கதை என்ன?
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் முன்கள வீரர் டிமிடார் பெர்பாட்டோவ் கூறுகையில் ஜோஸ் மவுரினோவை , சாண்டியாகோ சோலாரி-க்கு பதிலாக ரியல் மாட்ரிட் அணியில் மாற்ற வேண்டும் என்று தான் நம்புவதாக கூறினார். அதுவே அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.
தொடர் தோல்வியால் அவதிப்படும் ரியல் மாட்ரிட்
சாம்பியன்ஸ் லீக், லா லிகா மற்றும் கோபா டெல் ரே ஆகிய மூன்று தொடர்களில் படுதோல்வியை சந்தித்தது ரியல் மாட்ரிட் அணி. ஆதலால், சாண்டியாகோ சொலாரியின் பதவிக்காலம் சாண்டியாகோ பெர்னாபூவில் (ரியல் மாட்ரிட் கால்பந்து மைதானத்தின் பெயர்) விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிடேன் இருக்கும் வரை ரியல் மாட்ரிட் அணி கோப்பைகளை குவித்து வந்தது. அவர் திடீரென தான் அணி மேனேஜர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து வெளியேறினார். அதன் பிறகு ஸ்பெயின் நாட்டின் முன்னாள் வீரர் ஜுலேன் லுபிட்டகோய் பொறுப்பேற்றார். அவர் சிறிது காலமே நீடித்தார். அதன் பிறகு அர்ஜென்டினா அணியின் முன்னாள் வீரர் மற்றும் ரியல் மாட்ரிட் பி அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்த சொலாரி கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார்.
அணி வெற்றிக்காக எவ்வித முயற்சிகளும் அவரால் சரிவர எடுக்க முடியவில்லை. எடுத்த ஓரிரு முயற்சிகளும் பலனின்றி போனது. கூடுதலாக, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணியை விட்டு சென்றது பெரும் அடியாக இருந்தது. தற்பொழுது, லாவகமாக கோல் ஆக்க கூடிய முன்கள வீரர்கள் இல்லாமல் அணி தவித்து வருவது கண்கூடாக தெரிகிறது.
தொடர்ந்து மூன்றுமுறை வென்ற அணி காலிறுதி சுற்றுக்கு நுழையாமல் போனது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆதலால், தற்போது சொலாரிக்கு மாற்று யாரேனும் வேண்டும் என கேள்வியும் எழுந்துள்ளது. இதற்க்கு சரியாக இருப்பது ஜிடேன் மற்றும் மவுரினோ, இவர்களுள் யாரேனும் ஒருவர் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மான்செஸ்டர் யுனைடெட்-இன் நட்சத்திர வீரரின் கருத்து
2013 ஆம் ஆண்டு மவுரினோ அதிர்ச்சியூட்டும் புறக்கணிப்பை கொடுத்தபோதிலும், அவர் ஒரு வெற்றியாளர், ரியல் மாட்ரிட் டிரஸ்ஸிங் அறைக்கு இப்போது அவரின் தேவை மட்டுமே உள்ளது என்று பெர்படோவ் கருத்து தெரிவித்தார்.
"என்னை பொறுத்தவரையில், சொலாரிக்கு மாற்றாக இருக்கப்போவது மவுரினோ மட்டுமே. அவரை மீண்டும் அணியுடன் பார்ப்பதே சிறந்ததாக இருக்கும்" என தான் நம்புவதாக முன்னாள் மான்செஸ்டர் வீரர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது "ரியல் மாட்ரிட்டில் ஏதாவது ஒரு தவறு இருக்க வாய்ப்புள்ளது, இன்னும் ஒரு சிறந்த அணியாக தான் அவர்கள் இருந்து வருகிறார்கள், ஆனால் எந்த காரணத்திற்காக அவர்களால் வெல்லமுடியவில்லை என அறிய சிறந்த மேனேஜர் அந்த அணிக்கு தேவை."
"சாம்பியன்ஸ் லீக் தொடரை தொடந்து மூன்று முறை வென்ற பிறகு, வெற்றிக்களிப்பில் அவர்கள் சோர்ந்தது போல தெரிகிறது, அவர்களை ஊக்கப்படுத்த சிறந்த தலைவர் தேவை"
"தற்பொழுது மான்செஸ்டர் யுனைடெட் மேனேஜர் பொறுப்பில் இருந்து சில காரணங்களுக்காக மவுரினோ வெளியேறிவிட்டார். அதிலிருந்து உடனடியாக அவர் மற்றொரு அணிக்காக பொறுபேற்க அவர் ஒப்புக்கொள்வாரா என்பது சந்தேகம் தான்.ஆனால், ரியல் மாட்ரிட் அணியின் வருங்காலத்திற்கு அவரின் பங்களிப்பு நிச்சயம் தேவை படுகிறது. குறிப்பாக, இந்த கடுமையான காலகட்டத்தில் அவர் தேவை என நான் நம்புகிறேன்" என பெர்படோவ் கருத்து தெரிவித்தார்.