கிங்ஸ் கோப்பைக்கான இந்திய கால்பந்து அணியின் வீரர்கள் விபரம்

Indian Football Team arriving Thailand Sunil Chhetri
Indian Football Team arriving Thailand Sunil Chhetri

கிங்ஸ் கோப்பையில் பங்கேற்பதற்காக திங்களன்று தாய்லாந்து சென்றடைந்துள்ளது இந்திய கால்பந்து அணி. இந்தியா தனது முதல் போட்டியில் பிஃபா ரேங்கில் 82-வது இடத்தில் உள்ள குராகுவை எதிர்கொள்கிறது. உள்நாட்டு கால்பந்து சீசன் முடிந்த பிறகு இந்த தொடர் தொடங்க உள்ளதால் கடுமையான சவாலை இந்திய அணி சந்திக்கும் என பயிற்சியாளர் ஸ்டீமேக் தெரிவித்துள்ளார்.

“இங்குள்ள வானிலை வித்தியாசமாக உள்ளது. இது ஆஃப் சீசன் வேறு. அதனால் கடினமான சூழ்நிலையில் நாம் உள்ளோம். அதே நேரத்தில் எல்லா அணிகளுக்கும் இதே சூழ்நிலை தான். வெற்றி பெறவே இங்கு வந்துள்ளோம். எங்களால் முடிந்த சிறப்பான ஆட்டத்தை போட்டியில் காண்பிப்போம்” என்கிறார் பயிற்சியாளர் ஸ்டீமேக்.

ஆசியாவின் பழமையான சர்வதேச தொடராக கிங்ஸ் கோப்பை கருதப்படுகிறது. 38 வருடங்கள் கழித்து இந்த தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. “கடந்த பத்து நாட்களாக டெல்லியில் கடுமையாக பயிற்சி மேற்கொண்ட வீரர்களை நான் பாராட்டுகிறேன். பயிற்சியில் தாங்கள் கற்று கொண்டதை போட்டியில் செயல் படுத்த வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்” என்றார் ஸ்டீமேக்.

இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு ஸ்டீமேக் கலந்து கொள்ளும் முதல் சர்வதேச தொடர் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவிற்காக அதிக போட்டிகளை விளையாடியவர் என்ற சாதனையை இந்த தொடரில் நிக்ழ்த்த உள்ளார் நட்சத்திர வீரர் சுனில் ஷேத்ரி.

பயிற்சியாளர் ஸ்டீமேக்கை வெகுவாக பாராட்டுகிறார் மிட்ஃபீல்டர் பிரனாய் ஹால்டெர். அவர் கூறுகையில், “நான் கூறுவதை நீங்கள் கவனித்தால், அதை களத்தில் செயல்படுத்தினால், நிச்சியம் பல உச்சங்களுக்கு நாம் செல்வோம் என அடிக்கடி எங்களிடம் கூறுவார் பயிற்சியாளர். அனைத்து வீரர்களும் இதை சரியான உணர்வோடு எடுத்துக் கொண்டோம் என்பது தான் இங்கு முக்கியமானது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “குராகுவா பலமிக்க அணி என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். அந்த அணியின் பல வீரர்கள் ஐரோப்பாவில் உள்ள பல கிளப்புகளில் விளையாடியுள்ளனர். இந்த அணிக்கு எதிராக நிச்சியம் எங்களை நிரூபித்தாக வேண்டும் என்ற உந்துசக்தியை இது எங்களுக்கு தந்துள்ளது. இந்தப் போட்டியில் 100% திறனை நாங்கள் முழுமையாக வெளிப்படுத்துவோம்” என்றார்.

Sunil Chhetri
Sunil Chhetri

கோல்கீப்பரை பொறுத்தவரை ஸ்டீமேக்கின் முதல் தேர்வு குர்ப்ரீத் சிங் சந்துவாக தான் இருக்கும். ஏனென்றால் பெங்களூரு அணி ஐஎஸ்எல் கோப்பையை வென்றதற்கு குர்ப்ரீத் சிங்கின் பங்களிப்பும் முக்கிய காரணம். அணியில் 11 மிட்ஃபீல்டர்கள் இடம் பெற்றுள்ளனர். சஹால் அப்துல் முக்கியமான பொசிஷனில் நிற்க வைக்கப்படுவார் என தெரிகிறது. வழக்கம் போல் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொள்வார் சுனில் ஷேத்ரி.

கிங்ஸ் கோப்பைக்கான இந்திய அணி:

கோல் கீப்பர்கள்:

குர்ப்ரீத் சிங் சந்து, அம்ரிந்தர் சிங், கமல்ஜித் சிங்

தடுப்பாட்ட வீரர்கள்:

ப்ரீதம் கோதல், ராகுல் பெகே, சந்தேஷ் ஜிங்காம், அடில் கான், சுபாசிஷ் போஸ்.

மிட் ஃபீல்டர்கள்:

உதாந்தா சிங், ஜாக்கிசந்த் சிங், பிரண்டன் ஃபெர்னாண்டஸ், அனிருத் தாபா, ரெய்னீர் ஃபெர்னான்ண்டஸ், பிரானாய் ஹால்டர், வினித் ராய், சாஹல் அப்துல், அமர்ஜித் சிங், லாலியன்சுலா சங்கேத், மைக்கேல் சூசைராஜ்.

முன்கள வீரர்கள்:

பல்வந்த் சிங், சுனில் ஷேத்ரி, பரூக் சவுத்ரி, மன்வீர் சிங்

தலைமை பயிற்சியாளர்:

இகோர் ஸ்டீமேக்

App download animated image Get the free App now