இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான இகோர் ஸ்டீமேக் மே 5 அன்று பொறுப்பேற்று 12 நாட்கள் ஆகிய நிலையில், 6 இந்திய வீரர்களை பயிற்ச்சி முகாமில் இருந்து வெளியேற்றி அதிரடி காட்டியுள்ளார் , வெளியேறிய வீரர்கள் சுமீட் பஸ்ஸி, விசால் கயித், ஜெர்மன் பிரீத் சிங், நந்த குமார், ரெடீம் டலங், பிக்ரமஜித் சிங் ஆகியோர் கடும் போட்டியால் வெளியேறி உள்ளனர். 31 பேர் கொண்ட அணியில் 23 வீரர்கள் மட்டுமே தாய்லாந்து செல்ல உள்ளதாக கூறியுள்ளார் ஸ்டீமேக். ஜன் 5 அன்று இந்திய அணி குரோக்குவா அணியை கிங்ஸ் கோப்பையின் முதல் போட்டியில் எதிர் கொள்ள உள்ளது.
இது பற்றி ஸ்டீமேக் கூறுகையில் :
"ஒவ்வொரு வீரரும் தனது சொந்த விளையாட்டை இத்தொடர்ல் காண்பிக்க வேண்டும். இதை வருங் காலங்களில் செயல்படுத்தி தங்களது உடல்திறம், தந்திரயோதயம், யுக்திகளை வெளிபடுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார். அதுமட்டுமன்றி இந்திய வீரர்களின் கடும் உழைப்பினை பார்க்கையில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறியுள்ள ஸ்டீமேக் , எப்படியும் கிங்ஸ் கோப்பைக்கு செல்ல உள்ள அந்த 23 பேர் யார் என்பதில் கடும் போட்டி நிலவும் என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டீமேக். இந்திய அணி வரப் போகும் கிங்ஸ் கோப்பையை எதிர்கொள்ள விழிப்புடன் உள்ளதாகவும், அணி தனது முதல் கட்ட பணிகளை முடித்துவிட்டதாக கூறியுள்ள ஸ்டீமேக், வீரர்களிடமும் அதிகாரிகளிடமும் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் தனது எதிர் பார்ப்புகளை அதில் தெரிவிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைப்படி அணியில் உள்ள வீரர்கள் :
கோல்கீப்பர்ஸ் : குருபிரித் சிங் சந்து, அமரீந்தர் சிங், கமலஜித் சிங்.
டிபன்டர்ஸ்: பிரித்தம் கோடல், நிதிஷ் குமார், ராகும் பெக்கே, சலாம் ரன்ஜன் சிங், சந்தேஷ் ஜிங்கான், ஆதில் கான், அன்வர் அலி, அபாஷிஸ் போஸ், நாராயண் தாஸ்.
மிட்பீல்டர்ஸ்: உடன்டா சிங், ஐக்கிசந் சிங், பிராண்டன் பெர்னாண்டஸ், தனபால் கணேஷ், பிரோய் கால்டர், ராவுலின் போர்ஜஸ், லின்ட் ராய், சாஹல் அப்துல், அமரஜித் சிங், லாலியன்சுலவா சங்கன்தே, கோமல் தட்டடல் , மைக்கில் சுசைராஜ்.
பார்வேட்ஸ்: பல்வந்த் சிங், சுனில் சேத்திரி, ஜோபி ஜஸ்டின், பரூக் சௌத்ரி, மன்வீர் சிங்.
கிங்ஸ் கோப்பையை பற்றி ஒரு பார்வை:
கிங்ஸ் கப் என்பது பிபா(fifa) வால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு 'அ' வரிசை போட்டி. 1968 லிருந்து நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன் இந்தியா 1977 மற்றும் 1981-ல் கிங்ஸ் கோப்பைகளில் பங்கு பெற்றுள்ளது. இந்த வருடம் முதல் போட்டியில் குவாரக்குவா மற்றும் இந்தியா மோதிக் கொள்ள உள்ளது. அதே நாளில் தாய்லாந்து அணி வியட்நாம் அணியை எதிர் கொள்கிறது. இந்த இரு போட்டியில் வெல்லும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் தோற்ற அணிகள் மூன்றாவது இடத்திற்கு போட்டியிடும்.
கூடுதல் விபரம்:
இந்தப் போட்டி இந்திய நேரப்படி 8 ஜுன் மாலை 6 மணி 15 நிமிடங்கள் நடக்க உள்ளது.