வணக்கம்! கால்பந்து, உலகின் No1 விளையாட்டு போட்டியாகும் (ரசிகர்களின் அடிப்படையில்), சில நாடுகளின் பொருளாதாரம் கால்பந்தாட்டத்தை அடிப்படையாகக் கொண்டும் இருக்கிறது .கால்பந்து போட்டிகளில் முதன்மை பெற்ற தொடர் பிபா நடத்தும் உலக கோப்பை தொடராகும். இது கடந்த ஜூலை மாதம் நிறைவுற்றது, இதில் பிரான்ஸ் அணி கோப்பையைத் தட்டி சென்றது.
உலக கோப்பை முடிந்த உடன் கால்பந்தாட்ட ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்க பட்ட தொடர் சாம்பியன்ஸ் லீக் தொடராகும். சாம்பியன்ஸ் லீக் ஒவ்வொரு வருடமும் நடக்கும். இந்தத் தொடரானது கால்பந்து பிரசித்திப்பெற்ற நாடுகளில் உள்ள சிறந்த அணிகள் மோதும் தொடராகும். இத்தொடர் ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்த வருடம் மே மாதம் நிறைவுறும். ஒவ்வொரு நாட்டில் சென்ற வருடம் நடந்த உள்ளூர் லீக் -இ தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட அணி இந்த லீகு-க்கு தகுதி பெரும். ஐரோப்பா வில் விளையாடும் ஒவ்வொரு அணியும் உள்ளூர் லீக் போட்டிகளில் வெற்றி பெறாவிட்டாலும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நுழைவதை தனது முதன்மை நோக்கமாய் கொண்டுள்ளனர்.
சாம்பியன் லீக்:
தொடக்கத்தில் ஒவ்வொரு நாட்டின் சிறந்த அணிகள் வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கப் படும். இதன்பின்னர் லீக் சுற்றானது ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம்வரை நடைபெறும். இதில் முதல் இரு இடத்தைப் பிடிக்கும் அணி சுற்று 16-க்கு தகுதி பெரும் . மற்ற அணிகள் ஐரோப்பா வின் இரண்டாம் லெவல் லீக் ஆன ஐரோப்பா லீகு-க்கு சென்றுவிடும். ரவுண்டு 16 இல் வெற்றி பெரும் அணி காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெரும் . அதேபோல் இறுதி போட்டிவரை செல்லும்.
HOME - AWAY போட்டிமுறை:
சாம்பியன் லீக்-ஐ பொறுத்தவரை ஒவ்வொரு அணியும் இன்னொரு அணியை இருமுறை சந்திக்க வேண்டும். இது லீக் சுற்றில் ஆரம்பித்து அரை இறுதி வரை பொருந்தும், அதாவது ஒரு அணி இன்னொரு அணியைத் தனது HOME மைதானத்தில் எதிர்கொள்ள வேண்டும். அதேபோல் அதே அணியுடன் அந்த அணியின் ஹோம் மைதானத்திலும் போட்டி போட வேண்டும். ஆனால் இறுதி போட்டி மட்டும் பொதுவான ஒரு மைதானத்தில் நடைபெறும், இந்த மைதானம் லீக் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே அறிவிக்கப்படும்.
சென்ற வருடம் நடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இறுதி போட்டியில் ஸ்பெயின் ஐ சேர்ந்த நட்சத்திர அணி ரியல் மாட்ரிட் மற்றும் இங்கிலாந்து ஐ சேர்ந்த லிவர்பூல் அணியும் விளையாடின. இந்தப் போட்டி உக்ரைன் இல் உள்ள கியெவ் மாகாணத்தில் உள்ள ஒரு மைதானத்தில் நடந்தது. இதில் ரியல் மாட்ரிட் அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல்-ஐ வென்று 13 ஆவது முறையாகக் கோப்பையை தட்டி சென்றது.
2018 - 2019 போட்டிகள் சென்ற வருடத்தை காட்டிலும் இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் யார் கோப்பையை வெல்லப்போகின்றனர் என்பதை பொருந்திருந்தே பார்க்க வேண்டும். கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு கண் கவர் விருந்து காத்திருக்கின்றது.