சாம்பியன்ஸ் லீக்: அஜாக்ஸ் vs ஜுவென்டஸ்: ரொனால்டோ சூறாவளியை சமாளிக்குமா அஜாக்ஸ்? 

Enter caption
Enter caption

2018-19 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டி பல திருப்பங்களை கொண்டிருந்தது, அதில் அனைவரையும் அதிர்ச்சிக்கும் ஆச்சர்யத்திற்கும் உண்டாக்கிய ஒன்று, அஜாக்ஸ் அணி 4 - 1 என தொடர்ந்து 3 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றிருந்த ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது தான்.

ஜுவென்டஸ் அணியும் பலம் மிக்க அட்லெட்டிக்கோ மாட்ரிட் அணியை கடைசி நிமிடத்தில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. ஜுவென்டஸ் அணிக்கு கூடுதல் சிறப்பு என்னவென்றால், அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதுவரை சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 8 ஹாட்ரிக் அடித்து மெஸ்ஸியின் அதிக ஹாட்ரிக் அடித்தவர்களின் சாதனையை சமன் செய்தார்.

காலிறுதி - முதல் லெக்

ஜுவென்ட்ஸ் அணியின் தூண்கள்
ஜுவென்ட்ஸ் அணியின் தூண்கள்

ஜுவென்டஸ் மற்றும் அஜாக்ஸ் மோதும் முதல் லெக் காலிறுதி போட்டியில் ஜுஹன் க்ருய்ப் அரேனாவில் நடக்க இருக்கிறது. இப்போட்டி வியாழன் நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்க இருக்கிறது.

ரொனால்டோ காயத்தில் இருந்து மீண்டு வந்து முதல் 11ல் ஆடுவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

அணியின் கேப்டன் செல்லினி காலின் காயம் முழுமையாக குணமடையாததால், அவருக்கு பதிலாக ருகனி உள்ளே வர வாய்ப்புள்ளது.

சாத்தியமான அணி வீரர்கள்

Real Madrid v Ajax - UEFA Champions League Round of 16: Second Leg
Real Madrid v Ajax - UEFA Champions League Round of 16: Second Leg

அஜாக்ஸ் அணி வீரர்கள்

கோல் கீப்பர் - ஓனானா,

தடுப்பாட்ட வீரர்கள் -வால்ட்மேன், டி லிக்ட், ப்ளைண்ட், டாக்லிஃபிகோ;

நடுகள வீரர்கள் - ஸ்கோன், டி ஜொங், ஸியெக், வான் டி பீக், நீஸ்;

முன்கள வீரர்கள் - டாடிக்.

Juventus v AC Milan - Serie A
Juventus v AC Milan - Serie A

ஜுவென்டஸ் அணி வீரர்கள்

கோல் கீப்பர் - சேஸிஸினி

தடுப்பாட்ட வீரர்கள் - கேன்சிலோ, ருகானி, பொன்னுசி, சாண்ட்ரோ;

நடுகள வீரர்கள் - பென்டன்கூர், மாட்டுடி, பிஜினிக், பெர்னாரெடேசி;

முன்கள வீரர்கள் - மன்ட்ஸ்யுக், ரொனால்டோ.

நேருக்கு நேர்

ஐரோப்பா கோப்பையில், 1973 ஆம் ஆண்டு அஜாக்ஸ் அணி ஜுவென்டஸ் அணியை 1-0 என்ற கணக்கில் வென்றது.

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 9 முறை இரு அணிகளும் சந்தித்துள்ளன. இதில் 5 முறை ஜுவென்டஸ் அணி வென்றுள்ளது. மீதமுள்ள 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளதால், ஜுவென்டஸ் அணி அசாத்தியமான பலத்துடன் காட்சியளிக்கிறது. அணியில் ரொனால்டோ இணைந்துள்ளது கூடுதல் பலம்.

அணியின் கடைசி 5 போட்டிகள்

அஜாக்ஸ் அணி போட்டிகள்

வில்லம் II 1-4 அஜாக்ஸ் (6/04)

AZ ஆல்மாமா 1-0 அஜாக்ஸ் (17/03)

FC எம்மென்2-5 அஜாக்ஸ் (3/04)

அஜாக்ஸ் 3-1 PSV எய்ந்தோவன் (31/03)

அஜாக்ஸ் 2-1 வுள்ளே (13/03)

அஜாக்ஸ் அணி கடைசியாக ஆடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளை வென்றுள்ளது. சொந்த மைதானத்தில் ஆடிய கடைசி 6 போட்டிகளையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூவன்டஸ் அணி போட்டிகள்

ஜூவன்டஸ் 2-1 மிலன் (6/04)

காக்லியரி 0-2 ஜூவன்டஸ் (2/04)

ஜூவன்டஸ் 1-0 Empoli (30/03))

ஜெனோவா 2-0 ஜூவன்டஸ் (17/03)

ஜூவன்டஸ் 3-0 அட்லெடிகோ மேட்ரிட் (12/03)

கடைசியாக ஆடிய 5 போட்டிகளில் ஜுவென்டஸ் அணி 4 போட்டிகளை வென்றுள்ளது. ரொனால்டோ அதில் 2 போட்டிகளை காயம் காரணமாக ஆடவில்லை.

கணிப்பு

இந்த போட்டியில் சொந்த மைதானம் அஜாக்ஸ் அணிக்கு சாதகமாக இருந்தாலும், சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ரொனால்டோ அதிரடி எப்போதும் இருக்கும் என்பதால் ஜுவென்டஸ் வெல்லும் என கணிக்கப்படுகிறது.

App download animated image Get the free App now