2019 ஆம் ஆண்டு ஏசியன் கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. 1956 ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏசியன் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக ஜப்பான் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏசியன் கோப்பை போட்டியில் போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது.
இந்த ஆண்டு ஏசியன் கோப்பையில் மொத்தம் 24 ஆசிய நாடுகள் பங்கேற்கவுள்ளன. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2019 ஏசியன் கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு பெற்றது. ஜனவரி 6ஆம் தேதி துவங்கும் ஏசியன் கோப்பை கால்பந்து போட்டி தொடர் பிப்ரவரி 1ஆம் தேதி முடிவடையவுள்ளது. போட்டிகள் ஆறு நகரங்களில் உள்ள வெவ்வேறு மைதானங்களில் நடைபெறும்.
இந்திய அணி 2011 ஆம் ஆண்டு கடைசியாக ஏசியன் கோப்பையில் விளையாடியது. 2015 ஆண்டு ஏசியன் கோப்பை போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை. பின்பு எழுச்சிகண்டு தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் இந்திய அணி 2019 ஆம் ஆண்டு ஏசியன் கோப்பை போட்டிக்கு எளிதில் தகுதி பெற்றது. 1964 ஆம் ஆண்டு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதே ஏசியன் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணியின் சிறப்பான முடிவாகும்.
போட்டிகளில் பங்குபெறும் 24 அணிகள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ரவுண்டு ஆப் 16க்கு நேரடி தகுதிபெறும். மூன்றாம் இடம் பிடிக்கும் அணிகளில் புள்ளிகள் அடிப்படையில் நான்கு அணிகள் மட்டும் ரவுண்டு ஆப் 16 சுற்றுக்கு தகுதிபெறும். அதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதி, அரை இறுதி, மற்றும் இறுதி போட்டிகளில் விளையாடும்.
குரூப் விவரம்
குரூப் ஏ
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (நடத்தும் நாடு)
தாய்லாந்து
இந்தியா
பஹ்ரைன்
குரூப் பி
ஆஸ்திரேலியா (நடப்பு சாம்பியன்)
சிரியா
ஜோர்டான்
பாலஸ்தீன்
குரூப் சி
தென் கொரியா
சீனா
கிர்கிஸ்தான்
பபிலிப்பைன்ஸ்
குரூப் டி
ஈரான்
ஈராக்
வியட்நாம்
யேமன்
குரூப் ஈ
சௌதி அரேபியா
கத்தார்
லெபனான்
வட கொரியா
குரூப் எப்
ஜப்பான்
உஸ்பேகிஸ்தான்
ஓமன்
துர்க்மெனிஸ்தான்
FIFA தரவரிசையில் 97 ஆம் இடத்தில் உள்ள இந்திய அணி லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
இந்திய அணி விளையாடும் போட்டிகள் விவரம்
தாய்லாந்து அணிக்கு எதிராக ஜனவரி 6ஆம் தேதி இரவு 7 மணி
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக ஜனவரி 10ஆம் தேதி இரவு 9.30 மணி
பஹ்ரைன் அணிக்கு ஜனவரி 14ஆம் தேதி இரவு 9.30 மணி
23 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் விவரம்:
கோல் கீப்பர்கள்: குருப்ரீத் சிங் சந்து, விஷால் கைத், அமீர்ந்தர் சிங்
டிபெண்டெர்ஸ் : ப்ரிதம் கோடல்,சர்தக் கோலுயி ,சந்தேஷ் ஜிங்ஹான், அனாஸ் எடத்தோதிகா, சலாம் ரஞ்சன் சிங், சுபாஷ்ஷ் போஸ், நாராயண் தாஸ்
மிட் பீல்ட்ர்கள் : உதந்த சிங், ஜாக்கிசந்த் சிங், ஜேர்மன்பிரீத் சிங், ப்ரோனே ஹலேடர், அனிருத் தாபா, வினித் ராய், ரவுல்லின் போர்கஸ், ஆஷிக் குரூனியன், ஹாலிச்சரன் நர்சரி
பார்வார்ட்கள் : சுமேத் பாசி, பல்வந்த் சிங், சுனில் சேத்ரி(கேப்டன் ), ஜெஜே லல்பேகுளோவா.