சாம்பியன்ஸ் லீக் கோப்பையை இதுவரை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்கள்

சாம்பியன்ஸ் லீக் கோப்பை
சாம்பியன்ஸ் லீக் கோப்பை

கால்பந்தை பொறுத்தவரை பெரும்பாலான வீரர்கள் கிளப் அணிகளுக்கே முன்னுரிமை கொடுத்து விளையாடுவார்கள். கிளப் அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் லீக் கோப்பை மிக பிரபலமானது. இதில் பங்குபெற்று விளையாடவேண்டும் என்பது அனைத்து கால்பந்து வீரர்களின் கனவென்றே சொல்லலாம். இதில் விளையாடவேண்டும் என்பதுனாலேயே சில வீரர்கள் அணிகள் மாறுவதும் உண்டு. உலகின் முன்னணி வீரர்களான மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, சேவி, ஸ்சோல்ஸ், லாஹ்ம், பெர்ட்ரண்ட் போன்ற வீரர்கள் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதுண்டு.

உலகின் பெரும்பாலான ஜாம்பவான்கள் இந்த கோப்பைக்காக தங்களது முழு திறமையையும் போட்டு விளையாடுவார்கள். அப்படி சில வீரர்கள் கோப்பைக்கான இறுதி ஆட்டம் வரை சென்று இழந்ததும் உண்டு. இதுவரை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்களை பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.

#5 ஃபேபியோ கேனவரோ

ஃபேபியோ கேனவரோ
ஃபேபியோ கேனவரோ

சாம்பியன்ஸ் லீகில் ஆடிய அணிகள்: இண்டர்நேஷனலே, ஜுவண்டிஸ், ரியல் மாட்ரிட் மற்றும் பர்மா

இத்தாலியின் முன்னாள் கேப்டனான ஃபேபியோ பல லீக் கோப்பைகள், பாலன் டோர் மற்றும் ஃபிபா உலகக்கோப்பை வாங்கியுள்ளார். இவ்வளவு சாதித்த இவர் ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. ஜுவண்டிஸ், ரியல் மாட்ரிட் போன்ற அணிகளுக்கு விளையாடியது மட்டுமில்லாமல், பர்மா போன்ற சிறிய அணிக்காகவும் ஒரு சீசன் விளையாடியுள்ளார். சாம்பியன்ஸ் லீகில் இவரது மிகச்சிறப்பான சீசனாக அமைந்தது இன்டெர்மிலன் அணிக்காக 2003ம் ஆண்டு. அரை இறுதியில் எஸி மிலன் அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியை சந்தித்ததால், தொடரிலிருந்து வெளியேறியது.

அதே போன்று சான் ஸீரோ அணிக்காக விளையாடிய சீசனில் அவே கோல் மூலம் கோப்பையை நெருங்கும் வாய்ப்பு பறிபோனது. அதன் பிறகு ஜுவண்டிஸ், ரியல் மாட்ரிட் போன்ற அணிகளுக்காக சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்றாலும் கோப்பை வெல்லும் அதிர்ஷ்டம் இவருக்கு அமைந்திடவில்லை.

#4 ரூட் வான் நிஸ்டெல்லோய்

ரூட் வான் நிஸ்டெல்லோய்
ரூட் வான் நிஸ்டெல்லோய்

சாம்பியன்ஸ் லீகில் ஆடிய அணிகள்: பிஎஸ்வி ஐந்தோவன், மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட்

சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் இவருக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. நிஸ்டெல்லோய் மொத்தம் 73 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்று 56 கோல்கள் அடித்துள்ளார். அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலில் 4வது இடம் வகிக்கிறார். அதே போல் கோப்பையே வெள்ளாமல் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் துரதிர்ஷ்டவசமாக முதல் இடம் வகிக்கிறார். 2 சீசனில் டாப் ஸ்கோரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதிலிருந்தே இவர் எவ்வளவு பெரிய ஜாம்பவான் என அறியலாம்.

3 அணிகளுக்காக சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் பங்கேற்றுள்ள நிஸ்டெல்லோய், இரண்டு அணிகளுக்காக அரை இறுதிவரை சென்று கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தார். ஃபேபியோ கேனவரோ போலவே இவரும் அவே கோல் மூலம் இறுதி ஆட்டம் செல்லும் வாய்ப்பை பறிகொடுத்தார். இந்த நிகழ்வு 2002ம் ஆண்டு பேயர் லெவெர்குசென் அணிக்கு எதிராக அரங்கேறியது.

