நடந்து முடிந்த கோப்பா அமேரிக்கா இறுதிப்போட்டியில் பெரு அணியை பிரேசில் 3-1 என கோல் போட்டு 9 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. 8ஆம் தேதி நடந்த போட்டியில் 8 முறை சாம்பியனான பலம் வாயந்த பிரேசிலோடு 1முறை வென்றுள்ள பெரு அணி மோதியது.
போட்டி ஆரம்பித்த 15 ஆவது நிமிடத்திலேயே எவர்டன் கோல் அடித்து, பிரேசில் அணியின் கோல் கணக்கை துவங்கினார். பிறகு இரு அணியும் கோல் அடிக்க போராடியது, 44 ஆவது நிமிடத்தில் பெரு அணியின் கொரிரோ கோல் அடித்து 1-1 என சமன் செய்தார், இந்த கோலினால் பெரு ரசிகர்கள் ரொம்ப மகிழ்ச்சியில் திளைத்தனர் . ஆனால் இந்த மகிழ்ச்சி கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை, 45 நிமிடத்திற்கு பின் கெடுக்கப்பட்ட கொஞ்ச நேரத்திலும் (45+3) பிரேசிலின் கேப்ரியல் ஜீஸஸ் கோல் அடித்து 2-1 என மறுபடியும் முன்னிலை பெற்றது

45 நிமிட இடைவேளை முடிந்து இரு அணிகளும் களம் இறங்கியது , கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் பெரு வீரர்கள் களம் இறங்கினர். பிறகு பெரு அணி கோல் அடிக்க போராடியது, கோல் கீப்பர் அருகில் வரை கொண்டு சென்ற பந்தை கோல் ஆக்க முடியவில்லை. 70 ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் கேப்ரியல் ஜீஸஸிற்க்கு நடுவர் ரெட் கார்ட் கொடுத்து போட்டியை தொடராதவாறு செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கெப்ரியல் ஜிஸஸ் கடும் கோபத்தோடு வெளியில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் , வாட்டர் கேன் முதலியவற்றை காலால் உதைத்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

பெரு அணி, இந்த வாய்ப்பில் எப்படியாவது கோல் போட்டே ஆக வேண்டும் என மூழு மூச்சுடன் விளையாடியது பெரு அணி, ஆனால் 90 ஆவது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்து இதை கனக் கச்சிதமாக பயன் படுத்தி ரிச்சலர்சன் கோல் அடித்து 3-1 என பிரேசிலின் வெற்றிக்கு வழிவகுக்க 3 ஆவது கோல்லை அடித்து அசத்தினார். பெரு அணியின் கோப்பையை வெல்லும் வாய்ப்பு கலைந்தது.

கடந்த 12 ஆண்டுகளாக பிரேசிலின் கோப்பையை வெல்லும் கணவு இந்த போட்டியில் ஜெயிப்பதன் மூலம் நிறைவேறியது. இந்த கோப்பையுடன் சேர்த்து பிரேசில் 9 வது கோப்பையை வென்றுள்ளது. பிரேசில் ரசிகர்களுக்கு இந்த 2019 கோப்பா அமேரிக்கா கோப்பையை வென்றதில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்னர். பெரு அணி ரசிகர்கள் மனதில் கவலை இருந்தாலும் இறதி போட்டி வரை வந்து பிரேசில் போன்ற பெரிய அணியை எதிர்க் கொண்டு போராடியதில் பெருமையே என்கின்றனர். வரும் காலங்களில் பெரு மிகப் பலமான அணியாய் உருவெடுக்கும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.