கோப்பா அமெரிக்கா 2019: கொலம்பியா அணி பற்றிய அலசல்

Copa America Logo
Copa America Logo

என்னடா இது கால்பந்து சீசன் முடிந்து விட்டதே என ஏங்கும் ரசிகர்களுக்கு, புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக விரைவில் கோப்பா அமெரிக்கா தொடர் தொடங்கவுள்ளது. இதில் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்தக் கட்டுரையில் கொலம்பியா அணியை பற்றி பார்க்கவுள்ளோம்.

கொலம்பியா அணியை விட பிரேசில் அல்லது உருகுவே அணிகள் தான் கோப்பா அமெரிக்க கோப்பை வெல்ல வாய்புள்ள அணிகளாக கருதப்படுகிறது. கார்லோஸ் குய்ரோஸ் பயிற்சியின் கீழ் கொலம்பியா பங்கேற்கும் முதல் பெரிய தொடர் இதுவே. கடந்த முறை கோப்பா அமெரிக்கா தொடரில் சிலி அணியிடம் அரையிறுதியில் தோல்வியுற்று மூன்றாம் இடம் பிடித்தது கொலம்பியா.

கொலம்பியா இடம் பெற்றிருக்கும் B க்ரூபில் தான் அர்ஜெண்டினா, பராகுவே, கத்தார் போன்ற பலமிக்க அணிகள் உள்ளன. இதனால் அடுத்த சுற்று செல்வதே கொலம்பியவிற்கு கடினமான காரியம். மேலும், கொலம்பியாவின் பல வீரர்களுக்கு இதுவே கடைசி தொடராக இருக்க கூடும்.

பயிற்சியாளராக குய்ரோஸ் நியமித்தப் பிறகு இரண்டு நட்புறவு போட்டிகளில் மட்டுமே கொலம்பியா விளையாடியுள்ளது. இதனால் சரியான அணியை தேர்வு செய்ய அவருக்கு கால அவகாசம் குறைவாகவே உள்ளது. கொலம்பிய அணி அடுத்த சுற்றாவது செல்லுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கொலம்பியா அணியில் முக்கியமான வீரர்கள்:

james rodriguez
james rodriguez

ஜேம்ஸ் ரோட்ரிகுஸ்

காயம் காரணமாக இந்த சீசனில் ஏமாற்றம் அளித்தாலும், அணியின் வெற்றிக்கு இவரையே பெரிதும் நம்பியுள்ளது கொலம்பியா. காயத்தால் சில போட்டிகள் விளையாடவில்லை என்றாலும், பண்டிஸ் லீகாவில் பேயர்ன் முனிச் அணிக்காக 28 போட்டிகள் விளையாடி ஏழு கோல்கள் அடித்துள்ளார். அதோடு ஆறு முறை கோல் அடிக்க உதவியும் புரிந்துள்ளார். தனியொருவராக ஆட்டத்தை மாற்றும் திறமை படைத்த ரோட்ரிகுஸ், இந்த முறை கொலம்பிய அணிக்கு கோப்பை பெற்று தருவார் என பயிற்சியாளர் கார்லோஸ் நம்புகிறார்.

துவான் ஜபாடா

அட்லாண்டா அணிக்காக விளையாடி வரும் துவான் ஜபாடா சிறந்த ஃபார்மில் உள்ளார். இவரது தாக்குதல் ஆட்டம் நிச்சியம் எதிரணிக்கு கிலியை உண்டாக்கும். இந்த சீசனில் சீரி ஏ லீக்கில் அட்லாண்டா அணிக்காக 37 போட்டிகளில் விளையாடி 23 கோல்களை அடித்துள்ளார்.

ரடாமெல் ஃபல்கோ

அல் மொனாக்கோ அணிக்காக விளையாடி வரும் ஃபல்கோ, இந்த முறை நிச்சியம் கோப்பா அமெரிக்கா கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார். கொலம்பிய அணிக்காக அதிக கோல்களை அடித்துள்ள ஃபல்கோ, 33 வயதாகியும் தனது தாக்குதல் ஆட்டத்தை விடாமல் உள்ளார். இவரும் துவானும் சேர்ந்து களத்தில் இருந்தால் அது நிச்சியம் கொலம்பிய அணிக்கு உத்வேகம் கொடுக்கும். இவர் களத்தில் இருப்பதே கொலம்பிய அணிக்கு பலத்தை கொடுக்கும். இதுவே இவரது கடைசி தொடராக இருக்கும் என்பதால் வெற்றியோடு ஓய்வு பெற விரும்புவார். மேலும், இவரது அணுபவமும் அணிக்கு உதவியாக இருக்கும்.

கொலம்பியா அணியின் போட்டி அட்டவணை:

ஜூன் 15 – கொலம்பியா Vs அர்ஜெண்டினா

ஜூன் 19 – கொலம்பியா Vs கத்தார்

ஜூன் 23 - கொலம்பியா Vs பராகுவே