வியை தழுவி வெளியேறியது.
காலிறுதி முதல் லெக்
காலிறுதிப் போட்டியில் முதல் லெக் அஜாக்ஸ் அணியின் ஜூஹான் க்ருய்ப் மைதானத்தில் நடைபெற்றது அதில் பரபரப்பாக சென்ற முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தது, அனைத்தும் வீணாக.. 45வது நிமிடத்தில் ஜுவெண்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் 1-0 என ஜுவெண்டஸ் அணி முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் முதல் நிமிடத்திலேயே அஜாக்ஸ் அணி பதிலடி கொடுத்து அசத்தியது. 46வது நிமிடத்தில் இளம் முன்கள வீரர் நேரெஸ் கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். 51வது நிமிடத்தில் அஜாக்ஸ் வீரர் டீ ஜங் கோல் அடிக்க அது ஆஃப் சைடு - கோல் ஆனது. அதேபோல், 72வது நிமிடத்தில் ஜுவெண்டஸ் வீரர் டியகோ கோஸ்ட்டா கோல் அடிக்க முயற்சிக்க பந்து கோல் போஸ்டில் பட்டு வெளியேறியது. பின்னர், கூடுதலாக 5 நிமிடங்கள் கொடுத்தும் இரு அணிகளும் இறுதி வரை இரண்டாவது கோல் அடிக்கததால், முதல் லெக் ஆட்டம் 1 - 1 என சமனில் முடிந்தது.
இரண்டாம் லெக் - ஜுவெண்டஸ் மைதானம்
காலிறுதி சுற்றின் இரண்டாம் லெக் ஜுவெண்டஸ் அணியின் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சமநிலை கோல் வித்தியாசத்தில் இருக்கும் இரு அணிகளும் முன்னிலை பெற்று அடுத்த சுற்றுக்கு செல்ல முயற்சிக்கும் என்பதால், போட்டியில் விருவிறுப்புக்கு சற்றும் குறைவு இருக்காது.
நட்சத்திர வீரர்கள்
அஜாக்ஸ் அணி - ஜியாச், நேரெஸ், டாடிச்
ஜுவெண்டஸ் அணி - கிறிஸ்டியானோ ரொனால்டோ, மரியோ மண்ட்ஜூக்கிச்
சாத்தியமான அணி வீரர்கள்
அஜாக்ஸ் அணி
கோல் கீப்பர் - ஓநானா;
பின்கள வீரர்கள் - வால்ட்மேன், டி லிக்ட், ப்ளைண்ட், சிங்க்கிராவன்;
நடுகள வீரர்கள் - டி ஜொங், ஸ்கோன், சீயெக், வான் டி பீக், நீஸ்;
முன்கள வீரர் - டாடிச்;
ஜுவெண்டஸ் அணி
கோல் கீப்பர் - செசெச்னி;
பின்கள வீரர்கள் - கேன்சிலோ, பொன்னுசி, ருகானி, சாண்ட்ரோ;
நடுகள வீரர்கள் - பென்டன்கூர், பஜனிக், மாடுடி;
முன்கள வீரர் - பெர்னாரடேசி, மன்ட்ஸ்யூக், ரொனால்டோ;
நேருக்கு நேர்
கடந்த 10 முறை மோதிய இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் அனைத்திலும் வென்றது ஜுவெண்டஸ் அணியே.
1973 ஆம் ஆண்டு ஐரோப்பா கோப்பை போட்டியில் ஒரு முறை அஜாக்ஸ் அணி 2-1 என வென்றது.
கணிப்பு
அஜாக்ஸ் அணியிடம் கடந்த 10 முறை மோதியதில் ஜுவெண்டஸ் அணி தோல்வியை பெற்றதே இல்லை என்பதாலும், ஜுவெண்டஸ் அணி அதன் சொந்த மைதானத்தில் ஆடுவதாலும், இரண்டாவது லெக் போட்டியில் ஜுவெண்டஸ் அணி வென்று காலிருதிக்குள் நுழையும் என கணிக்கப்படுகிறது.