A
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடக்கும் ஐரோப்பா லீக் போட்டிகள் தற்போது பரபரப்பான கால் இறுதிச்சுற்றுக்கு நகர்ந்திருக்கிறது இன்று நள்ளிரவு நடக்கும் போட்டியில் நான்கு 4 போட்டிகள் நடக்கின்றன. முதலில் ஆர்சனல் மற்றும் நாபொலி, ஸ்லாவியா ப்ரஹா மற்றும் செல்சி, பேன்பிகா மற்றும் எய்ண்ட்ரிச், வில்லாரியல் மற்றும் வலன்சியா என எட்டு அணிகள் மோதும் 4 போட்டிகள் நடக்க இருக்கிறது.
இந்த கட்டுரையில் நாம் ஆர்சனல் மட்டும் நாபொலி அணிகள் மோதும் போட்டியின் ஒரு முன்னோட்டத்தை காண இருக்கிறோம்.
இந்த போட்டி ஆர்சனல் அணியின் மைதானமான எமிரேட்ஸ் மைதானத்தில் இன்று நள்ளிரவு நடக்க இருக்கிறது.
பலம் வாய்ந்த ஆர்சனல் அணி சுற்று 16ல் ரென்னஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் 3-0 என வீழ்த்தியது. இறுதியாக, 4-3 என வென்று காலிருதிக்குள் நுழைந்தது.
நாபொலி அணியும் ரெட் புல் அணியை 4-3 என வீழ்த்திய பின்னரே காலிருதிக்குள் நுழைந்துள்ளது. ஆனால், சுற்று 16ன் இரண்டாவது லெக் போட்டியில் தோல்வியுடன் உள்ளே வந்துள்ளதால், தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.
நேருக்கு நேர்
போட்டிகள் - 2
ஆர்சனல் - 1
நாபொலி - 1
இரு அணிகளும் நேருக்கு நேர் இதுவரை இரண்டு போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று உள்ளனர். அதாவது அவர்களது சொந்த மைதானத்தில் ஆடிய போட்டியில் வெற்றி பெற்று உள்ளனர்.
சாத்தியமான அணி வீரர்கள்
ஆர்சனல் அணி வீரர்கள்
கோல் கீப்பர் - லினோ;
பின்கள வீரர்கள் - மாட்லேண்ட்-நைல்ஸ், முஸ்தாபி, கோசீல்னி, சோக்ரிடிஸ், கொலோசினிக்;
நடுகள வீரர்கள் - டொராரிரா, ராம்சே, குயெண்டூஜி;
முன்கள வீரர்கள் - ஒபமீயாங், லாசக்
நாபொலி அணி வீரர்கள்
கோல் கீப்பர் - மீரட்;
பின்கள வீரர்கள் - ஹிஸாஜ், குலிபலி, மக்ஸிமோவிச், கவுலம்;
நடுகள வீரர்கள் - கால்லிஜன், ஆலன், ரூயிஸ், ஸிலின்ஸ்ஸ்கி;
முன்கள வீரர்கள் - மெர்டென்ஸ், மிலிக்.
இதில் ஆர்சனல் அணிக்கு அவர்களது கேப்டன் கோசீல்னி காயத்தில் இருந்து மீண்டு வந்தது கூடுதல் பலம். அதேபோல் அணியில் சாகா இணைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சாகா முழு நேரம் ஆட இயலாது, அதனால், இரண்டாவது பாதியில் இணைந்து கலக்க வாய்ப்புள்ளது.
நாபொலி அணிக்கு அவர்களது நட்சத்திர வீரர் மெர்டேன்ஸ் சற்று தசை பிடிபில் அவதிப்பட்டு வந்தார். தற்போது குணமடைந்து உள்ளதால் அவரால் முழு நேர ஆட்டத்தையும் ஆட இயலும் என தெரிவிக்கப்படுகிறது.
இரு அணிகளின் சமீபத்திய நிலை
ஆர்சனல் அணி கடைசி 5 போட்டிகளில் 3 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது. எவெர்ட்டன் மற்றும் ரென்னஸ் அணிகளிடம் தோல்வியை தழுவியுள்ளது.
நாபொலி அணி கடைசி 5 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. தோல்வியில் ஒரு போட்டி ஐரோப்பா லீக் போட்டியில் என்பது குறிப்பிடத்தக்கது.
கணிப்பு
சொந்த மைதானம் மற்றும் சமீபத்திய நிலைகளை வைத்து பார்க்கையில், ஆர்சனல் அணி 3-1 என்ற கணக்கில் வெல்லும் என கணிக்கப்படுகிறது.