2018-19 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் காலிறுதி சுற்றை எட்டியுள்ளது. இதில் காலிறுதி சுற்றின் முதல் சுற்றில் லிவர்பூல் மற்றும் போர்டோ ஒரு போட்டியிலும், டோட்டிங்ஹாம் மற்றும் மான்செஸ்டர் சிட்டி மற்றுமொரு போட்டியிலும் மோதின.
டோட்டிங்ஹாம் மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதிய போட்டியில் டோட்டிங்ஹாம் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
அடுத்ததாக நடந்த போட்டியில் லிவர்பூல் அணி 2-0 என போர்டோ அணியிடம் முன்னிலை வகித்துள்ளது
லிவர்பூல் vs போர்டோ - துவக்கத்தில் இருந்து ஆதிக்கம்
போட்டி துவங்கிய 5வது நிமிடத்திலேயே லிவர்பூல் அணி கோல் அடித்து போர்டோ அணிக்கு அதிர்ச்சியளித்தது. லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் பிர்மின்ஹோ பந்தை தட்டி விட நடுகள வீரர் நாபி கெய்ட்டா அற்புதமாக கோலாக மாற்றினார். இதானல், க்ளோப் தலைமையிலான அணி 1-0 என முன்னிலை பெற்றது.
அதன்பிறகு, போர்டோ அணி தொடர்ந்து போராட முயற்சித்தும் லிவர்பூல் அணியை கட்டுப்படுத்த முடியவிலை. போர்டோ அணி வீரர்கள் அவ்வப்போது மஞ்சள் அட்டையை தவறு செய்து பெற்றுக்கொண்டிருந்தனர்.
தாக்குதலை தொடர்ந்து நடத்திய லிவர்பூல் அணிக்கு, 26வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் பிர்மின்ஹோ கோல் அடித்து அசத்தினார். நடுகளத்தில் இருந்து அலெக்ஸாண்டர் அர்னால்டு கொடுத்த பந்தை தடுப்பு வீரர்களை தாண்டி எடுத்து சென்று கோல் அடித்து 2-0 என முன்னிலை படுத்தினார் பிர்மின்ஹோ.
முதல் பாதியை லிவர்பூல் அணி 2-0 என முன்னிலையுடன் முடித்தது.
மந்தமான இரண்டாம் பாதி
லிவர்பூல் அணியின் முதல் பாதி தாக்குதலை திருப்பி கொடுக்க முயற்சித்த போர்டோ அணிக்கு மரேகா மூன்றாவது முறையாக கோல் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். குறிப்பாக லிவர்பூல் தடுப்பு வீரர்கள் நேர்த்தியாக செயல்பட்டார்களென்று தான் கூறவேண்டும்.
ஒவ்வொரு முறை போர்டோ வீரர்கள் கோல் அடிக்க முயன்ற போதும் லிவர்பூல் அணியின் தடுப்பு வீரர்களை தாண்டி அவர்களால் செல்ல இயலவில்லை.
லிவர்பூல் அணி இரண்டாம் பாதியில் நல்ல முன்னிலை வைத்து வெற்றி பெரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், முதல் பாதியில் ஆடியது போல அல்லாமல், மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதே நேரம், 67வது நிமிடத்தில் நான்காவது முறையாக போர்டோ வீரர் மரேகா கோல் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பிறகு, இரு அணியில் இருந்து வீரர்கள் மாற்று நடைபெற்றது. ஆனால் அதற்க்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை.
இரண்டாம் பாதி கோல் ஏதும் இல்லாமல் முதல் பாதியின் தொடர்ச்சியாக, 2-0 என்ற கணக்கில் காலிறுதி சுற்றின் முதல் பாதியில் முன்னிலை பெற்றது லிவர்பூல் அணி.
இரண்டாம் லெக் போட்டி, ஏப்ரல் 18ஆம் தேதி போர்டோ அணியின் சொந்த மைதானத்தில் நடைபெறுகிறது.