இன்று இரவு நடைபெறவுள்ள ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் ஆர்செனல் மற்றும் செல்சீ அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளன. புதிய நிர்வாகத்தின் கீழ் தங்கள் முதல் சீசனை விளையாடியுள்ள இரண்டு அணிகளும் உறுதியற்ற ஆட்டத்தையே கொடுத்துள்ளன. எனினும், மவுரிசியோ சாரியின் பயிற்சியில் செல்சீ அணி ஏற்கனவே அடுத்த வருட சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சமீப வருடங்களில் ஆர்செனல் அணிக்கு எதிராக செல்சீ அணி பல சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், ஜோஸ் மவுரினோ அணியிலிருந்து வெளியேறிய பிறகு சிறிது தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது செல்சீ. மவுரினோ சென்ற பிறகு இரு அணிகளுக்கும் நடைபெற்ற 11 போட்டிகளில் வெறும் மூன்று போட்டிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது செல்சீ.
காண்டே என்ற புதிர்
உலகின் சிறந்த மிட்ஃபீல்டராக கருதப்படும் காண்டே, இந்தப் போட்டியில் விளையாடுவாரா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர், பயிற்சியில் வெறும் 25 நிமிடங்களே கலந்து கொண்டார். இதனால் காண்டே இறுதிப் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் வலுக்கிறது. போட்டியில் விளையாடாமல் வெளியில் இருந்து ரசிப்பதை வெறுக்கும் காண்டே, அணியில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
4-3-3 என்ற வடிவத்தையே எப்போதும் விரும்புவார் சாரி. அப்போதுதான், காண்டே விளையாடவில்லை என்றாலும், ராஸ் பார்க்லே அல்லது மடீயோ கோவாசிகோடு ஜோரின்ஹோ இணைந்து விளையாட முடியும். முன்களத்தில் ஈடன் ஹசார்டும், ஒலிவர் ஜிராடும் பர்த்துக் கொள்வார்கள்.
இந்தப் போட்டி தான் செல்சீ அணிக்காக ஹசார்ட் விளையாடப் போகும் கடைசி போட்டி என்பதால் நிச்சியம் கோப்பையோடு நிறைவு செய்ய விரும்புவார். காயத்தால் 2013-ம் ஆண்டு இறுதிப்போட்டியை நழுவ விட்ட ஹசார்ட், தற்போது தனது முழு திறனை வெளிப்படுத்துவார் என நம்பலாம்.
முதல் முறையாக யூரோ வெற்றியை ருசிக்க ஆவலாக உள்ளது ஆர்செனல்
சென்ற மாதம் வேலன்சியா அணியுடனான அரையிறுதிப் போட்டியில் ஆர்செனல் பயிற்சியாளர் எமரி கடைபிடித்த 3-4-1-2 என்பதையே பின்பற்றுவாரா அல்லது ஏதாவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துவாரா என்பதை இப்போதே கூற முடியாது. கிரானிட் ஜாகாவிற்குப் பதில் மெசூட் ஒசில் பெஞ்சில் உட்கார வேண்டும் மற்றும் 10-ம் இடத்தில் லூகஸ் டொரெரியா விளையாட வேண்டும். அப்போது தான் ப்யேரே எமிரிக் மற்றும் லக்காசேட்டால் சிறப்பாக தாக்குதலை தொடுக்க முடியும். இவர்கள் இருவரும் இதுவரை 50 கோல்களுக்கு மேல் அடித்துள்ளதோடு 21 முறை கோல் அடிக்கவும் உதவி புரிந்துள்ளனர்.
நடுகளத்தில் கோவாசிக்கிடம் சில பிரச்சனைகள் உள்ளது. அவர் இண்டர் மிலன் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கு விளையாடிய போது ஆட்டத்தை தன் கட்டுப்பாடில் வைத்திருப்பார். அதுபோன்ற விளையாட்டை தற்போது இவரிடம் காண முடியவில்லை. ஆர்செனல் வெற்றி பெறுவதற்கு இந்த நான்கு பேர்களே முக்கிய காரணமாக விளங்குவார்கள்.
யார் வெற்றி பெறுவார்கள்?
முன்பே கூறியது போல், இரு அணிகளுக்குமே இது முக்கியமான போட்டி. அடுத்த சீசனில் உயர் தரமான வீரர்களை ஈர்க்கவும் 2019/20 சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட விரும்பினால், நிச்சியம் இந்தப் போட்டியில் ஆர்செனல் வெற்றி பெற்றாக வேண்டும். எப்போதுமே ஆர்செனல் அணியின் பின்வரிசை மோசமாக இருந்திருப்பதை நாம் பார்த்து வந்துள்ளோம். செல்சீ அணியை இவர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் நிச்சியம் ஆர்செனல் வெற்றி பெறுவது கடினமே.
அவதனிப்பு: செல்சீ 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.