ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளிலும் பனிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் கால்பந்து ரசிகர்களுக்கு இடையே பெரும் வரவேற்ப்பை பெற்ற போட்டியாகும் .
2018-19ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடர் தற்போது பரபரப்பான லீக் மற்றும் காலிறுதி சுற்றை கடந்து அரையிறுதிச் சுற்றினை எட்டியுள்ளது. காலிறுதிச் சுற்றில் அஜாக்ஸ் அணி பலம் மிக்க ஜூவண்டஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. அதேபோல டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. பார்சிலோனா அணி மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் காலடி பதித்தது. லிவர்பூல் அணி போர்டோ அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
தற்போது அரையிறுதிச் சுற்றில் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர், அஜாக்ஸ், பார்சிலோனா மற்றும் லிவர்பூல் ஆகிய நான்கு அணிகள் இடம்பெற்றுள்ளன.
அரையிறுதி சுற்று முதல் லெக் போட்டியில் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் மற்றும் அஜாக்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன. மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா மற்றும் லிவர்பூல் இரு அணிகளும் மோதுகின்றன.
இந்தக் கட்டுரையில் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் மற்றும் அஜாக்ஸ் இரு அணிகளை பற்றிய ஒரு முன்னோட்டத்தை காண்போம்.
காலிறுதிச் சுற்றில் ஒரு பார்வை
அஜாக்ஸ் அணி காலிறுதியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருக்கும் அணியான ஜூவெண்டஸ் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் கால் பதித்தது.
டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 4-4 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியிடம் சமன் செய்திருந்தாலும், வெளி மைதானத்தில் அடித்த கோல் அடிப்படையில் 3-0 என வென்று அரையிறுதிக்குள் கம்பீரமாக நுழைந்தது.
அரையிறுதிச் சுற்றில் முதல் லெக் ஒரு முன்னோட்டம்
அஜாக்ஸ் மற்றும் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதும் அரையிறுதி முதல் லெக் போட்டி, டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற உள்ளது.
டொட்டிங்ஹாம் அணி சொந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், இதுவரை ஆடிய போட்டிகளின் புள்ளி விவரங்கள் பார்க்கையில், கோல் அடித்த விகிதம் மிக குறைவாகவே உள்ளது. அதே நேரம் எதிரணியையும் கோல் அடிக்க விட்டதில்லை. இதனால் பெருவாரியான போட்டிகள் கோல் இல்லாமலும் அல்லது ஒரு கோலுடனும் முடிந்துள்ளது.
அஜாக்ஸ் அணி சொந்த மைதானத்தை விட எதிரணியின் மைதானத்திலேயே இதுவரை நிறைய கோல்கள் அடித்துள்ளனர் உதாரணமாக சுற்று 16 ரியல் மாட்ரிட் அணியின் மைதானத்தில் 4 கோல்கள் அடித்து அசத்தியது. அதேபோல் காலிறுதிச் சுற்றில் ஜூவெண்டஸ் அணியின் மைதானத்தில் 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
இதனால் இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை. இந்த அணை முன்னிலை பெறும் என்பதை இன்று நள்ளிரவு வரை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.
சாத்தியமான அணி வீரர்கள்
டொட்டின்ஹாம் ஹாட்ஸ்பர் அணி வீரர்கள்
கோல் கீப்பர் - லோரிஸ்,
பின்கள வீரர்கள் - சான்செஸ், ஆல்டர்வர்வீல்ட், வெர்டோங்கென்;
நடுகள வீரர்கள் - டிரிபியர், டயர், வன்னிமா, ரோஸ்;
முன்கள வீரர்கள் - எரிக்க்சென், அல்லி லூகாஸ் மோரா;
அஜாக்ஸ் அணி வீரர்கள்
கோல் கீப்பர் - ஓணானா,
பின்கள வீரர்கள் - வால்ட்மேன், டி லிக்ட், ப்ளைண்ட், டாக்லிஃபிகோ;
நடுகள வீரர்கள் - ஸ்கோன், வான் டி பீக், டி ஜோங்;
முன்கள வீரர்கள் - ஸீகேக், டாடிக், நீஸ்;