கோப்பா அமெரிக்கா 2019: பிரேசில் அணி பற்றிய அலசல்

பிலிப் கவுண்டினோ
பிலிப் கவுண்டினோ

கோப்பா அமெரிக்காவை பொறுத்தவரை அதிக முறை கோப்பை வென்ற நாடுகள் என்ற பட்டியலை எடுத்துக் கொண்டால், உருகுவே, அர்ஜெண்டினா அணிகளுக்கு பிறகே பிரேசில் வரும். கடந்த காலங்களில் பல வெற்றிகளை குவித்திருந்தலும், சமீப காலமாக வெளியிலிருந்து பார்க்கும் போது பலமாக தெரியும் பிரேசில் அணி களத்தில் அதற்கு நேர் மாறாக விளையாடி வருகிறது.

2018 உலக கோப்பையில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறினாலும் சமீபத்தில் செக் ரிபப்ளிக் மற்றும் கத்தர் நாடுகளுடனான நட்புறவு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது பிரேசில். கத்தார் நாடுடனான போட்டியின் போது நட்சத்திர வீரர் நெய்மர் காயம் அடைந்தார். இதனால் கோப்பா அமெரிக்க தொடரிலிருந்து விலகிய நெய்மருக்கு மாற்று வீரராக இன்னும் யாரும் அறிவிக்கப்படவில்லை.

பொலிவியா, பெரு மற்றும் வெனிசுலா அணிகள் இடம்பெற்றுள்ள க்ரூப் ஏ-வில் உள்ளது பிரேசில். நட்சத்திர வீரர் நெய்மர் இல்லையென்றாலும் ஒன்பதாவது முறையாக கோப்பை வெலும் முயற்சியில் உள்ளது பிரேசில். மேலும், அணியின் கேப்டனாக அணுபவ வீரர் டேனி ஆல்வ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு கோப்பா அமெரிக்கா தொடர் இந்த முறை பிரேசில் நாட்டில் நடைபெறுவதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடுதல் அழுத்தத்தை பிரேசில் அணிக்கு கொடுத்துள்ளது.

ராபர்டோ ஃபிர்மினோ
ராபர்டோ ஃபிர்மினோ

முக்கிய வீரர்கள்:

டேனி ஆல்வ்ஸ்

புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள டேனி ஆல்வ்ஸ், பிரேசில் அணியின் தடுப்புச்சுவராக உள்ளார். தனது கிளப்பிற்காக வலது புற டிபென்ஸ் விங்கில் விளையாடும் ஆல்வ்ஸ், தனது சிறப்பான தாக்குதல் ஆட்டத்தால் அந்த அணிக்கு சொத்தாக கருதப்படுகிறார்.

மற்றொரு வீரரான ரிச்சர்லிசன் வலது புறம் விளையாடுவதால், அவரோடு இணைந்து ஆல்வ்ஸ் சில உத்திகளை கையாள்வார் என எதிர்பார்க்கலாம். இடது புறத்தில் பிலிப் லூயிஸ் மற்றும் அலெக்ஸ் சான்ட்ரோ ஆகியோர் இருந்தாலும், ஆல்வ்ஸ் போல் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்க மாட்டார்கள். அதனால் தான் பயிற்சியாளர் டைட்டீயின் துருப்புச் சீட்டாக இருக்கிறார் டேனி ஆல்வ்ஸ்.

பிலிப் கவுண்டினோ

காயத்தால் நெய்மர் அணியில் இல்லாத நிலையில், இடப்பக்க விங்கராக கவுண்டினோ விளையாடவுள்ளார். பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் கவுண்டினோ, இந்த வருட சீசனில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. ஆனாலும் அவரது திறமை மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

எதிரணி தடுப்பாட்ட வீரர்களை தாண்டி நீண்ட தூரத்திலிருந்தே இவரால் கோல் அடிக்க முடியும். சக வீரரான ராபர்டோ ஃபிர்மினோ-வுடன் இவருக்கு நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது. நம்பிக்கை தளராமல் விளையாடினால், தனி ஆளாக ஆட்டத்தை மாற்றுபவராக இருப்பார் கவுண்டினோ.

ராபர்டோ ஃபிர்மினோ

இந்த சீசனில் லிவார்பூல் அணியில் ஃபிர்மினோவின் பங்கு சற்று வித்தியாசமாக இருந்தது. பயிற்சியாளர் ஜர்கன் க்ளாப் இவரை தாக்குதல் தொடுக்கும் மிட் ஃபீல்டராக பயன்படுத்தினார். ஃபிர்மினோ-விற்கு பதிலாக உலக கோப்பையில் ஜீசஸை விளையாட வைத்தது தவறு தான் என பிரேசில் பயிற்சியாளர் டைட்டீ சமீபத்தில் ஒத்துக் கொண்டார்.

இந்த முறை கோப்பா அமெரிக்காவில் ஸ்ட்ரைக்காரக ஃபிர்மினோ விளையாடுவார் என தெரிகிறது. 2017/18 சீசனில் இந்த பொசிஷனில் தான் 27 கோல்களை அடித்துள்ளார். நிச்சியம் இந்த வருட கோப்பா அமெரிக்கா தொடரில் கோல் மழை பொழிய காத்துக் கொண்டிருக்கிறார் ஃபிர்மினோ.

பிரேசில் விளையாடும் போட்டி அட்டவணை:

ஜூன் 14 – பிரேசில் Vs பொலிவியா

ஜூன் 18 – பிரேசில் Vs வெனிசுலா

ஜூன் 22 – பிரேசில் Vs பெரு

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications