2018இல் கால்பந்து: முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு 

சென்னையின் F.C
சென்னையின் F.C

ISL போட்டியை சென்னையின் FC அணி வென்றது. இறுதி போட்டியில் பெங்களூரு அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னை அணி

மான்செஸ்டர் சிட்டி
மான்செஸ்டர் சிட்டி

வெம்ப்லே மைதானத்தில் நடைபெற்ற லீக் கோப்பை போட்டியில் ஆர்சனல் அணியை 3-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது மான்செஸ்டர் சிட்டி.

இங்கிலாந்தில் நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரை வென்றது மான்செஸ்டர் சிட்டி அணி. பிரீமியர் லீக் தொடரில் 100 புள்ளிகள் எடுத்த முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது மான்செஸ்டர் சிட்டி

ஜுவென்ட்ஸ்
ஜுவென்ட்ஸ்

இத்தாலிய லீக் தொடரான சீரி ஆ தொடரை ஜுவென்ட்ஸ் அணி தொடர்ந்து ஏழாவது முறையாக வென்றது

பேயர்ன் முனிச்
பேயர்ன் முனிச்

ஜெர்மனியின் பன்டேஸ்லிகா தொடரை தொடர்ந்து ஆறாவது முறையாக வென்றது பேயர்ன் முனிச். அந்த அணியின் மேனேஜர் பதவியிலிருந்து ஜுப் ஹெய்ன்க்ஸ் வயது மூப்பு காரணமாக விலகினார். அவருக்கு பதில் நிகோ கோவக் அணியின் மேனேஜர் பதவியில் நியமிக்கப்பட்டார்

PSG
PSG

2016/17 ஆம் சீனில் மொனாக்கோ அணியிடம் பட்டத்தை இழந்த PSG அணி ஆம் 2017/18 சீனில் மீண்டும் பிரெஞ்சு லீக் 1 பட்டத்தை வென்றது.அந்த அணியின் புதிய பயிற்சியாளராக தாமஸ் டுசெல் நியமிக்கப்பட்டார் .

பார்சிலோனா
பார்சிலோனா

ஸ்பெயினின் லா லிகா படத்தை பார்சிலோனா அணி வென்றது.ஐரோப்பாவில் அதிக கோல் அடுத்தவருக்கு வழங்கப்படும் தங்க ஷூ வை அந்த அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றார்

ரியல் மாட்ரிட்
ரியல் மாட்ரிட்

UEFA சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றது ரியல் மாட்ரிட் அணி. இறுதி போட்டியில் அந்த அணி லிவர்பூல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.கோப்பையை வென்ற சில நாட்களில் அந்த அணியின் மேனேஜர் ஜினடின் ஜிடேன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

அட்லெடிகோ மாட்ரிட்
அட்லெடிகோ மாட்ரிட்

UEFA ஐரோப்பா லீக் கோப்பையை அட்லெடிகோ மாட்ரிட் அணி வென்றது. இறுதி போட்டியில் அந்த அணி 3-0 மார்ஸெ அணியை என்ற கணக்கில் வென்றது.

FA கோப்பை இறுதிப்போட்டியில் செல்சி மான்செஸ்டர் யுனைடெட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.இருந்தும் செல்சி அணியின் மேனேஜர் பதவியிலிருந்து அன்டோனியோ கொன்டே நீக்கப்பட்டார் அவருக்கு பதில் சாரியை செல்சி அணி நியமித்தது

அர்சன் வெங்கர்
அர்சன் வெங்கர்

22 ஆண்டுகள் ஆர்சனல் அணியின் மேனேஜராக இருந்த அர்சன் வெங்கர் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு மாற்றாக PSG அணியின் முன்னாள் மேனேஜர் உனை எம்ரி நியமிக்கப்பட்டார்

.பிரான்ஸ்
.பிரான்ஸ்

ஜூன் மாதம் 32 நாடுகள் பங்கேற்ற உலகக்கோப்பை போட்டி ரஷ்யாவில் நடைபெற்றது.பிரான்ஸ் அணி இறுதி போட்டியில் குரோசியா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.மூன்றாவது இடத்தை பெல்ஜியம் அணி வென்றது .உலக கோப்பை தங்க கால் பந்து விருதை குரோசியா வீரர் லூகா மெட்ரிக் வென்றார்.தங்க காலனி விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் வென்றார் .சிறந்த இளம் வீரரை விருதை பிரென்ச் வீரர் கிளியன் ம்பப்பெ வென்றார் .

UEFA சூப்பர் கோப்பை போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி ரியல் மாட்ரிட் அணியை என்ற 4-2 கோல் கணக்கில் வென்றது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ

ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்த அணியில் இருந்து விலகி ஜுவென்ட்ஸ் அணியில் இணைந்தார் .

ஐரோப்பாவின் சிறந்த வீரர் விருதை ரியல் மாட்ரிட் அணியின் லூகா மோடிர்க் வென்றார்.

அடா ஹெகெர்பேர்க் - லூகா மோடிர்க் - கிளியன் ம்பப்பெ
அடா ஹெகெர்பேர்க் - லூகா மோடிர்க் - கிளியன் ம்பப்பெ

உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கபடும் ballon d'or விருதை ரியல் மாட்ரிட் அணியின் லூகா மோடிர்க் வென்றார்.இதன் மூலம் கடந்த பத்து ஆண்டுகளாக மாறி மாறி ballon d'or விருதை வென்ற மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது அடா ஹெகெர்பேர்க் மகளிருக்கான முதல் விருதை வென்றார்

ஜோஸ் மௌரின்ஹோ
ஜோஸ் மௌரின்ஹோ

சிறப்பாக செயல்படாத காரணத்தினால் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேனேஜர் பொறுப்பில் இருந்து ஜோஸ் மௌரின்ஹோ நீக்கப்பட்டார். அவருக்கு பதில் ஓலே கன்னர் சொல்ஸ்ஜர் இந்த சீசன் இறுதி வரை தற்காலிக மானேஜராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கணக்கில் அல் -அய்ன் அணியை வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக கிளப் உலக கோப்பையை வென்றது

Edited by Fambeat Tamil