சாம்பியன்ஸ் லீக்: மெஸ்ஸி மாயாஜாலம்.. தெறிக்கவிட்ட பார்சிலோனா!! பணிந்தது லிவர்பூல்..

Barcelona v Liverpool - UEFA Champions League Semi Final: First Leg
Barcelona v Liverpool - UEFA Champions League Semi Final: First Leg

ஐரோப்பிய கால்பந்தாட்ட தொடரான சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் தற்போது காலிறுதி சுற்றுகள் முடிந்து அரையிறுதிச் சுற்றினை எட்டியுள்ளது. காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இரு பிரீமியர் லீக் அணிகளான டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் மற்றும் லிவர்பூல், ஸ்பெயின் நாட்டு லீக் போட்டியான லா லிகாவில் ஆடும் கிளப் அணியான பார்சிலோனா அணியும், டச்சு நாடுகளின் கால்பந்து அணிகளில் ஆம்ஸ்டர்டம் நாட்டை சேர்ந்த கிளப் அணியான அஜாக்ஸ் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன.

அரையிறுதிச் சுற்றில் முதல் போட்டியில் அஜாக்ஸ் மற்றும் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் இரு அணிகளும் மோதின. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் லெக் போட்டி டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது அஜாக்ஸ் அணி. இரண்டாவது லெக் போட்டி இந்த இரு அணிகளும் 9ஆம் நடைபெற இருக்கிறது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் பார்சிலோனா மற்றும் லிவர்பூல் அணிகள் மோதின. அதன் கண்ணோட்டத்தை நாம் இங்கு காண இருக்கிறோம்.

பார்சிலோனா vs லிவர்பூல் - அரையிறுதி முதல் லெக் கண்ணோட்டோம்

அரையிறுதி சுற்றின் முதல் லெக் போட்டி பார்சிலோனாவில் உள்ள கேம்ப் நௌ மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மைதானத்தின் பலத்துடன் களமிறங்கிய பார்சிலோனா அணியை எதிர்கொள்ள காத்திருந்தது லிவர்பூல் அணி. துவங்கிய நிமிடத்தில் இருந்தே லிவர்பூல் அணியின் மீது ஆதிக்கம் செலுத்தியது பார்சிலோனா. லிவர்பூல் அணியின் பெனால்டி பாக்ஸ் பகுதியிலேயே பெருவாரியான நேரம் ஆட்டம் காட்டிய பார்சிலோனா முன்கள வீரர்களை தடுக்க முடியாமல் தினறினர் லிவர்பூல் பின்கள வீரர்கள்.

ஆட்டத்தின் 26வது நிமிடத்த்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லூயிஸ் சுவரேஸ் ஜோர்டி ஆல்பா கொடுத்த பந்தை நேர்த்தியாக எடுத்து சென்று தனது முன்னாள் அணிக்கு எதிராக கோல் அடித்து அசத்தினார். முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது பார்சிலோனா.

Barcelona v Liverpool - UEFA Champions League Semi Final: First Leg
Barcelona v Liverpool - UEFA Champions League Semi Final: First Leg

இதற்கு பதிலடி கொடுக்க முயர்சிக்க இரண்டாம் பாதியில் களமிறங்கிய லிவர்பூல் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், கோலை சமன் செய்ய அந்த அணி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது.

ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் சுவரேஸ் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு திரும்பியது, அதை அப்படியே கோல் போஸ்டிற்குள் திருப்பி அடித்து கோல் ஆக்கினார் நட்சத்திர வீரர் மெஸ்ஸி. மீண்டும் 82வது நிமிடத்தில் ஒரு பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி லிவர்பூல் அணியின் தடுப்பு சுவர் மற்றும் கோல் கீப்பர் அலீஸான் இருவரையும் தாண்டி கோல் போஸ்டிற்குள் லாவகமாக அடிக்க, 3 - 0 என அரையிறுதியின் முதல் லெக் போட்டியில் முன்னிலை பெற்றது பார்சிலோனா.

Barcelona v Liverpool - UEFA Champions League Semi Final: First Leg
Barcelona v Liverpool - UEFA Champions League Semi Final: First Leg

இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது லெக் போட்டி வரும் 8ஆம் தேதி லிவர்பூல் அணியின் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Edited by Fambeat Tamil