விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் 2018-19 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிச் சுற்று இரண்டாம் லெக் போட்டிகளை எட்டியுள்ளது. இரண்டாவது லெக் போட்டிகளில் முதலில் நடைபெற்ற நான்கு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜுவெண்டஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 3-2 என்ற கோல் கணக்கில் அஜாக்ஸ் அணியும், அடுத்தபோட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணியை 4-0 என வீழ்த்தி பார்சிலோனா அணியும் அரைஇறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெறும் போட்டியில் லிவர்பூல் மற்றும் போர்டோ, மான்செஸ்டர் சிட்டி மற்றும் டாட்டிங்ஹாம் என நான்கு அணிகள் மோதும் இரு போட்டிகள் நடைபெற இருக்கிறது.
இதில், முதல் லெக்கில் 1 - 0 என டாட்டிங்ஹாம் அணி மான்செஸ்டர் சிட்டி அணியிடம் முன்னிலை வகிக்கிறது. அதேபோல, 2 - 0 என லிவர்பூல் அணி போர்டோ அணியிடம் முன்னிலை வகிக்கிறது.
மான்செஸ்டர் சிட்டி மற்றும் டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் எனும் சாத்திய கூறுகளை இங்கு காண்போம்.
டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் vs மான்செஸ்டர் சிட்டி - முதல் லெக் ஒரு பார்வை
காலிறுதி சுற்றின் முதல் லெக் போட்டி டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் மைதானமான டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அதன் சொந்த மைதானத்தில் நல்ல கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளின் கோல் அடிக்கும் முயற்சியும் பலிக்காமல், 0-0 என்ற நிலையில் முடிந்தது.
இரண்டாவது பாதியில், டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. மான்செஸ்டர் சிட்டி அணி தடுப்பாட்டத்தில் மட்டுமே ஈடுபட முடிந்தது. ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் முன்கள வீரர் சோன் ஹியுங்-மின் சொல் அடித்து அசத்தினார். இதனால், டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 1 - 0 என முன்னிலை பெற்றது.
அதை தொடர்ந்து மான்செஸ்டர் சிட்டி அணி தொடந்து கோல் அடிக்க முயற்சித்தும் பலன் இல்லாமல் போனது, இதனால் முதல் லெக் போட்டியில் டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 1 - 0 என முன்னிலையில் நீடித்தது.
மான்செஸ்டர் சிட்டி vs டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் - இரண்டாவது லெக் கணிப்பு
காலிறுதி சுற்றின் இரண்டாவது லெக் போட்டி மான்செஸ்டர் சிட்டி அணியின் சொந்த மைதானமான சிட்டி ஆப் மான்செஸ்டர் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.
இரு அணிகளும் அணிகளும் ஆடிய கடைசி 5 போட்டிகளில் 3 போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டி அணி வென்றுள்ளது. ஒரு போட்டி சமனிலும் ஒரு போட்டி டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணியும் வென்றுள்ளது. சொந்த மண் சாதகமாக இருப்பதனால் மான்செஸ்டர் சிட்டி அணி வெல்லும் என கணிக்கப்படுகிறது.
சாத்தியமான அணி வீரர்கள்
மான்செஸ்டர் சிட்டி அணி வீரர்கள்
கோல் கீப்பர் - ஈடெர்சன்;
பின்கள வீரர்கள் - வாக்கர், ஸ்டோன்ஸ், லாபர்டே, டெல்ப்;
நடுகள வீரர்கள் - பெர்னாண்டினோ, சில்வா, பெர்னார்டோ;
முன்கள வீரர்கள் - ஸ்டெர்லிங், ஸேன், அகுரோ;
டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி வீரர்கள்
கோல் கீப்பர் - லோரிஸ்;
பின்கள வீரர்கள் - டிரிப்பீயர், ஆல்டர்வெர்ல்ட், வெர்டொன்ஹென், ரோஸ்;
நடுகள வீரர்கள் - சிசோகோ, விங்க்ஸ், எரிக்ஸன்;
முன்கள வீரர்கள் - டேலி அலி, ஹார்ரி கேன், சோன் ஹியுங்-மின்