# 3 கியான்லுய்கி பஃப்பான்

கியான்லகி பஃப்பான்
கியான்லகி பஃப்பான்

சாம்பியன்ஸ் லீகில் ஆடிய அணிகள்: பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன், ஜுவண்டிஸ் மற்றும் பர்மா

இவரை வெறுக்கும் கால்பந்து ரசிகர்கள் உலகிலேயே இல்லை என கூறலாம். பஃப்பான் மொத்தம் 11 முறை சீரி ஏ கோப்பையை வென்றுள்ளார். 2006ம் நடைபெற்ற உலகக்கோப்பையையும் வென்றுள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது என சொல்லலாம். கடந்த சீசனுடன் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்று கோப்பை வென்றிடாத வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகினார். ஃபேபியோ கேனவரோவுடன் ஒரே சீசனில் பர்மா அணிக்காக களமிறங்கியுள்ளார்.

இதுவரை 3 முறை இருந்து போட்டி வரை சென்றுள்ள பஃப்பான், ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. இதுவும் வருந்தத்தக்க சாதனையாக கருதப்படுகிறது. இவற்றில் முதல் தோல்வி 2003ம் ஆண்டு ஏசி மிலன் அணிக்கு எதிராக அமைந்தது. பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு 2015ம் ஆண்டு இறுதி போட்டியில் பங்கேற்ற ஜுவண்டிஸ் அணி, பார்சிலோனா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. இவரது 3வது தோல்வி 2017ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரானதாகும்.

#2 ஸ்லாடன் இப்ராஹிமோவிச்

ஸ்லாடன் இப்ராஹிமோவிச்
ஸ்லாடன் இப்ராஹிமோவிச்

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஆடிய அணிகள்: அஜாக்ஸ், ஜுவன்டஸ், இண்டர் மிலன், பார்சிலோனா, ஏ.சி. மிலன், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட்

இப்ராஹிமோவிச், சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக அணிகளுக்காக பங்கேற்றுள்ள வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். 7 அணிகளுக்காக பங்கேற்றும் ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் கிளப்பை தவிர மற்ற அணிகளெல்லாம் இவர் விளையாடாதபோது கோப்பை வென்றுள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணியை தவிர மற்ற எல்லா அணிகளுக்காகவும் தனது கோலை பதிவு செய்துள்ளார். பஃப்பானுக்கு முன் அதிக போட்டிகளில் பங்கேற்று கோப்பை வென்றிடாத வீரர் என்ற பெருமையை தன் வசம் வைத்திருந்தார் இப்ராஹிமோவிச்.

மற்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிடுகையில் இவர் சிறப்பாக விளையாடியும் அணியின் மற்ற வீரர்கள் ஒத்துழைக்காத பட்சத்தில் கோப்பைகான கனவு தகர்ந்தது. இன்னொரு சோகமான சாதனையும் இவர் வசம் உள்ளது. என்னவென்றால் இப்ராஹிமோவிச் விளையாடிய இன்டர் மிலன் மற்றும் பார்சிலோனா அணிகள், இவர் வெளியேறிய அடுத்த வருடமே சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது.

#1 ரொனால்டோ

ரொனால்டோ
ரொனால்டோ

சாம்பியன்ஸ் லீகில் விளையாடிய அணிகள்: இண்டர்நேஷனல், ஏ.சி. மிலன் மற்றும் ரியல் மாட்ரிட்

இவருக்கு அறிமுகமே தேவையில்லை எனலாம். கால்பந்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம்வந்தவர், ரொனால்டோ. இவர் இந்த பட்டியலில் இடம் பிடிப்பது பல ரசிகர்களுக்கு ஏமாற்றமே. 2 முறை பாலன் டார், உலகக்கோப்பை மற்றும் லா லிகா கோப்பையை வென்றுள்ளார். சாம்பியன்ஸ் லீகை பொறுத்தவரை 40 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். களத்தில் மிகவும் சுறுசுப்பாக காணப்படும் இவர், பிரேசில் நாட்டிற்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க கூடியவர்.

ரொனால்டோவின் சிறப்பான சீசன் லாஸ் மெரெஞ்சஸ் அணிக்காக 2003ம் ஆண்டில் தான் அமைந்தது. அரை இறுதி ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது. 2007ம் ஆண்டு இவர் மிலன் அணிக்காக விளையாடிருந்தால் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம். ரியல் மாட்ரிட்காக விளையாடி வந்த இவரை ஜனவரி மதம் மிலன் அணி வாங்கியது. ஆனால் இவரால் அத்தொடர் முழுவதும் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், கோப்பை வெல்லும் வாய்ப்பு பறிபோனது.

App download animated image Get the free App now