விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் 2018-19 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிச் சுற்று இரண்டாம் லெக் போட்டிகளை எட்டியுள்ளது. இரண்டாவது லெக் போட்டிகளில் முதலில் நடைபெற்ற நான்கு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜுவேண்டஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 3-2 என்ற கோல் கணக்கில் அஜாக்ஸ் அணியும், அடுத்தபோட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணியை 4-0 என வீழ்த்தி பார்சிலோனா அணியும் அரைஇறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெறும் போட்டியில் லிவர்பூல் மற்றும் போர்டோ, மான்செஸ்டர் சிட்டி மற்றும் டாட்டிங்ஹாம் என நான்கு அணிகள் மோதும் இரு போட்டிகள் நடைபெற இருக்கிறது.
இதில், முதல் லெக்கில் 1 - 0 என டாட்டிங்ஹாம் அணி மான்செஸ்டர் சிட்டி அணியிடம் முன்னிலை வகிக்கிறது. அதேபோல, 2 - 0 என லிவர்பூல் அணி போர்டோ அணியிடம் முன்னிலை வகிக்கிறது.
லிவர்பூல் மற்றும் போர்டோ அணிகள் போட்டியின் வெல்லப்போவது யார் எனும் சாத்திய கூறுகளை இங்கு காண்போம்.
லிவர்பூல் vs போர்டோ - முதல் லெக் ஒரு பார்வை
லிவர்பூல் மற்றும் போர்டோ அணிகள் மோதிய காலிறுதிச் சுற்றில் முதல் லெக் போட்டி லிவர்பூல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய லிவர்பூல் அணி 5வது நிமிடத்தில் அந்த அணியின் நபி கெய்ட்டா ஒரு கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 26 வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் பிர்மின்ஹோ ஒரு கோல் அடிக்க, முதல்பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்திய போர்டோ அணி லிவர்பூல் அணியின் தடுப்பாட்ட வீரர்களை தாண்டிச் செல்ல முடியாமல் இறுதியில் கோல் ஏதும் அடிக்க முடியாமல் முதல் லெக் போட்டியை இழந்தது.
போர்டோ vs லிவர்பூல் - இரண்டாவது லெக் கணிப்பு
போர்டோ அணி சொந்த மைதானத்தில் சிறப்பான நிலையில் இருந்தாலும், லிவர்பூல் அணி இருக்கும் பார்மிற்கு அதனை எதிர்கொள்வது மிக கண்டினமான ஒன்று. குறிப்பாக, லிவர்பூல் அணியின் முன்கள வீரர்கள் எளிதாக கோல் வாய்ப்புகளை உருவாக்கி அதனை கச்திதமாக செய்கின்றனர். இப்போட்டியில், லிவர்பூல் அணி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என கணிக்கப்படுகிறது.
சாத்தியமான அணி வீரர்கள்
போர்டோ அணி வீரர்கள்
கோல் கீப்பர் - கசாலிலாஸ்;
பின்கள வீரர்கள் - மிலிட்டோ, பெபே, பெலிப்பெ, சொல்யூஸ்;
நடுகள வீரர்கள் - கொரோனா, டானிலோ, ஹெர்ரெரா, ப்ராஹிமி;
முன்கள வீரர்கள் - டிவிகீன், மேரேகா
லிவர்பூல் அணி வீரர்கள்
கோல் கீப்பர் - அலிஸ்ஸான்;
பின்கள வீரர்கள் - அலெக்சாண்டர்-அர்னால்டு, வான் டிஜ்க், லோவன், ராபர்ட்சன்;
நடுகள வீரர்கள் - ஃபாபியோ, மில்னர், விஜ்னாடல்;
முன்கள வீரர்கள் - சலா, மானே, ஃபிர்மினோ