கோப்பா அமெரிக்கா 2019: அர்ஜெண்டினா அணி பற்றிய அலசல்

Argentina Team
Argentina Team

பல வருடங்களாக எந்த கோப்பையும் ஜெயிக்காவிட்டாலும் அர்ஜெண்டினா மீதான பாசம் மட்டும் ரசிகர்களுக்கு என்றும் குறையாது. ஒரு சில அணிகளுக்கே இதுபோன்ற பேர் கிடைக்கும். கால்பந்து புகழ்பெற தொடங்கியதிலிருந்தே பிரேசில் அணி ரசிகர்களும் அர்ஜெண்டினா அணி ரசிகர்களும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வார்கள். எல்லா வகையிலும் அர்ஜெண்டினாவை விட பிரேசில் வெற்றிகரமான அணி என்றாலும், அர்ஜெண்டினா ரசிகர் தங்கள் அணியை யாரிடமும் விட்டுக் கொடுப்பதில்லை.

2018 உலக கோப்பையில் தோல்வியுற்றதும் அணியை மறுகட்டுமானம் செய்ய தயாராகியது அர்ஜெண்டினா. முதல் வேலையாக புதிய பயிற்சியாளரை நியமித்தது. கோப்பா அமெரிக்காவில் அர்ஜெண்டினா விளையாடிய சமீபத்திய ஆட்டங்களை பார்த்தால் அவர்கள் ரசிகர்களுக்கு கூட கண்ணீர் வரும். கடந்த 5 தொடர்களில் நான்கு முறை இறுதிப் போட்டிக்கு வந்தும் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. அதுவும் மூன்று முறை பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியடைந்துள்ளனர்.

“எனினும், பழைய ரெக்கார்டை எல்லா தோண்டி எடுத்துப் பார்” என்பது போல் இந்தக் கோபையை 14 முறை வென்றுள்ளது அர்ஜெண்டினா. ஆனால் கடைசியாக எப்போது வென்றார்கள் தெரியுமா? 1993-ம் ஆண்டு. இந்த ஆண்டு கொலம்பியா, பராகுவே அணிகள் இடம்பெற்றுள்ள க்ரூபில் உள்ளது அர்ஜெண்டினா. 23 பேர் கொண்ட கோப்பா அமெரிக்கா தொடருக்கான அணியில் 2018 உலக கோப்பையில் பங்கேற்ற வெறும் 9 வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

The picture that everyone wants to see at the 2019 Copa America
The picture that everyone wants to see at the 2019 Copa America

முக்கிய வீரர்கள்:

லியோனல் மெஸ்ஸி

வழக்கம் போல் தனது உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளார் மெஸ்ஸி. பார்சிலோனா அணிக்காக இந்த சீசனில் 50 போட்டிகளில் 51 கோல்களை அடித்துள்ளார். ஆனால் ஒட்டுமொத்தமாக அவருக்கு ஏமாற்றமான சீசனே. சாம்பியன்ஸ் லீக்கில் தோல்வியடைந்ததோடு கோப்பா டெல் ரே இறுதிப் போட்டியிலும் தோல்வியை சந்தித்தது பார்சிலோனா.

எனினும் உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்றால் அது மெஸ்ஸி தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அர்ஜெண்டினா அணிக்காக தனது முதல் கோப்பையை பெற்று கொடுக்க முழு திறனையும் மெஸ்ஸி பயன்படுத்துவார் என நாம் எதிர்பார்க்கலாம்.

செர்ஜியோ ஆகுவேரா

மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடும் ஆகுவேரா இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வழங்கியுள்ளார். இந்த முறை ப்ரீமியர் லீக், FA கோப்பை, லீகு கோப்பை என மூண்று கோப்பைகளை வென்றுள்ளார். மெஸ்ஸியோடு இவர் நல்ல நட்பு கொண்டிருப்பதால், இவர்கள் இருவரும் பார்வார்டில் எதிரணியினருக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள். இவரது வேகமும், கோல்களை உருவாக்கும் திறமையும் அர்ஜெண்டினா கோப்பை வெல்வதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

ஜியோவனி லோ செல்சோ

மற்ற இருவரையும் போல், இவருக்கும் இந்த வருட சீசன் சிறப்பாக இருந்துள்ளது. ரியல் பெட்டிஸ் அணிக்காக 45 போட்டிகளில் விளையாடி 16 கோல்கள் அடித்துள்ளார். சிறந்த மிட் ஃபீல்டரான இவர், டிரிப்பிள் செய்வதில் வல்லவர். தேவை ஏற்பட்டால் தாக்குதல் ஆட்டத்திலும் ஈடுபடக் கூடியவர். தூரத்திலிருந்து பந்தை கச்சிதமாக பாஸ் செய்யும் திறன் படைத்தவர். இவரும் லியான்ட்ரோ பரடேஸும் மிட் ஃபீல்டில் அணிக்கு தூணாக விளங்குவார்கள்.

போட்டி அட்டவணை:

ஜூன் 15 – அர்ஜெண்டினா Vs கொலம்பியா

ஜூன் 19 – அர்ஜெண்டினா Vs பராகுவே

ஜூன் 23 – அர்ஜெண்டினா Vs கத்தார்

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications